தினம் ஒரு கதை - 31
தினம் ஒரு கதை - 31
வீட்டில் தனியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, மருந்து பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டு விட்டாள். விழுந்த வேகத்தில் அதன் மூடி திறந்து, பாதி மருந்து வெளியே கொட்டிவிட்டது.
வேலைக்கு சென்ற அம்மா திரும்பி வந்து திட்டுவாரே என்று பயந்தாள். மருந்து பாட்டிலில் நீரை ஊற்றினாள். குலுக்கினாள்.
பாட்டில் நிறைந்திருப்பது போல ஏற்பாடு செய்து விட்டு அமைதியாக இருந்து கொண்டாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளின் குட்டித்தம்பிக்குக் காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குறைவதற்காக இவள் நீர்விட்டு கலக்கியிருந்த மருந்தில் ஒரு மூடி ஊற்றிக் கொடுத்தாள் அம்மா. அதைப் பார்த்த சிறுமிக்கு கஷ்டமாக இருந்தது.
‘‘மருந்து கொடுத்த பிறகும் காய்ச்சல் குறையவில்லையே’’ என்று அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டபோது இவளுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது.
காய்ச்சலில் சுருண்டிருக்கும் தம்பியைப் பார்த்து தவித்தாள். முடிவில் அம்மா அப்பாவிடம், தான் மருந்து பாட்டிலில் நீர் ஊற்றி வைத்ததைச் சொல்லிவிட்டாள்.
அப்பாவும் அம்மாவும் அவளை கடிந்து கொள்ளவில்லை. ‘‘சரி, போகட்டும். இனிமேல் இப்படிச் செய்யாதே’’ என்று சொல்லிவிட்டனர்.
அப்பா வேறு மருந்து பாட்டில் வாங்கி வந்து தம்பிக்கு ஊற்றி காய்ச்சலை போக்கினர்.
சிறுமி அழுதாள். அப்பா சமாதானப்படுத்தி, ‘‘நீ ஏன் உடனே உண்மையைச் சொல்லவில்லை’’ என்று கேட்டார்.
அதற்கு சிறுமி, ‘‘போன முறை நான் பேனாவை உடைத்தபோது நீங்கள் என்னைக் கடுமையாகத் திட்டி, ‘இனிமே இப்படி தப்பு பண்ணினா நடப்பதே வேறு’ என்று எச்சரித்தீர்கள். அதனால் பயந்துவிட்டேன்’’ என்றாள்.
‘‘தப்பு என்மீதும் இருக்கிறது. நான் அப்படி திட்டியிருக்கக் கூடாது. கடுமையாக நடந்திருக்கக் கூடாது.
நான் அப்படி நடந்து கொண்டதால்தான் நீ பயந்து இப்படி தவறை மறைத்தாய்’’ என்று மகளிடம் மன்னிப்பு கேட்டார்.
‘ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறைச் செய்வது பிரச்னையை இன்னும் சிக்கல் ஆக்கும்’ என்ற உண்மையை அந்த சிறுமியும், ‘சிறிய விஷயங்களுக்கு எல்லாம் குழந்தைகளை திட்டி மிரட்டக் கூடாது’ என்ற உண்மையை அப்பாவும் தெரிந்து கொண்டனர்.
Share