தினம் ஒரு கதை - 118
தினம் ஒரு கதை - 118
ஒரு நகரத்தில் இருந்த இளைஞனும் ஓர் இளம்பெண்ணும் காதலித்தார்கள். அந்த நகரத்தின் வெளியே ஓர் ஏரி இருந்தது. அங்கே படகு சவாரி பொழுதுபோக்கும் இருந்தது.
ஒருநாள் படகு சவாரிக்குப் போகலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர். அவன் தன் நண்பனின் பைக்கைக் கேட்டு வாங்கி வந்தான். பெண்ணும் ஏதோ காரணத்தை வீட்டில் சொல்லிவிட்டு வந்தாள். இருவரும் பொது இடத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.
அவள் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள். அவன் பைக்கை ஓட்டினான். நகரத்துக்குள் சாதாரணமாக ஓட்டியவன், நகரத்தைத் தாண்டியதும் வேகமாக ஒட்டினான். வேகமாக ஓட்டியது மட்டுமில்லாமல், இப்படியும் அப்படியும் பைக்கை சரித்து சரித்து ஓட்டினான். பெண் பயந்து போனாள். ‘‘இப்படி ஓட்டாதே’’ என்றாள்.
ஆனாலும் அவன் வேகமாகவே ஓட்டினான். எதிரே லாரி வந்தால், அதை மோதுவது மாதிரி சென்று, அருகில் நெருங்கியதும் விலகி ஓட்டினான். வேண்டுமென்றே விதிகளை மீறி இடது பக்கமாக ஓவர் டேக் செய்து ஒட்டினான். இவள் ‘ஓ’வென்று கத்தும்போது சிரித்துக் கொண்டே இன்னும் வேகமாக ஓட்டினான்.
திடீரென்று அவள் கத்தினாள். ‘‘என் செருப்பு விழுந்துடுச்சி’’ என்றாள்.
அவன் பைக்கை நிறுத்தினான். ‘‘எங்கே விழுந்துச்சு? பின்னாடி போகணுமா?’’ என்று கேட்டபடி அவள் கால்களைப் பார்த்தான். அங்கே இரண்டு செருப்புகளும் பத்திரமாக இருந்தன.
‘‘அதான் செருப்பு இருக்கேப்பா... பிறகு ஏன் விழுந்துச்சின்னு சொன்னே?’’
‘‘அதுவா? பொய் சொன்னேன்!’’
‘‘ஏன்?’’
‘‘அப்போதானே நீ வண்டியை நிறுத்துவே!’’
‘‘நான் வேகமா ஓட்டினதைப் பார்த்து பயந்துட்டியா?’’
‘‘ஏன்? பயப்படாதது மாதிரி நடிக்கணுமா, அல்லது எனக்கு ரொம்ப த்ரில்லிங்கா இருக்குன்னு சொல்லணுமா?’’
‘‘அதைச் சொல்ல வேண்டியதுதானே?’’
‘‘சொல்லக் கூட வாய்ப்பு குடுக்காம வண்டியை ஓட்டுறது நீதானே! அதான் இப்படிச் சொன்னேன்...’’
‘‘நீ என்னைக் காதலிக்கிறியா, இல்லையா?’’
‘‘நான் உன்னைக் காதலிச்சா, என்னை பைக்ல வச்சிக்கிட்டு என் உயிருக்கு ஆபத்து வர்ற மாதிரி இப்படி தலைதெறிக்க பைக் ஓட்டலாம்னு உனக்கு யார் சொன்னது?’’
‘‘இல்லை, உனக்குப் பிடிக்கும்னு நினைச்சேன்!’’
‘‘இதைப் பாரு... என் வாழ்க்கையில் காதலும் ஒரு பகுதி. அதில்லாம நான் ஓவியம் வரைவேன், சினிமா பார்ப்பேன், உணவை ருசிச்சி சாப்பிடுவேன், விளையாடுவேன், மத்தவங்க கூட அரட்டையடிப்பேன், புத்தகம் படிப்பேன். இப்படி ஏராளமான பொழுதுபோக்கு எனக்கு உண்டு. இப்படி தாறுமாறா பைக் ஓட்டற உன்கூட உக்கார்ந்து, எங்கேயாவது அடிபட்டு உயிரை விட நான் தயாரா இல்லை. சரியா? அதனால, நீ வேகமா போய் எங்கேயாவது இடிச்சிக்கோ. இனிமே வாழ்க்கையில் உன்கூட பைக்ல வரமாட்டேன். நான் சீக்கிரம் பைக் ஓட்டக் கத்துக்கிறேன். அப்புறம் உன்னை பக்குவமா பின்னால வைச்சி அழைச்சிட்டு போறேன். சரியா?’’ என்று சொல்லிவிட்டு ரோட்டைக் கடந்தாள் அப்பெண்.
ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி ஏறினாள். பஸ் நகர்ந்தது. அவள் ஜன்னல் வழியே அவனுக்கு டாட்டா சொன்னதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே நின்றான் அந்த இளைஞன்.
‘யாருக்காகவும், எதற்காகவும், எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பை விட்டுத் தரக்கூடாது’ என்பதை அவளிடம் கற்றுக் கொண்ட அவன், பைக்கை பொறுமையாக ஓட்டியபடி வீடு போய்ச் சேர்ந்தான்.
Share