தினம் ஒரு கதை – 2
தினம் ஒரு கதை – 2
அவர், மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர். உறவினர் கல்யாணத்துக்கு வந்திருந்தார். கண்டக்டராக வேலைபார்த்து ரிட்டயர் ஆன, தன் வயதான அப்பாவிடம், அந்தக் கல்யாண வீட்டில், ‘‘அப்பா! 500 ரூபா இருந்தா கொடுங்க. என்கிட்ட இப்ப இல்ல’’ என்று கேட்கிறார்.
அப்பா உடனே, ‘‘இந்தாப்பா’’ என்று தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுக்கிறார்.
‘‘ஏன்பா தாத்தா கிட்ட பணம் கேக்கறீங்க? உங்ககிட்ட இருக்குதானே’’ என்கிறாள் மகள்.
‘‘இருக்கலாம். ஆனா, இப்படி அப்பாகிட்ட கேட்கும்போது, உரிமையா கேட்ட திருப்தி எனக்கு. பையனுக்கு அன்பா கொடுக்கிறோம்ங்கிற திருப்தி என் அப்பாவுக்கு. உனக்கு இது புரியாதும்மா’’ என்கிறார் அவர்.
Share