தினம் ஒரு கதை - 65
தினம் ஒரு கதை - 65
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேரி கியூரி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அவரின் உதவியாளர் வந்தார்.
‘‘உங்களுக்குத் தெரியுமா மேடம்? நம் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் எல்லையில் நடக்கும் போரில் அதிகம் காயம் அடைகிறார்களாம்!’’
‘‘அவர்களுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் யுத்த களத்திலேயே இருக்கிறார்களே?’’
‘‘இருக்கிறார்கள் மேடம். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்வதில் ஒரு சிக்கல் வருகிறதாம்!’’
‘‘என்ன சிக்கல்?’’
‘‘காயம்பட்ட வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க யுத்த களத்திலிருந்து அவர்களை நகரத்துக்கு அழைத்து வர வேண்டியுள்ளது. சிறு சிறு காயங்களுக்குக் கூட நகரத்துக்கு அழைத்து வர வேண்டியுள்ளது.’’
‘‘புரிகிறது. எக்ஸ்ரே மெஷினை யுத்தகளத்துக்குத் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் தானே?’’
‘‘ஆமாம் மேடம்!’’
‘‘நாம் ஏன் எக்ஸ்ரே மெஷினையே யுத்த களத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது?’’ என்று மேடம் கியூரி கேட்க, உதவியாளர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
‘‘அது சாத்தியமா மேடம்?’’
‘‘சாத்தியப்படுத்துவோம்’’ என்ற மேரி கியூரி ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி கொஞ்சம் உயரமான ட்ரக் வண்டிகள் இருந்தால் தன்னிடம் விற்குமாறு விளம்பரம் செய்தார். அதில் 20 ட்ரக் வண்டிகள் கிடைத்தன.
அந்த 20 வண்டிகளிலும் எக்ஸ்ரே மெஷின்களைத் தூக்கி உள்ளே வைத்தார். மெஷினை இயக்க ஜெனரேட்டர்களையும் உள்ளே வைத்தார்.
‘எக்ஸ்ரே மெஷின்களை எப்படி இயக்க வேண்டும்’ என்று பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தார். பெண்களே ட்ரக்கையும் இயக்கினார்கள். வழியில் திடீரென்று வண்டி ரிப்பேராகி நின்று விட்டால் என்ன செய்வது? அதனால் அனைத்து பெண்களும் மோட்டார் மெக்கானிசம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். அவரும் கற்றுக் கொண்டார்.
அதன்பின், நகரும் எக்ஸ்ரே மெஷின் ட்ரக்குகளுடன் போர்க்களத்தில் போய் நின்றார்கள் பெண்கள். இதைப் பார்த்த ராணுவ டாக்டர்களுக்கு நிம்மதி. காயமடையும் வீரர்களுக்கு உடனுக்குடன் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து அறுவை சிகிச்சை செய்தனர்.
இதனாலேயே பிரான்ஸ் அப்பகுதி தாக்குதலை எளிதாக முறியடித்து வெற்றி பெற்றது.
‘விஞ்ஞானியின் கடமை வெறுமே புதிதாய்க் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதை மக்களுக்கு பயன்படும் விதமாக மாற்றி அமைப்பதிலும் இருக்கிறது’ என்பதை உலகுக்குச் சொன்ன மேரி கியூரியை அனைவரும் பாராட்டினார்கள்.
Share