தினம் ஒரு கதை - 48

தினம் ஒரு கதை - 48

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்த நியூ மெக்சிகோ மாகாணத்தில் சில கிராமங்களை நோக்கி வெள்ளம் வந்து கொண்டிருந்தது.

அந்த இடத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் ஒரு டெலிபோன் எக்சேஞ்ச் இருந்தது. அங்கிருந்துதான் அந்த கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு கொடுப்பார்கள். வெள்ளம் முதலில் டெலிபோன் அலுவலகத்தைத்தான் தாக்கும் என்பதால் அனைத்து ஊழியர்களும் எச்சரிக்கையாக எழுந்து ஓடிப்போய்விட்டனர்.

ஆனால் புரூக்ஸ் என்ற பெண் மட்டும் அப்படி எழுந்து போகவில்லை. ‘வெள்ளம் வந்தால் வரட்டும், மக்களைக் காப்பதே முக்கியம்’ என்று தீர்மானித்து. கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து, வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை கொடுத்தார்.

அமெரிக்காவில் ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடையே நிறைய தூரம் இருக்கும் என்பதால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத்தான் செய்தியைச் சொல்ல வேண்டும். அப்படி அனைவரையும் புரூக்ஸ் எச்சரித்து முடிக்கும்போது, வெள்ளம் வந்து அவரை மூழ்கடித்துச் சென்றது.

புரூக்ஸின் எச்சரிக்கையால் அந்த கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிர் தப்பினார்கள். புரூக்ஸ் இறந்துவிட்டார். 

ஆனால் அவர் செய்த காரியத்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. மெலிந்த உடல்வாகு கொண்ட புரூக்ஸ், ‘பலம் என்பது உடல் பலம் மட்டுமல்ல. செயல் பலமே சிறந்தது’ என்பதை தன் தியாகத்தின் மூலம் நிரூபித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu