தினம் ஒரு கதை – 6

தினம் ஒரு கதை – 6

ஒருவன் விலையுயர்ந்த காரில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கார் மீது ஒரு செங்கல் விழுந்தது. கோபத்துடன் சட்டென்று காரை நிறுத்திவிட்டு, செங்கல் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

          அங்கே ஒரு சிறுவன் தயங்கியபடி இவனைப் பார்த்தான். ‘‘சார்! தப்பா நினைச்சிக்காதீங்க. இவன் என் அண்ணன். நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இந்த நடைப்பாதை சறுக்கில் சக்கர நாற்காலி இறங்கும்போது அவன் நிலைதடுமாறி விழுந்துவிட்டான். என்னால் அவனைத் தூக்க முடியவில்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் யாரும் இங்கே இல்லை. கை நீட்டினால் யாரும் காரை நிறுத்தவில்லை. வேகமாகச் செல்லும் உங்கள் காரை நிறுத்த வழி தெரியவில்லை. அதனால்தான் செங்கல்லை வீசினேன்’’ என்று அழுதுகொண்டே சொன்னான்.

          காரை ஓட்டியவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அங்கே சென்று பார்த்தால் சக்கர நாற்காலியில் ஓர் இளைஞன் விழுந்து கிடந்தான். அவனைத் தூக்கிச் சக்கர நாற்காலியில் உட்கார வைக்க உதவி செய்தான்.

          அவர்கள் இருவரும் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.

          செங்கல் விழுந்து நசுங்கியிருந்த காரின் முன்பகுதியை அவன் சரி செய்யவே இல்லை. ஒருவர் செங்கல் வீசிக் கூப்பிடும் அளவுக்கு என்ன பரபரப்பு வாழ்க்கையில் தேவையிருக்கிறது என்பதை அவனுக்கு அடிக்கடி நினைவுபடுத்த அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu