தினம் ஒரு கதை - 66
தினம் ஒரு கதை - 66
உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான நியூட்டனுக்கு இளம்பருவத்தில் ஒரு சிக்கல் வருகிறது.
1665ம் ஆண்டு, அதாவது அவருக்கு 22 வயதாக இருக்கும்போது லண்டன் நகரில் பிளேக் நோய் பரவுகிறது. அப்போதைய லண்டன் அசுத்தமான நகரமாக இருந்ததால், அங்கே காசநோயும் மலேரியாவும் சாதாரணமாக தொற்றும்.
ஆனால், பிளேக் வந்து கொத்து கொத்தாய் மக்களைக் கொன்று போட்டதும், நியூட்டனின் சொந்த பந்தங்கள் எல்லாம் கவலையடைந்தார்கள்.
தங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று, இளைஞரான நியூட்டனை மட்டுமாவது காப்பாற்ற நினைக்கிறார்கள். அவரை லண்டனிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் போய்த் தங்குமாறு வற்புறுத்துகிறார்கள்.
வேறு வழியில்லாமல் நியூட்டன் அங்கு போனார். அங்கே அவர் பெரிய வீட்டில் தங்கவில்லை. மரங்களின் நடுவே இருந்த சிறு ஓட்டு வீட்டை தன்னுடையதாக ஆக்கிக் கொண்டார். அதை சுத்தப்படுத்திக்கொண்டு அங்கேயே வாழ ஆரம்பித்தார்.
ஒருநாள் அந்த வீட்டில் தூங்கி எழும்போது, நியூட்டனின் முகத்தில் மரங்களின் வழியே கூரையைக் கிழித்துக்கொண்டு வந்த சூரிய ஒளிக்கீற்று பட்டது. அந்த ஒளிக்கீற்றையே நியூட்டன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்றிலிருந்து வெறுமே சூரிய ஒளிக்கீற்றை பார்த்து வியப்பதே அவர் பழக்கமாய் போயிற்று. ‘வியக்கும் இடத்தில்தான் ஆராய்ச்சியும் அறிவும் இருக்கும்’ என்பார்கள். அது போல சூரிய ஒளியின் மேலுள்ள ஆர்வம் அதிகமாகவே, நியூட்டன் ஒளியைப் பற்றி ஆராயலானார். யாருக்கும் தெரியாமல் நகரத்துக்குச் சென்று Prism என்ற கண்ணாடி முப்பட்டகங்களை வாங்கி வந்தார். அதில் சூரிய ஒளியை பாய்ச்சி ஆராய்ந்தார். வெள்ளை ஒளிக்குள் இருப்பது ஏழு விதமான வெவ்வேறு வண்ணங்களே என்பதைக் கண்டுபிடித்தார்.
விழித்திரையில் ஒளி எவ்வாறு படுகிறது என்பதை ஆராய்ந்தார். கண்ணை மூடி கையால் கண்ணை அழுத்திப் பார்த்தார். உள்ளே ஆரஞ்சு, மஞ்சள் என்று பல பல வண்ணங்கள் தெரிந்தன. இன்னும் அழுத்தினால் என்னவாகும் என்று பார்த்தார். அதில் அவருக்கு திருப்தி இல்லை.
ஒரு தட்டையான கரண்டி மாதிரியான உபகரணத்தை கண் மீது வைத்து ஆழமாக அழுத்தினார். வெளியாள் ஒருவர் நியூட்டன் செய்வதைப் பார்த்தால், ‘இவர் என்ன மனநிலை சரியில்லாதவரா’ என்று பயந்திருப்பார்.
ஆனால் நியூட்டன் வலியைப் பொருட்படுத்தாமல், ‘கண் போனால் போகட்டும்’ என்று அறிவியல் உண்மையை தெரிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டினார். தான் ஆராய்ந்தவற்றை எல்லாம் குறிப்பு புத்தகத்தில் எழுதிக் குவித்தார்.
லண்டனை விட்டு பிளேக் போவதற்கு ஒரு வருடம் ஆனது. அந்த ஒரு வருடமும் நியூட்டன் அந்த சிறு குடிசையில்தான் இருந்தார். ஒருநாளும் தனியே இருக்கிறோமே என்று புலம்பியது கிடையாது. மன அழுத்தம் கொண்டது கிடையாது. சலிப்புற்றது கிடையாது. ஒளியைப் பற்றியும் இயந்திரவியல் துறை பற்றியும் ஆராய்ந்தார்.
மீண்டும் லண்டனுக்கு வந்த பிறகு, ‘‘எப்படி அந்த கிராமத்தில் பொழுது போனது?’’ என உறவினர்கள் விசாரித்தார்கள்.
நியூட்டன் சிரித்தபடியே, ‘‘நான் இந்த ஒரு வருடத்தில் ஒளி பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுத குறிப்பு வைத்துள்ளேன். எனக்கு நேரம் போனதே தெரியவில்லை’’ என்றார். பிறகு புத்தகமும் எழுதினார். அதுதான் அறிவியல் உலகத்தையும், உலக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்த மிகச் சிறந்த புத்தகமான Opticks.
‘அறிவையும் கடமையையும் இறுகப் பிடித்துக் கொண்டவர்களுக்கு மன அழுத்தமே வராது’ என்று நியூட்டன் தன் வாழ்க்கையால் சொல்லி இருக்கிறார்.
Share