தினம் ஒரு கதை – 3
தினம் ஒரு கதை – 3
ஒரு வர்மக்கலை வல்லுநரிடம் வர்மம் கற்றுக்கொள்ள ஒருவன் விரும்பினான். மிக வேகமாக அக்கலையைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான்.
‘‘ஐயா, இக்கலையைக் கற்றுக்கொள்ள முழுமையாக எத்தனை வருடங்கள் ஆகும்?”
“பத்து வருடங்கள் ஆகும்”
‘‘நான் வார இறுதியில் ஓய்வு எதுவும் எடுக்காமல் பயிற்சி செய்து கற்றுக்கொண்டால் எவ்வளவு காலம் ஆகும்?”
“இருபது வருடங்கள்.”
‘‘உணவு உண்ணும் நேரத்தைத் தவிர அனைத்து நேரத்திலும் உழைத்துக் கற்றால்?”
‘‘அப்போது முப்பது வருடங்கள் ஆகும்”
“ஐயா, நான் உழைப்பை அதிகரிக்க அதிகரிக்கக் கற்கும் நாளை பத்து பத்து வருடங்கள் அதிகரித்துக்கொண்டு செல்கிறீர்களே?”
‘‘இக்கலையைக் கற்க இரண்டு கண்கள் தேவை. உன்னுடைய ஒரு கண் ‘எப்படி சீக்கிரம் கற்றுக்கொள்வது’ என்பதிலேயே கவனமாக இருப்பதால், மீதம் இருக்கும் ஒரு கண்ணை வைத்து கலையின் முறைகளைக் கற்க நேரமாகத்தானே செய்யும்’’ என்றார் ஆசான்.
எதையும் கற்கும்போது ‘எவ்வளவு சீக்கிரம் முடிப்போம்’ என்ற எண்ணம் இருக்கக்கூடாது. அதை ஒழுங்காக முறைப்படி எப்படிக் கற்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும் என்ற படிப்பினையைப் பெற்று ஆசானை அவன் வணங்கினான்.
Share