தினம் ஒரு கதை - 27
தினம் ஒரு கதை - 27
ஒரு நாட்டில் முரட்டுத்தனமான ராஜா ஒருவர் இருந்தார்.
அவர் கட்டளையிட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்.
அந்நாட்டின் சிறந்த கட்டடக் கலைஞரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. மூன்று நாட்களில் வானில் பறக்கும் அரண்மனை ஒன்று கட்டித்தர வேண்டும். எவ்வளவு வேலையாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்றார்.
கட்டிட கலைஞர், ராணி, மந்திரி என்று யார் சொன்னாலும் ராஜா கேட்பதாயில்லை. “மூன்று நாட்களுக்குள் கட்டித்தரவில்லை என்றால் உம் உயிரை எடுத்து விடுவேன்” என்றார்.
வேறு வழியில்லாமால் கட்டடக் கலைஞர் “பறக்கும் அரண்மனை” கட்டித்தருவதாக ஒத்துக் கொள்கிறார்.
மிகப்பெரிய பட்டம் ஒன்றை செய்து காற்றடிக்கும் திசையில் உயரமாக பறக்க விட்டார்.
அதன் கயிற்றை தூரத்தில் ஒரு மரத்தில் கட்டி விட்டார். கயிற்றின் ஓரம் ஒரு மணியை கட்டிவிட்டார்.
ராஜாவை அழைத்து “மகாராஜா மேலே பாருங்கள். பறக்கும் அரண்மனை உயரத்தில் புள்ளியாக பறந்து கொண்டிருக்கிறது”
“அருமை அருமை. மிகப்பெரிய காரியம் செய்தீர் கட்டிட கலைஞரே”
“அரண்மனை தயாராகிவிட்டது. இருப்பினும் மேற்கூரை வேய சிறிது கற்கள் வேண்டுமாம். மணியடித்து கேட்கிறார்கள். உங்கள் படைவீரர்களிடம் சில கற்கள் கொடுத்து அனுப்ப முடியுமா”
“அனுப்பலாம் ஆனால் எப்படி பறக்கும் அரண்மனைக்கு கற்களை எடுத்துச் செல்வது. பறந்தா செல்ல முடியும்”
“ஆமாம் மகாராஜா இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்று தெரிந்தால் பறக்கும் அரண்மனையே கட்ட உத்தரவிட்டுருக்க மாட்டீர்களே” என்றார் கட்டடக் கலைஞர்.
இப்போது ராஜாவுக்கு பறக்கும் அரண்மனை சாத்தியமில்லை என்பதும் வீண்பிடிவாதம் தவறு என்றும் புரிந்தது. கட்டிட கலைஞரிடம் மன்னிப்பு கேட்டார்.
ராஜாவின் மனப்போக்கிலேயே சென்று அவருக்கு உண்மையை புரிய வைத்த கட்டிடக் கலைஞரை அனைவரும் பாராட்டினர்.
Share