தினம் ஒரு கதை - 51

தினம் ஒரு கதை - 51

ஓர் எறும்புத்தின்னி காட்டில் உலவிக் கொண்டிருந்தது. வழியில் ஒரு கரடியைப் பார்த்தது.

கரடி அந்த எறும்புத்தின்னியைப் பார்த்து, ‘‘எனக்கொரு உதவி செய்’’ என்றது.

‘‘என்ன?’’

‘‘என்னிடம் பெரிய கொட்டை ஒன்று இருக்கிறது. அதை உடைத்துத் தின்ன முடியவில்லை. உடைத்துத் தருவாயா?’’

‘‘சரி.’’

கரடி எறும்புத்தின்னியை தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றது. அது பெரிய கொட்டை அல்ல. அது ஆமை. கரடியைப் பார்த்து ஆமை தன் ஓட்டுக்குள் சுருக்கிக் கொண்டது. அதை கரடி ஏதோ பழக்கொட்டை என்று நினைத்து விட்டது.

அந்த ஆமை எறும்புத்தின்னியின் நண்பனும் கூட. இந்த முட்டாள் கரடியிடமிருந்து ஆமை நண்பனை விடுவிக்க எறும்புத்தின்னி திட்டம் போட்டது.

‘‘கரடி அண்ணே! ஒரு கொட்டையைப் பிளக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?’’

‘‘கல்லை வைத்து உடைக்க வேண்டும்.’’

‘‘அப்படிச் செய்தால் கொட்டையில் உள்ள பருப்பு வீணாகி உண்ண முடியாமல் போய் விடுமே கரடி அண்ணே!’’

‘‘ஆமாம். அப்படி என்றால் என்ன செய்யலாம்?’’

‘‘நீரில் ஊறப் போட்டால் கொட்டை ஊறி சாப்பிடத் தகுந்ததாக ஆகிவிடும் அல்லவா?’’

‘‘ஆமாம். நான் பட்டாணி விதைகளையும், காய்ந்த பலாக் கொட்டைகளையும் அப்படி சாப்பிட்டிருக்கிறேன்.’’

‘‘அது போல இந்தக் கொட்டையை ஏன் தூக்கி நீரில் போடக் கூடாது?’’

‘‘அவ்வளவு பெரிய பாத்திரம் என்னிடம் இல்லையே?’’

‘‘பாத்திரம் இல்லாவிட்டால் என்ன. நம் அருகே இருக்கும் குளத்தில் போடலாம் அல்லவா?’’

கரடி ஆமையைத் தூக்கி குளத்தில் போட்டது. ஆமை குளத்தில் மூழ்கி மறுபக்கம் வந்து தப்பித்து ஓடியது.

‘‘கொட்டை ஊறி மேலே மிதக்கும் கரடி அண்ணே. பெரிய கொட்டை அல்லவா? பல நாட்கள் ஆகும். பொறுமை வேண்டும்’’ என்று சொல்லி எறும்புத்தின்னி விடைபெற்றது.

கரடி இன்றும் அக்குளத்தருகே காத்திருக்கிறதாம்.

சமயோசித புத்தியால் எதையும் சாதிக்கலாம் என்று எறும்புத்தின்னி நமக்கு சொல்கிறதுதானே?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu