தினம் ஒரு கதை - 64
தினம் ஒரு கதை - 64
அம்மா இட்லி ஊற்றிக் கொண்டிருக்கும்போது ஏழு வயது மகள் வந்தாள். அம்மா மாவு ஊற்றுவதையே வேடிக்கை பார்த்துவிட்டுக் கேட்டாள்.
‘‘அம்மா, என்ன பண்றீங்க?’’
‘‘பார்த்தா தெரியலையா. இட்லி தட்டுல மாவு ஊத்துறேன்!’’
‘‘இட்லி எப்படி வேகும்?’’
‘‘இட்லியை இப்படி ஊத்தி, இந்த சட்டியில அல்லது குக்கர்ல நீரை ஊற்றி சூடாக்கினா இந்த நீராவி வந்து இட்லி மாவை வேக வைத்து இட்லி ஆக்கிடும்.’’
‘‘அம்மா, நான் ஊத்தவா?’’
‘‘சரி, சிந்தாம ஊத்து!’’
அவள் ஊற்றும்போது தட்டைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
‘‘அம்மா, இது என்ன? ஒவ்வொரு இட்லி தட்டிலும் குட்டி குட்டியா ஓட்டைகள் இருக்கு!’’
‘‘அதுவா? கீழ இருந்து மேலே போகுமில்லையா சூடான நீராவி. இட்லி தட்டை ஓட்டையில்லாம மேல மேல வைச்சா சரியா அந்த நீராவி போகாது. இட்லி சரியா வேகாது. அப்படி இல்லாம சீரா அழகா வேகறதுக்கு இப்படி ஓட்டை வச்சிருக்காங்க.’’
‘‘அப்ப ஒரு தட்டு இன்னொரு தட்டுக்கு மேல இருந்தாலும், நீராவி போக வழி விடணும். அப்படித்தானே அம்மா?’’
‘‘ஆமா. நீ கொஞ்சம் உயரமான பொண்ணா இருக்கே இல்லையா? மூணாவது பெஞ்ச்ல இருக்கிற தேவிக்கு போர்டு மறைச்சுதுன்னா, டீச்சர் உன்னை மூணாவது பெஞ்சுல உக்கார வைத்துட்டு, தேவியை உன் இடத்துல இரண்டாவது பெஞ்ச்ல உக்கார வைப்பாங்க. அதைத் தவறாக எடுத்துக் கொண்டு இரவெல்லாம் தூங்காமல் கவலைப்படக் கூடாது.’’
‘‘அம்மா உங்களுக்கு எப்படி இது தெரியும்?’’
‘‘உங்க கிளாஸ் மிஸ் எனக்கு போன் பண்ணாங்க. நீ க்ளாஸ்ல இடம் மாறி உக்கார மாட்டேன்னு அடம் பிடிச்சியாம். எந்த ஆசிரியரும் அப்படி தனிப்பட்ட முறையில் யார் மேலேயும் வஞ்சம் வைக்க மாட்டாங்க. இந்த இட்லி தட்டு ஓட்டை எப்படி ஓர் அறிவியல் பார்வையோ, அப்படி உன்னை பின்னால் உட்காரச் சொன்னதும் ஓர் அறிவியல் பார்வைதான்.’’
‘‘என்னை ஏன் இடம் மாத்தி வைச்சாங்கன்னு இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன்.’’
இட்லி வெந்ததும் அம்மா சூடாக தட்டில் மூன்று வைத்து, தேங்காய்ச் சட்னியும் காரச் சட்னியும் வைத்துக் கொடுத்தார். மகளுக்கு இட்லி கொடுக்கும்போதே, மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதையும் புரிய வைத்துவிட்டார்.
Share