தினம் ஒரு கதை - 73

தினம் ஒரு கதை - 73

முழு ஆண்டு விடுமுறையில் அந்த சிறுமி ஒரு காரியம் செய்தாள். அவள் தெருவில் இருக்கும் 15 வீடுகளுக்கும் தினமும் ஒரு பேப்பர் கவர் கொடுத்தாள்.

அது அவளே செய்தித்தாளை மடித்து மாவு பசையில் ஒட்டிய கவர்கள். கவரை கொடுத்து ஒவ்வொரு வீட்டிலும் இதைச் சொன்னாள். ‘‘நீங்கள் வெட்டும் காய்கறி மற்றும் பழங்கள், பழத்தோல்கள் குப்பையை மட்டும் இதில் போட்டு வையுங்கள். தினமும் காலையில் வந்து நான் எடுத்துக் கொள்கிறேன்’’ என்றாள்.

அவள் அதைச் சொன்ன பணிவிலும் கனிவிலும் தெருவாசிகள் அதைச் செய்ய ஆரம்பித்தனர். சிறுமி தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு போய், 15 வீட்டு காய்கறிக் குப்பைகளையும் சேகரித்து பெரிய பையில் போட்டுக் கொண்டு சைக்கிளைத் தள்ளியபடி நடந்து போனாள்.

கொஞ்ச தூரத்தில் சில மாடுகள் குப்பைத் தொட்டியைக் கிண்டி மேய்ந்து கொண்டிருந்தன. காய்கறிக் குப்பையை எடுத்து அவற்றுக்கு வைத்தாள். மாடுகள் அதைத் தின்று திருப்தியுடன் சென்று விட்டன.

இதைப் பார்த்த அங்கிருந்த பெரியவர்கள் சிறுமியிடம் கேட்டார்கள். ‘‘நீ ஏன் இதையெல்லாம் செய்கிறாய்?’’

‘‘நாம் சாப்பிடும் உணவில் நடு நடுவே பிளாஸ்டிக் கவர்களை சின்ன சின்னதாக வெட்டிப் போட்டால் அது நமக்கு எவ்வளவு கெடுதலை ஏற்படுத்தும். அது போலத்தான் மாடுகளும் குப்பைகளைத் தின்னும்போது நாம் போடும் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்துத் தின்று விடுகின்றன.’’

‘‘அதற்காக காய்கறியைப் பிரித்து தனியே எடுத்து வந்தாயா?’’

‘‘ஆமாம். எங்கள் தெருவில் இருக்கும் 15 வீடுகளின் காய்கறிக் குப்பைகளை மட்டும் எடுத்து வந்தேன்.’’

‘‘இப்படி நீ செய்வதால் என்ன மாற்றம் வந்து விடும்? அனைவரும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று பிரித்துப் போடுவார்கள் என்று நினைக்கிறாயா? ஒரு பலனும் கிடைக்காதும்மா.’’

‘‘சார், ஆங்கிலத்தில் ‘பட்டாம்பூச்சி விளைவு’ என ஒரு தியரி சொல்வார்கள். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு கொடுக்கும் மாற்றம் கூட அடுத்தடுத்து வெவ்வேறு விஷயங்களை பாதித்து வெவ்வேறு மாற்றங்களுக்குக் காரணமாகும் என்பார்கள். சிறிய பட்டாம்பூச்சியின் சிறகசைப்புக்கே ஒரு விளைவு இருக்கிறதென்றால். நான் இப்படி செய்யும் செயலுக்கும் நல்ல விளைவு இருக்கும் என்றே நம்புகிறேன்’’ என்றாள்.

தினமும் அவள் செய்த செயலைப் பார்த்து, ‘சின்னப் பொண்ணே பொறுப்பா நடக்கும்போது நாமும் நடக்கணும்’ என்ற எண்ணத்தில் பெரியவர்களும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை பிரித்துப் போட்டனர். பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்துவதை நிறுத்தினர். ‘சொல்லைவிட செயல் சிறந்தது’ என்பதை அனுபவபூர்மாக உணர்த்திய சிறுமி, அனைவருடைய பாராட்டையும் பெற்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu