தினம் ஒரு கதை - 47

தினம் ஒரு கதை - 47

காட்டில் ஒரு வேடன் தன் மகனோடு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டு வந்தான்.

‘‘அப்பா, மனிதர்களிடமிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதேபோல வன விலங்குகளிடம் இருந்தும் நாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா?’’

‘‘ஆமாம் மகனே! இயற்கையில் இருக்கும் எல்லாமே நமக்கு ஆசான்கள். எல்லாவற்றிடம் இருந்தும் நாம் ஏராளமான பண்புகளைக் கற்றுக்கொள்ள முடியும்!’’

‘‘அப்பா, புலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா?’’

‘‘ஆம். புலியிடம் இருந்து வேகத்தைக் கற்றுக் கொள்ளலாம்.’’

‘‘அப்பா, காட்டுக்கே ராஜாவான சிங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?’’

‘‘சிங்கத்திடம் இருந்து கம்பீரத்தைக் கற்றுக் கொள்ளலாம்.’’

‘‘அப்பா, நரி என்ன சொல்லிக் கொடுக்கும்?’’

‘‘வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு வெறும் பலம் மட்டுமே போதாது. பல சந்தர்ப்பங்களில் தந்திரங்களும் செய்ய வேண்டும் என்பதை நரியின் வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்.’’

‘‘அப்பா, கழுதைப்புலி என்ன கற்றுக் கொடுக்கும்?’’

‘‘குழுவாக இணைந்து செயல்பட்டால் வெற்றி என்பதை கழுதைப்புலி சொல்லிக் கொடுக்கும்.’’

அப்போது ஒரு நத்தை வந்தது. வேடனின் மகன் அதை அலட்சியம் செய்தபடி நடந்து வந்தான்.

வேடன் கேட்டார். ‘‘மகனே! ஏன் நீ நத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை?’’

‘‘அப்பா அந்த சிறு சோம்பேறி நத்தையிடம் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?’’ என அவன் அலட்சியமாக சொன்னான்.

‘‘மகனே! அப்படிச் சொல்லாதே. நத்தையிடம்தான் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணம் இருக்கிறது. அது பொறுமை என்ற குணத்தை நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. பொறுமையும் நிதானமும் இல்லாத மனிதன் எதையுமே சாதிக்க முடியாது. தெரிந்து கொள்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu