தினம் ஒரு கதை - 38
தினம் ஒரு கதை - 38
மலைப்பகுதியில் ஒருவன் நிறைய கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் பயிரிட்டான்.
கீழே சமதளத்தில் இருக்கும் மக்கள் அதை நல்ல விலைக்கு வாங்குவார்கள் என்று நினைத்து, ஒரு மாட்டு வண்டியில் அனைத்து காய்கறிகளையும் ஏற்றிக்கொண்டு கீழே வந்தான்.
வரும்போது சமதள நிலப்பரப்பு முதலில் கொஞ்ச தூரம் செழிப்பாக இருந்தது. போகப் போக பசுமை குறைவாக இருந்தது.
பசுமையே இல்லாத இடத்துக்கு காய்கறியைக் கொண்டு போனால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று கணக்கிட்டு, வண்டியை ஓட்டிக்கொண்டே இருந்தான்.
வழியில் சிறுவர்கள் சாப்பிட ஒன்றிரண்டு காய்கறிகள் கேட்டனர். இவன் முடியாதென்று கறாராகச் சொல்லிவிட்டான்.
சிறிது தூரம் போனதும் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், காய்கறி கேட்ட சிறுவர்கள் இரண்டு இளைஞர்களை அழைத்துக்கொண்டு வண்டியை நோக்கி ஓடி வந்தனர்.
‘ஐயோ, நம் காய்கறிகளைத் திருட வருகிறார்களே’ என்று வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான். அவர்களும் ஓடி வந்து ஒருவழியாக வண்டியைப் பிடித்து நிறுத்திவிட்டார்கள்.
‘‘இப்படி வண்டியை நிறுத்தித் திருடுவது முறையா?’’ என்று விவசாயி புலம்பினான்.
‘‘ஐயா, நாங்கள் திருட வரவில்லை. எங்கள் கிராமத்தில் உங்கள் மாட்டுக்கு நீரும் தீவனமும் வைக்கவில்லை என்றால், அடுத்த 12 மைல் தூரத்துக்கு எதுவுமே கிடைக்காது. ஊர் தெரியாத நீங்கள் அப்படி மாட்டிக் கொள்ளக் கூடாதே என்றுதான் நிறுத்தினோம்’’ என்றனர் அவர்கள்.
அதன்பின் விவசாயியை அழைத்துச் சென்று அருகில் உள்ள கிணற்றிலிருந்து மாட்டுக்குக் குடிக்க நீர் கொடுத்தார்கள். பசுமையான புல் கட்டு கொடுத்தனர்.
தன்னலமாக யோசிக்கும்போது பிறர் மீது சந்தேகமும் வெறுப்பும் பயமும் வந்து விடுகிறது. இனிமேல் தன்னலமாக யோசிப்பதை விட்டு பொதுநலமாக யோசிக்க வேண்டும் என்று விவசாயி நினைத்தான்.
இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுக்குக் காய்கறிகளை கொடுத்தான். அவர்களோ, ‘இலவசமாக வேண்டாம்’ என்று சொல்லி, நியாயமான விலைக்கு வாங்கிக் கொண்டனர்.
நல்ல கருத்துகளைக் கற்ற தெளிவோடு விவசாயி வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
Share