தினம் ஒரு கதை - 78
தினம் ஒரு கதை - 78
கல்யாண வரவேற்புக்கு அந்த இளைஞன் நல்ல உடை உடுத்தி நாகரிகமாக சென்றான். உள்ளே போனதும் காபி கொடுத்தார்கள். கையில் வாங்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
அங்கே பஞ்சு மிட்டாய் செய்து சிறுவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு பஞ்சு மிட்டாய் கொடுக்க மாட்டார்களா? எனக்கும் பிடிக்குமே’ என்று ஏக்கமாக பஞ்சு மிட்டாயைப் பார்த்துக்கொண்டே வேகமாக காபி குடித்தான். அவன் ஏக்கமாகப் பார்ப்பதை அறிந்து அவனுக்கும் ஒன்று நீட்டினார் பணியாள்.
இவன் வெட்கத்தோடு சாப்பிடும்போது, அங்கே பஃபே விருந்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. பஃபே விருந்தென்றால் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் தட்டை எடுத்துக்கொண்டு போய், அதில் உணவைப் போட்டுக் கொண்டுவந்து சாப்பிட வேண்டும்.
‘‘கூட்டம் வேற அதிகமாகுது. பஃபே சாப்பாடு குறைவாதான் இருக்கு. எப்படி சமாளிக்கப் போறோமோ?’’ என்று விருந்து ஏற்பாட்டாளர் பேசுவதைக் கேட்டு விட்டான். உடனே பதற்றமானான். வேக வேகமாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தான்.
அவன் வருவதற்குள் பஃபே தொடங்கி, கூட்டம் வரிசையில் காத்திருக்க ஆரம்பித்தது. இவன் சூப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘நான் போவதற்குள் சூப் தீர்ந்துவிடுமா’ என்று பதறினான்.
அவனுக்கு சூப் கிடைத்தது. ‘சிக்கன் ஃப்ரை இருக்கிறதா’ என்று பார்த்துக் கொண்டே சூப் குடித்தான். அங்கே சிக்கன் ஃப்ரை குறைவாக இருக்கிறது என்று காத்திருந்தார்கள். இவன் வேக வேகமாக சூப்பைக் குடித்துவிட்டு சிக்கன் ஃப்ரை அருகே நின்று கொண்டான். பணியாட்கள் கொண்டு வந்து கொட்டினார்கள். இவன் வேகமாகப் போய் தட்டு நிறைய அள்ளிப் போட்டுக் கொண்டான்.
அதை சாப்பிடும்போதே ‘மட்டன் பிரியாணி இருக்கிறதா’ என்று கண்காணித்துக் கொண்டே இருந்தான். வேகமாக சிக்கன் ஃப்ரையை தின்றுவிட்டு மட்டன் பிரியாணியை எடுத்துப் போட்டுக் கொண்டான். மட்டன் பிரியாணி சாப்பிடும்போது, மீன் குழம்பும் மீன் பொரியலும் கிடைக்குமா என்று கவலையுற்றான்.
மீன் குழம்பு ஊற்றி சாப்பிடும்போது, ‘ஃப்ரைட் ரைஸ் சாப்பிடாமல் விட்டுவிட்டோமே, அது கிடைக்குமா’ என்று எட்டி எட்டிப் பார்த்தான். அடுத்து ‘கேரட் அல்வாவும், குலோப் ஜாமூனும் இருக்குமா இருக்காதா’ என்ற பதற்றத்தில் தயிர் சாதத்தை மிக வேகமாக விழுங்கினான். இனிப்பு சாப்பிடும்போது ஐஸ் க்ரீமை எட்டிப் பார்த்தான். ஐஸ் க்ரீம் சாப்பிடும்போது, ‘பீடா தீராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்.
முடிவில், ‘பஃபே உணவின் அனைத்து ரகத்தையும் ஒன்று விடாமல் சாப்பிட்டு விட்டோம்’ என திருப்தி அடைந்தான். போரில் வென்ற வீரனைப் போல அவன் மனம் திருப்தியாக இருந்தது.
விடைபெற்றுக்கொண்டு வெளியே நடக்கும்போது, உறவினர் ஒருவர் தன் காரில் விடுவதாக சொன்னார். இவன் ஏறிக் கொண்டான்.
‘‘சாப்பாடு நல்லா இருந்ததுதானே தம்பி?’’
‘‘ஆமாங்க, நல்ல சாப்பாடு. நீங்க என்ன சாப்பிட்டீங்க?’’
‘‘நான் கொஞ்சம் சாதம் எடுத்துக்கிட்டேன் தம்பி. அதுக்கு பருப்பு போட்டுக்கிட்டேன். கொஞ்சமா நெத்திலி ஃப்ரை எடுத்துக்கிட்டேன். அப்புறம் கொஞ்சமா தயிர் சாதம்.’’
‘‘அவ்ளோதானா? அதான் அங்க நிறைய அயிட்டம் இருந்துச்சே. நீங்க ஏன் சாப்பிடலை?’’
‘‘அதை விடு தம்பி. இந்த பருப்பு என்னமா இருந்துச்சு தெரியுமா? நாக்கை சுழட்டி அடிச்சுது. அவ்ளோ ருசி. நெத்திலி ஃப்ரை வீட்ல செய்யற மாதிரியே இருந்துச்சு. பத்து நெத்திலி சாப்பிட்டேன்.’’
‘‘வெறும் பத்து நெத்திலிதான் சாப்பிட்டீங்களா? நெத்திலி ரொம்ப சின்ன மீன் ஆச்சே!’’
‘‘எனக்கு அது போதும்’’ என்றவர், அடுத்து தான் சாப்பிட்ட தயிர் சாதம் பற்றி பத்து நிமிடம் புகழ்ந்தார். அதற்கு வைத்திருந்த மிளகாய் கூட்டு பற்றி சிலாகித்தார். அதில் கலந்திருந்த திராட்சை மற்றும் மாதுளை முத்துகளை ரசித்து சொன்னார்.
அவன் குழப்பமாகக் கேட்டான். ‘‘அவ்வளவு ரக ரகமா உணவுகள் இருந்துச்சே. அதையெல்லாம் ஏன் சாப்பிடலை?’’
‘‘தம்பி! ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’னு கடவுளைப் புகழ்ந்து பாடுறாரு பாரதியார். அத்தனை கோடி இன்பம் உலகத்துல இருக்குதான். அதுக்காக எல்லாத்தையும் அனுபவிக்கிறேன்னு கிளம்பினா, எதையும் ரசிச்சு அனுபவிக்க முடியாம போயிடும். நிறைய சாப்பாடு சாப்பிடுறது முக்கியமில்ல. குறைவா சாப்பிட்டாலும் பதற்றமில்லாம, எப்படி ரசிச்சு சாப்பிடுறோம்ங்கிறதுதான் முக்கியம்’’ என்றவர், அவன் இறங்கும் இடத்தில் இறக்கி விட்டார்.
காரில் லிஃப்ட் கொடுத்ததற்கு அவருக்கு வார்த்தையால் நன்றி சொன்னான். மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தைப் புரிய வைத்ததற்கு மனதுக்குள் நன்றி சொல்லிவிட்டு, வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
Share