தினம் ஒரு கதை - 32
தினம் ஒரு கதை - 32
பெரிய பாம்பு ஒன்று காட்டில் கம்பீரமாக ஊர்ந்து வந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் பயந்து ஓடியது. காட்டுக்கு ராஜாவான சிங்கமே தன்னைக் கண்டு பயந்தது பற்றி பாம்புக்கு பெருமையாக இருந்தது.
மற்ற விலங்குகள் எல்லாம் பாம்புக்கு பயந்து ஓடின. பறவைகள் அலறியடித்துக் கொண்டு உயரமான மரத்தில் அமர்ந்து கொண்டன.
அதைப் பார்க்க பாம்புக்கு பெருமை தாளவில்லை.
ஒரு மரத்தடியில் நின்றது. அங்கே ஒரு பொந்து இருந்தது. பொந்தில் எட்டிப் பார்த்தது. உள்ளே சிறிய பாம்புகள் இருந்தன. பெரிய பாம்பு முறைக்க, சிறிய பாம்புகளும் பொந்தை விட்டு வேகமாக அகன்றன.
பெரிய பாம்பு பொந்தில் வசதியாகப் படுத்துக் கொண்டு, ‘‘என்னை யாராலும் அசைக்க முடியாது’’ என்று கூவியது.
அப்போதுதான் கவனித்தது, அது கூவியதைக் கண்டுகொள்ளாமல் எறும்பு ஒன்று உணவுப் பருக்கையை வாயில் வைத்தபடி தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போனது. இதைப் பார்த்து பெரிய பாம்புக்கு கோபம் வந்தது.
‘‘ஏய் எறும்பே, நில்!’’
எறும்பு கவனிக்காமல் மணல் புற்றினுள் ஓடியது.
‘‘சிங்கமே என்னைப் பார்த்து வணங்குகிறது. நீ சின்ன எறும்பு. என்னை மதிக்க மாட்டாயா? உன் கூட்டை என்ன செய்கிறேன் பார்’’ என்று சொன்னபடியே மணல் புற்றைக் கொத்தி உடைத்தது.
அவ்வளவுதான்... உள்ளே இருந்து ஆயிரக்கணக்கான எறும்புகள் வெளிப்பட்டு பாம்பின் மேல் விழுந்து கடிக்க ஆரம்பித்தன.
பெரிய பாம்பால் எதுவும் செய்ய முடியவில்லை. உடலை உதறிக்கொண்டு ஊர்ந்து நகர்ந்தது. எறும்புகள் விடவில்லை. படையெடுத்து பின்னால் ஓடிவந்தன.
பெரிய பாம்பு மர உச்சியில் ஏறி தப்பித்தது.
‘‘உடல் பலத்தால் புத்தி இழந்தேன். சிறியவர், பெரியவர் என்று யாராக இருந்தாலும் இப்படி அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு’’ என்றெல்லாம் புலம்பி ஆணவத்தைக் கைவிட்டு திருந்தியது.
Share