தினம் ஒரு கதை - 129

தினம் ஒரு கதை - 129

இரண்டு நண்பர்கள் வயல்வெளியைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்து அமர்ந்தனர்.

அவர்கள் இருவரும் தங்களை அறிவுப்பூர்வமாக விவாதம் செய்யும் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் வாய்ப்பேச்சு வீரர்கள் மட்டும்தான். வயல்வெளியில் விவசாயி கடுமையாக உழைப்பதை பார்த்துக் கொண்டே பேசினார்கள்.

‘‘விதை இல்லாமல் ஏது நெற்கதிர்கள்? நெற்கதிர்கள் இல்லாமல் நெல் ஏது? நெல் இல்லாமல் அரிசி ஏது? அரிசி இல்லாமல் உணவு ஏது? உணவில்லாமல் நீயும் நானும் ஏது? நான் இல்லாவிட்டால் உலகு ஏது?’’ என்று ஒருவர் வியாக்கியானமாய் பேசினார்.

இதைக் கேட்ட இரண்டாமவர், ‘‘உலகில்லாமல் நான் ஏது? நான் இல்லாமல் வயல் ஏது? வயல் இல்லாமல் நெற்பயிர் ஏது? நெற்பயிர் இல்லாமல் நெல் ஏது?’’ என்றார்.

இப்படியே ‘ஏது… ஏது… ஏது…’ என்று பைசா பயனில்லாமல் மதியம்வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

தலைக்கு மேல் சூரிய வெயில் பட்டதும் பசி எடுக்க ஆரம்பித்தது. கொஞ்சம் தள்ளி விவசாயி கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார். இரு அறிவாளிகளும் அவரிடம் போய், ‘‘ஐயா, பசிக்கிறது. சாப்பிட ஏதாவது இருக்கிறதா?’’ என்று கேட்டார்கள்.

விவசாயி இருவருக்கும் கஞ்சி ஊற்றிக் கொடுத்தார். குடித்துவிட்டு அவர்கள் விவசாயிக்கு நன்றி சொன்னார்கள்.

விவசாயி அப்பாவியாக, ‘‘ஐயா, நான் நெல் வயலில் வேலை செய்தேன். நீங்கள் அடிக்கடி ‘ஏது’ என்று பேசியதால், ஏதோ ‘ஏது’ வயலில் வேலை செய்கிறீர்கள். அங்கே நெல்லைப் போல நிறைய ‘ஏது’ என்ற தானியம் விளையும், அதை வைத்து மதியம் ‘ஏது’ கஞ்சி குடிப்பீர்கள் என்று நினைத்தேன்’’ என்றார்.

இரண்டு வாய்ப்பேச்சு வீரர்களும் தங்கள் தவறை உணர்ந்து உழைக்கக் கிளம்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu