தினம் ஒரு கதை - 121

தினம் ஒரு கதை - 121

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் ஒரு குட்டிப்பெண் சோகத்துடன் அமர்ந்திருந்தாள். அதைக் கண்ட அம்மா, ‘‘ஏன் சோகமாய் அமர்ந்திருக்கிறாய்?’’ என்று கேட்டார்.

‘‘வெளியே விளையாடப் போக முடியவில்லை. நண்பர்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் பிளே ஸ்டேஷன் வைத்து வீடியோ கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்களாம். எனக்கு அப்படி எதுவுமில்லையே, நான் என்ன செய்வேன்? எனக்கு என்ன அக்கா, அண்ணன், தம்பியா இருக்காங்க? நான் சிங்கிள் சைல்ட்தானே’’ என்றாள் மகள்.

‘‘இவ்வளவுதானா விஷயம்?’’ என்று அம்மா அந்த வீட்டின் ஹாலில் உள்ள பொருட்களை எல்லாம் ஒதுக்கினார் அதை குட்டி மைதானமாக்கி விட்டார். ஒரு ஃபுட்பாலை எடுத்தார்.

‘‘அம்மா! ஃபுட்பாலா விளையாடப் போகிறோம்? இங்கே எத்தனை கண்ணாடிப் பொருட்கள் இருக்கின்றன. எல்லாம் உடைந்து விடும்’’ என்றாள் மகள்.

‘‘உயர்த்தி அடித்தால்தான் அவை உடையும். நான் சொல்வது மாதிரி நீ விளையாடு’’ என்றார் அம்மா.

மகளை அந்தப் பக்கம் நிறுத்தி வைத்துவிட்டு பந்தைத் தரையோடு உருட்டி அடித்தார் அம்மா. அது மகள் காலைத் தாண்டி சுவரில் பட்டு திரும்பியது.

‘‘உன் பக்கத்தில் வேகமாக உருண்டு வரும் பந்தை உன் காலால் ஜம்மென்று நிறுத்த வேண்டும். அதுதான் விளையாட்டு’’ என்றார் அம்மா.

மகள் உற்சாகமானாள். அம்மா தரையோடு உருட்டித் தள்ளி விடும் பந்தை காலால் நிறுத்துவதை எளிதாகச் செய்ய முடியவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்தாள். குறிப்பிட்ட கட்டத்தில் அவளால் அதை எளிதாகச் செய்ய முடிந்தது. கால் சொன்னதை பந்து கேட்டது. இப்படியே ஒரு மணி நேரம் போனது தெரியாமல் போனது. அவள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

அவளுக்கு நன்றாகப் பசித்தது. போய் நல்லதொரு வெந்நீர் குளியல் போட்டாள். அம்மா அவளுக்காக சூடாக சிறுதானியக் கஞ்சி தயார் செய்திருந்தார். அதை வயிறார உண்டாள். பத்து நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுத்தாள். பிறகு படிக்க வேண்டிய பாடங்களைப் படித்து முடித்தாள். கொஞ்ச நேரம் டி.வி பார்த்தாள். பிறகு அம்மாவின் மடியில் வந்து படுத்துக் கொண்டாள்.

‘‘இன்னைக்கு எனக்கு ஜாலியா போச்சுதும்மா.’’

‘‘அப்படியா? உனக்குதான் பிளே ஸ்டேஷன் இல்லையே. நீதான் சிங்கிள் சைல்ட் ஆச்சே... எப்படி ஜாலியா இருந்தே? நீ சோகமாதானே இருக்கணும்?’’

‘‘ஹா... ஹா... ஹா... கிண்டல் பண்ணாதீங்கம்மா.’’

‘‘இங்கே பாரும்மா செல்லம். உன் மனசுதான் எல்லாமே. மனசு சந்தோஷமா இருக்கிறதுக்கு பிளே ஸ்டேஷன் உதவி செய்திருக்கலாம். ஆனால் பிளே ஸ்டேஷன் மட்டுமே மகிழ்ச்சிக்குக் காரணம் இல்லை. ஃபுட்பாலை வைத்தும் மகிழ்ச்சியா இருக்க முடியும். உன மனசுல நீ மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைச்சா, அதுக்கு எந்தப் பொருளும்கூட தேவையில்லை. நீயே ஒரு பொழுதுபோக்கை உருவாக்கிக்கலாம். அதுதான் உண்மை.’’

‘‘புரியுதும்மா.’’

‘‘அப்புறம்... நீ ஒத்தை பிள்ளையா இருக்கிறது பத்தி அடிக்கடி புலம்புற. அது தேவையில்லாத வேலை. இந்தியாவோட மக்கள்தொகை 135 கோடி. அப்பா அம்மாவுக்கு ஒரு குடும்பம் நல்லா நடக்க எத்தனை குழந்தை இருக்கணும்னு தெரியும். நீ சிங்கிள் சைல்ட்தான். அதுதான் உண்மை. அதுல என்ன சந்தோஷம் கிடைக்கும்னு பாரு. சரியா? அந்த சந்தோஷத்தை நோக்கி போ... சரியா?’’ என்றார்.

மகள் பாசத்துடன் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அதில் மன்னிப்பும் அன்பும் கலந்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu