தினம் ஒரு கதை - 37

தினம் ஒரு கதை - 37

ஒரு மனிதன் சிறிய குதிரை உருவத்தில் ஒரு கேக்கை செய்து வைத்துவிட்டுத் தூங்கிவிட்டான்.

அவன் தூங்கும்போது, ஒரு புனித நட்சத்திரத்தின் ஒளியால் அந்த கேக் குதிரை உயிர்பெற்றது. இங்கும் அங்கும் தாவித் தாவி ஓடியது. தன்னை செய்த மனிதனிடம், ‘‘வா, என் மேல் ஏறிக்கொள். நான் உன்னை சுமக்கிறேன்’’ என்றது.

அதைப் பார்த்து அவன் சிரித்து, ‘‘உன்னால் முடியாது. நீ குதிரை அல்ல, கேக். உனக்கு சேனமும் லாடமும் இருந்தால் மட்டுமே ஓட முடியும்’’ என்றான். அந்தக் குதிரை ஒரு தச்சரிடம் கேட்க, ‘பணம் இல்லாமல் செய்ய முடியாது’ என அவர் மறுத்தார். கேக் குதிரை கோபத்துடன் நாட்டை விட்டு ஓடி, காட்டுக்குதிரைகளோடு சேர்ந்து கொண்டது.

ஆனால், காட்டுக்குதிரைகளின் வலிமையின் முன்னால் கேக் குதிரையால் நிற்க முடியவில்லை. சோகத்துடன் அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே எலி ஒன்று உடல் மெலிந்து சோகமாய் இருந்தது. கேக் குதிரை அதை விசாரிக்க, ‘என் கிராமத்தை விட்டு தொலை தூரம் வந்து இங்கே மாட்டிக் கொண்டேன்’ என எலி சொன்னது.

எலியின் பசியைப் பார்த்த கேக் குதிரை, ‘‘நீ கவலைப்படாதே. என்னைக் கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்’’ என்றது. எலியும் கொஞ்சூண்டு குதிரையின் வாலைத் தின்று பசி ஆறியது.

பின் எலியே அதனால் முடிந்த அளவுக்கு சேனமும் லாடமும் செய்து கொடுத்தது.

எலி குதிரையை ஓட்ட, எலியின் ஊருக்கே சென்று எலியும் கேக் குதிரையும் மகிழ்ச்சியாக இருந்தன.

பரஸ்பரம் மனமார உதவிக் கொள்வது எளியவர்களையும் வலியவர்களாக்கும் என்று சொல்லும் Terry Jones Fairy tale கதை இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu