தினம் ஒரு கதை - 120
தினம் ஒரு கதை - 120
அந்தக் காலத்தில் ஒரு பண்ணையார் வீட்டில் எலித்தொல்லை இருந்தது. அவர் அந்த எலியை ஒழிக்க எவ்வளவோ பாடுபட்டார். முடியவில்லை. நகரத்துக்குச் சென்றபோது வாழ்க்கையில் முதல்முறையாக எலிப்பொறியைப் பார்க்கிறார். ‘சரி, நம் வீட்டில் எலியைப் பிடிக்கப் பயன்படும்’ என்று வாங்கிவருகிறார். வீட்டில் எலியைப் பிடிக்க அதைத் தயார் செய்து வைக்கிறார். குடும்பத்தாரிடம் அதை விளக்குகிறார்.
இதைக் கேட்ட எலி அஞ்சி நடுங்கி தன் தோட்டத்துக்கு வந்து அங்கிருந்த கோழியக்காவிடம் புலம்புகிறது. ‘‘அக்கா... அக்கா... பண்ணையார் எலிப்பொறி வைத்திருக்கிறார். நீ அதை காலால் தள்ளி கவிழ்த்து விடு கோழியக்கா.’’
‘‘எலிப்பொறி பற்றி நீதான் கவலைப்பட வேண்டும். நான் எதற்கு கவலைப்பட வேண்டும்’’ என்றது கோழியக்கா.
எலி போய் ஆடு அண்ணனிடம், ‘‘அண்ணா... அண்ணா... வீட்டில் எலிப்பொறி இருக்கிறது. நீ அதைப் போய் முட்டி உடைத்துவிடு அண்ணா’’ என்றது.
‘‘அடப் போடா எலிப்பயலே. எலிப்பொறியால் எனக்கென்ன பிரச்னை? உனக்குத்தான் பிரச்னை’’ என்று ஆடு அலட்சியமாக இருந்து விட்டது.
அன்றிரவு எலிப்பொறியில் விஷமில்லாத குட்டி பாம்பு ஒன்று மாட்டிக் கொண்டது. ‘எலிதான் மாட்டிக்கொண்டது’ என்று எலிப்பொறியை அலட்சியமாகத் திறந்த பண்ணையாரின் மனைவி கையில் கடித்தது.
‘‘ஐயோ, பாம்பு கடித்து விஷம் ஏறிவிட்டது’’ என்று அவர் அலறினார். வைத்தியர் வந்து பார்த்து, ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லி சமாதானப்படுத்தினார். ‘‘இருந்தாலும் இவருக்குக் கொஞ்சம் கோழி சூப் கொடுங்கள்’’ என்று சொன்னார்.
உடனே பண்ணையில் இருந்த கோழியக்காவைப் பிடித்து சூப் வைக்க எடுத்துச் சென்று விட்டார்கள்.
பண்ணையாரின் மனைவியை பாம்பு தீண்டியது என்று சொந்தபந்தங்களுக்கு தெரிந்து அனைவரும் மொத்தமாக பார்க்க வந்தார்கள். வந்தவர்களுக்கு விருந்தளிக்க என்ன செய்வது என்று பண்ணையார் யோசித்தார். ‘தோட்டத்திலேயே நல்ல ஆட்டுக்கிடா இருக்கும்போது என்ன கவலை’ என்று ஆட்டைத் தூக்கிக் கொண்டு போனார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எலி தன் மனதுக்குள், ‘கோழியக்கா, ஆடு அண்ணா இருவருமே அடுத்தவங்களுக்குதான் பிரச்னை நமக்கு இல்லையே என்று இருந்தார்கள். அப்படி இருந்தால், அந்தப் பிரச்னை நம்மைக்கூட தாக்கிவிடலாம். அதனால் எப்போதும் அடுத்தவர் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டது.
Share