தினம் ஒரு கதை - 49

தினம் ஒரு கதை - 49

தினம் ஒரு கதை - 49

பள்ளி மாணவன் ஒருவன் தினமும் மதிய உணவு இடைவேளையில் அம்மா கொடுத்த உணவில் பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதி உணவைக் குப்பையில் கொட்டிவிடுவான்.

சக நண்பர்கள், ‘‘ஏன் இப்படி உணவை வீணாக்குகிறாய்? உன் அப்பா டிரைவராக வேலை பார்த்து சம்பாதிக்கும் காசு அல்லவா அது’’ என்று கேட்டார்கள்.

‘‘என் உணவுக்கான விலை அதை விளைவித்த விவசாயிக்குக் கிடைத்து விட்டது. அதன்பின் அதை நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? எனக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு பசிக்கும் என்று எப்படி அளக்க முடியும்’’ என்று திமிரோடு பதில் சொல்வான். நண்பர்கள் எதுவும் சொல்ல முடியாமல் ஒதுங்கி விடுவார்கள்.

அவன் தொடர்ந்து உணவை வீணாக்கிக் கொண்டே வந்தான்.

ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது அவன் வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. பல நாட்களாக அப்பாவிடம் சைக்கிள் கேட்டுக் கொண்டிருக்கிறான். அவன் ஆசையாக அதைப் பார்க்க, ‘‘இது என் முதலாளி கொடுத்தது’’ என்றார் அப்பா.

‘‘முதலாளி சும்மா கொடுத்தாரா?’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் அவன்.

‘‘இல்லை. அவர் வீட்டில் இருந்த பழைய பொருட்களை வந்த விலைக்கு விற்பதற்காக எடுத்துப் போட்டார். அதிலிருந்து இதை வாங்கி வந்தேன். இது நன்றாகத்தானே இருக்கிறது! முதலாளிக்கு இது பழைய இரும்பாகத் தெரியலாம். ஆனால், என் மகன் வெகுநாளாக ஆசையாகக் கேட்ட சைக்கிளாக இது எனக்குத் தெரிந்தது” என்றார்.

அப்போதுதான் அவனுக்கு அந்த உண்மை புரிந்தது. ‘தான் தினமும் வீணாகக் கொட்டும் உணவு தன்னைப் பொறுத்தவரை பணம் கொடுத்து வாங்கிய பொருள். ஆனால் ஓர் ஏழைக்கு அது பசியாற்றும் அமிர்தம்.’

‘ஒரு பொருளின் பண மதிப்பைத் தாண்டி அதன் பயன் மதிப்பே முக்கியம்’ என்று புரிந்து கொண்ட நாளிலிருந்து அவன் உணவை வீணாகக் கொட்டுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu