தினம் ஒரு கதை - 36
தினம் ஒரு கதை - 36
காட்டில் நரி ஒன்று இருந்தது. அதுதான் அந்தக் காட்டில் பெரிய பணக்காரன். பல விலங்குகளுக்கு கடன் கொடுத்து உதவும் நல்ல குணமும் அதற்கு உண்டு.
அந்த நரியும், ஒரு கோழியும் பேருந்து நிலையத்தில் ஒருநாள் காத்திருந்தன. பொழுது போகவில்லை என்பதால், ஆப்பிள் காட்டு குரங்கைப் பற்றி நரியிடம் பேசியது கோழி.
‘‘நான் அந்தக் குரங்கு வீட்டருகே போனேன். அப்போது அது தன் குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டது’’ என்றது.
‘‘நீ கண்ணால் பார்த்தாயா’’ என்று நரி கேட்டது.
உண்மையில் கோழி எதையும் பார்க்கவில்லை. ஆனாலும், ‘‘பாயசம், முந்திரி லட்டு, தேன்மிட்டாய் அது இது என ஏகப்பட்ட விருந்து. நான் கண்ணால் பார்த்தேன்’’ என்றது.
பஸ் வந்ததும் இரண்டும் பிரிந்து சென்று விட்டன.
ஒரு மாதம் கழித்து ஆப்பிள் காட்டுக் குரங்கை கோழி பார்த்தது.
குரங்கு சோர்வாய் இருந்தது. கோழி விசாரிக்க, ‘‘நான் வியாபாரம் செய்து வருகிறேன் என்று உனக்குத் தெரியும். வியாபாரத்தில் சிறிது நஷ்டம். அதற்காக நரியிடம் கடன் கேட்டிருந்தேன். அது முதலில் தருவதாகச் சொன்னது. ஆனால் திடீரென்று, ‘நீ விருந்து சாப்பிட்டு வசதியாகத்தானே இருக்கிறாய். அப்புறம் ஏன் கடன் வாங்குகிறாய்’ என்று கேட்டு பணம் கொடுக்க மறுத்துவிட்டது.
அப்போதுதான் கோழிக்கு தன் தவறு புரிந்தது. ‘சும்மா பொழுது போகவில்லை என்று பேசிய புரளி இப்படி ஒருவர் வாழ்க்கையையே அழித்து விட்டதே’ என்று வருந்தியது. குரங்கிடம் மன்னிப்பு கேட்து.
நடந்த விஷயத்தை நரியாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்டது. அதன்பின் குரங்குக்கு நரி கடன் கொடுத்தது.
‘இனி எப்போதும் விளையாட்டுக்காகக்கூட புறம் பேச மாட்டேன்’ என்று உறுதியை எடுத்துக் கொண்டு கோழி கிளம்பியது.
Share