தினம் ஒரு கதை – 4
தினம் ஒரு கதை – 4
அரசர் ஓவியப் போட்டி நடத்தினார். போட்டியின் தலைப்பு, ‘அமைதி’. எந்த ஓவியம் பார்ப்பவர் மனதில் அமைதியை ஏற்படுத்துகிறதோ அதுவே முதல் பரிசு பெறும் என்று அறிவித்தார். நாட்டின் பல ஓவியர்கள் கலந்துகொண்டு தங்கள் அறிவையும் திறமையையும் கலந்து வரைந்தார்கள்.
அமைதியான நதி, இயற்கை எழில் கொஞ்சும் காட்சி, நிம்மதியாகத் தூங்கும் குழந்தை... இப்படிப் பலரும் வரைந்த பலவிதமான ஓவியங்களை அரசர் பார்த்தார். முடிவில் ஓர் ஓவியத்துக்குப் பரிசை அறிவித்தார்.
பலருக்கும் அதைப் பார்த்து ஆச்சரியம். அது புயல் காற்று அடிக்க, மின்னல் வெட்ட, அடை மழை பெய்யும் பயங்கரக் காட்சியாக இருந்தது.
‘‘இதற்கு ஏன் பரிசு கொடுத்தீர்கள் அரசே?’’ என்று அமைச்சர் தயங்கித் தயங்கிக் கேட்டார்.
அரசர் நிதானமாகப் பதில் சொன்னார். ‘‘அமைச்சரே! இந்த ஓவியத்தில் காற்றும் மின்னலும் மழையுமாக இரைச்சல் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் கூர்ந்து பாருங்கள். அங்கே ஒரு காடு இருக்கிறது. காட்டில் ஒரு மரம் இருக்கிறது. அம்மரத்தில் ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாப்பாகத் தூங்க வைக்கிறது. அந்த குஞ்சுகளின் முகத்தில் இருக்கும் நிம்மதியைப் பாருங்கள். அமைதியான இடத்தில் மன நிம்மதி கிடைப்பதில் என்ன இருக்கிறது? அமைதியற்ற இப்படிப்பட்ட சூழலில் யாரையும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வைப்பதுதான் கடினமானது. இப்படிப்பட்டசூழலை உணர்த்தியதற்காகவே இந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கொடுத்தேன்.’’
Share