தினம் ஒரு கதை - 41
தினம் ஒரு கதை - 41
‘‘அம்மா எனக்கு வீட்டுக்குள் அடைந்திருக்க பிடிக்கவில்லை’’ என்றாள் நிலா.
‘‘வா, நம் காரில் ஊர் சுற்றி விட்டு வருவோம்’’ என்றார் அம்மா.
அம்மாவும் மகளும் நகரத்தைத் தாண்டி கிராமத்தை நோக்கி நகர்ந்தார்கள்.
‘‘அம்மா, இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்’’ என்றாள் நிலா.
‘‘சரி’’ என்று இன்னும் கிராமப்பகுதிக்குள் காரை செலுத்தினார் அம்மா. சரியாக ஒரே ஒரு கார் மட்டுமே செல்ல முடிகிற பாதை. நடுவில் ஒரு கல் இருந்தது. கல்லை அகற்றினால்தான் கார் போக முடியும்.
‘‘அம்மா, நான் கல்லைத் தூக்கிப் போடுகிறேன்!’’
‘‘உன்னால முடியுமா நிலா?’’
‘‘முடியும் அம்மா.’’
‘‘சரி, முயற்சி செய்...’’
நிலா தூக்க முயற்சி செய்தாள். முடியவில்லை. நகர்த்த முயற்சி செய்தாள். முடியவில்லை.
‘‘என்னாச்சு நிலா?’’
‘‘அம்மா, என் வலிமை அனைத்தையும் செலுத்தி கல்லை நகர்த்த முயற்சி செய்தேன். முடியவில்லை!’’
‘‘அப்படியா? நிச்சயமாக உன் வலிமை அனைத்தையும் உபயோகப்படுத்தி விட்டாயா?’’
‘‘ஆமாம்.’’
‘‘அம்மா நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் உதவி கேட்டிருக்கலாமே. நானும் உன் ‘வலிமை’யில் ஒரு அங்கம்தானே?’’
‘‘புரியவில்லை.’’ நிலா விழித்தாள்.
‘‘வலிமை என்பது நம் உடல் வலிமை, நம்மால் முடிந்த விஷயம் மட்டுமல்ல. மற்றவர்களின் உதவியைக் கேட்டு அவர்கள் சக்தியை ஆக்கபூர்வமாக உபயோகப்படுத்துவதும் வலிமைதான். எல்லா விஷயங்களையும் தனியாகச் செய்துவிட முடியாது. கூட்டு முயற்சியைப் புரிந்துகொள்வதுதான் உண்மையான வலிமையாகும்’’ என்று அம்மா சொன்னார்.
அம்மாவும் நிலாவும் சேர்ந்து நகர்த்த, கல் நகர்ந்தது.
காரை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாகக் கிளம்பினார்கள்.
Share