தினம் ஒரு கதை - 128
தினம் ஒரு கதை - 128
பதின் பருவத்தில் நுழைய இருக்கும் அந்தப் பள்ளிச் சிறுமி அன்று முழுவதும் டி.வி பார்த்துக்கொண்டே இருந்தாள். காலை முதல் மாலை வரை டி.வி.யில் ஒரு நிகழ்ச்சியைக்கூட விடவில்லை. புதிதாய் சேர்ந்திருக்கும் பேஸ்கட் பால் பயிற்சிக்குக்கூட மாலையில் போகவில்லை.
அம்மா இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர் ஏதும் கேட்கவில்லை. ஆனால் இரவிலும் மகள் டி.வி பார்த்துக் கொண்டிருப்பதை அவரால் தாங்க முடியவில்லை. ‘‘ஏன்மா இன்னைக்கு விளையாடவே போகலை?’’
‘‘இனிமே எனக்கு விளையாட்டு செட் ஆகாதும்மா’’ என்றாள் மகள்.
‘‘ஏன்?’’
‘‘நேத்து எங்க ஸ்கூல்ல லாங் ஜம்ப் செலக்ஷன் வச்சாங்களா...’’
‘‘ம்ம்ம். நீ கலந்துக்கிட்டியா?’’
‘‘ஆமா. உடற்பயிற்சி ஆசிரியர் எல்லாரையும் வரிசையில் நிற்க வைத்து நீளம் தாண்டச் சொன்னாரு.’’
‘‘சரி, நீ தாண்டினியா?’’
‘‘ஆமா! ஓடிவந்து தாண்டும்போது...’’ மகள் முகம் சுருங்கியது.
‘‘என்னாச்சு?’’
“ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை...’’ என்று சொல்லும்போது அவள் முகம் இன்னும் சுருங்கியது. அம்மா மீது சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள். மகளின் சூடான கண்ணீர் அம்மாவின் கழுத்தில் பரவியது. தகிக்கும் எரிமலைக் குழம்பைக்கூட அம்மா தாங்கிக் கொண்டிருப்பார். ஆனால் மகளின் கண்ணீரைத் தாங்க முடியுமா?
‘‘என்னாச்சும்மா?’’ என்று பதறினார்.
‘‘ஸ்கர்ட் போட்டுட்டு வேகமா ஓட முடியலம்மா. ஓடினா ஸ்கர்ட் பறக்குது. ஓடி வந்தபோது ஒரு சில பசங்க சிரிக்கிறாங்கம்மா. கவனம் எல்லாம் அங்க போகுதும்மா. என்னால சரியா தாண்ட முடியலம்மா.
இன்னும் நான் வளர வளர பிரச்னையும் அதிகமாகும்மா. எனக்கு விளையாட்டு செட் ஆகாது. கேர்ள்ஸுக்கே விளையாட்டு செட் ஆகாதும்மா. நான் சும்மா படிச்சிட்டு டி.வி பாத்துட்டு வீட்லயே இருக்கேன்’’ என்றாள்.
‘‘சரி, நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு.’’ அம்மா கேட்டார்.
‘‘ம்ம்ம்.’’
‘‘நீ காலையில இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் டி.வி.யை யார் கண்டுபிடித்தது?’’
‘‘ஜான் லோகி பியார்டு.’’
‘‘அவர் டி.வி ஆராய்ச்சியில் இருக்கும்போது அவர் கையில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது...’’
‘‘ஐயோ அம்மா! அது ரொம்ப கொடூரமா இருந்திருக்குமே?’’
‘‘ஆமா. கிட்டத்தட்ட அவரோட ஒரு கை எரிஞ்சி போனது. பெயருக்குத்தான் அந்த கை இருந்தது. அவர் அதற்காக பயந்து அந்த ஆராய்ச்சியை விடவில்லை. முன்னை விட பலமாக உழைத்தார். அடுத்த மூன்று வருடங்களில் தெளிவான தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.’’
‘‘அப்படியா?’’ மகள் ஆச்சர்யப்பட்டாள்.
‘‘ஆமா. எனக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் பயந்து ஓடிவிடவில்லை. அந்தத் துணிவுதான் மனித குலத்துக்குத் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்தது.
Share
Leave a Reply
One comment on “தினம் ஒரு கதை - 128”

Wow great effort please give more information women relate.thanks my native place fantabulous magazine