தினம் ஒரு கதை - 122

தினம் ஒரு கதை - 122

அலெக்சாண்டர் உலகையே வெற்றி கொண்டு, இந்தியாவின் வட பகுதியையும் வெற்றி கொண்ட கர்வத்தில் குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். அவர் மனம் பெருமையால் நிறைந்து இருக்கிறது. குதிரையில் தனியாக அமர்ந்து சவாரி செய்தபடி தன்னைத்தானே மனதுக்குள் மெச்சிக் கொண்டு போவது அலெக்சாண்டருக்குப் பிடித்த பொழுதுபோக்கு.

16 வயதில் தன் தந்தை மன்னர் பிலிப் அவரை ராணுவத்தில் சேர்த்துக் கொண்டது, 17 வயதில் தீபனியர்களை வியூகம் அமைத்து வெற்றி கொண்டு அவர்கள் நகரத்துக்குள் பீடுநடை போட்டுச் சென்றது என எல்லாவற்றையும் நினைத்தார். தொடர்ச்சியாக தான் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும், மன்னர்களின் எதிர்ப்பை எப்படி எல்லாம் அடக்கினார் என்பதையும், மக்கள் எல்லாம் தன்னை சக்கரவர்த்தி என்று எப்படி பயந்து புகழ்ந்தார்கள் என்பதையும் நினைத்து பெருமை கொண்டார். 

அவரைக் கடந்து போன அனைவரும் தரையில் விழுந்து வணங்கினர். அவர் அதைக் கண்டுகொள்ளாமல் போவது போல பாவனை செய்தாலும், அப்படி மக்கள் விழுந்து வணங்குவது அவருக்குத் திருப்தியாக இருந்தது.

‘மகா சக்கரவர்த்தி அலெக்சாண்டர்’, ‘உலகை வென்ற அலெக்சாண்டர்’ என்றெல்லாம் கோஷம் அவர் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை அது ஒலிக்கும்போதும், ‘இன்னும் பல நாடுகளைக் கைப்பற்ற வேண்டும். இன்னும் பெரிய சக்கரவர்த்தியாக உயர வேண்டும்’ என்ற வெறி அவருக்கு ஏற்பட்டது.

அப்போது அலெக்சாண்டரை ஒரு சமண துறவி கடந்து சென்றார். அவர் அலெக்சாண்டரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எதிரே மரங்கள் நிற்கும்போது எந்த இயல்பில் நடப்பாரோ, அப்படித்தான் அலெக்சாண்டரையும் இயல்பாகக் கடந்து சென்றார்.

அலெக்சாண்டரின் முகம் மாறியது. உணர்ச்சி வேகத்தில் எரிச்சலுடன் துடித்தது. ‘‘நில்லும்’’ என்று கத்தினார்.

துறவி நின்றார்.

‘‘ஏன் எனக்கு வணக்கம் சொல்லவில்லை?’’

துறவி அமைதியாய் இருந்தார். அலெக்சாண்டர் தொடர்ந்தார். ‘‘உலகின் சக்கரவர்த்தியான எனக்கு நீர் சரியான மரியாதை செய்யவில்லையோ என்ற சந்தேகம் உமக்கே வரவில்லையா?’’ என்றார்.

இதைக் கேட்ட துறவி புன்முறுவலுடனும் கருணையுடனும் மெல்லிய குரலில் பேசலானார். ‘‘அலெக்சாண்டர். நீர் இளைஞன். உம்மை எனக்குத் தெரியும். ஆனால் நீர் சிலவற்றைப் புரிந்து கொள்ளவில்லை. நாம் நிற்கிறோமே ஓர் இடம், இதை மட்டும்தான் நாம் உயிரோடு இருக்கும்வரை நம்முடையது என்று சொந்தம் கொண்டாட முடியும். மொத்த நிலங்களையும் நீ வெற்றி பெற்று ஆள்கிறாய் என்று நினைப்பதே உண்மை கிடையாது. அது ஒரு மாயைதான்.’’

‘‘நான் சிறந்த தனித்துவமான மனிதன் இல்லையா?’’

‘‘இல்லை. எங்களைப் போன்ற சாதாரண மனிதனான நீர் எப்போதும் சுறுசுறுப்பானவர். ஆனால் எவர்க்கும் நல்லவனாய் இல்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் பார்க்கும்போது அங்கே அன்பும் அருளும் பொங்க வேண்டும். ஆனால் உன்னைப் பார்க்கும் மக்களின் கண்களில் மிதமிஞ்சிய மரியாதையும் பயமும் நடுக்கமும்தான் இருக்கிறது. சொல்லப் போனால் சாதாரண மனிதர்களை விட நீர் கீழ்மையானவர்தான்.’’

‘‘என் சாதனைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?’’

‘‘அலெக்சாண்டர், நீர் உம் வீட்டிலிருந்து பல மைல் தூரம் வந்து வழியெங்கும் லட்சக்கணக்கான மக்களை பதற்றப்படுத்தி, பயமுறுத்தி, உமக்கும் மற்றவர்களுக்கும் தேவையற்ற தொந்தரவாய் இருக்கிறீர்! விரைவில் நீ இல்லாது போகும்போது, உம்மை புதைக்க எவ்வளவு நிலம் தேவையோ அது மட்டுமே உம்முடையது’’ என்றார் துறவி.

அந்தத் துறவியின் வார்த்தைகள் அலெக்சாண்டரின் மனதை உலுக்கியது. அவர் எதை சாதனை என்று நினைத்தாரோ, அதில் எதுவுமே இல்லை என்று புரிய வைத்துவிட்டார் அத்துறவி.

தன் இளம் வயது ஆசிரியர் அரிஸ்டாட்டில் எப்படி உலகை வெல்லக் கற்றுக் கொடுத்தாரோ, அப்படி அந்த அடையாளம் தெரியாத துறவி வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தார் என்று அலெக்சாண்டர் நினைத்து மனம் மாற முயற்சி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu