தினம் ஒரு கதை - 116

தினம் ஒரு கதை - 116

அமைதியை விரும்பும் நாட்டின் மீது கொடுங்கோல் மன்னன் ஒருவன் படை எடுத்து வந்தான். அவனிடம் முரட்டு காளைப் படை ஒன்று இருந்தது. அதிலுள்ள காளைகள் எல்லாம் வீரமிக்கவை, முரடானவை. நாட்டுக்குள் புகுந்து மோசமாக நாசம் செய்பவை.

அமைதி விரும்பும் நாட்டின் அரசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கொடுங்கோலன் நாட்டிற்குள் வந்தால் தன் குடிமக்கள் அனைவரையும் சிதைத்து விடுவான் என்று அஞ்சினான். கொடுங்கோலனை நேருக்கு நேராக போரில் சந்திக்கும் படை பலம் அவனிடம் இல்லை. என்ன செய்வதென்று யோசித்தான்.

கொடுங்கோலனின் காளை மாட்டுப் படை இருக்குமிடத்துக்கு இங்கிருந்து பத்து காளைகளை அனுப்பி விட்டான். அவை போய் காளைப் படையைத் தாக்கின. பதிலுக்கு கொடுங்கோலனின் காளைகள் அவற்றை முட்டி கொம்பால் குத்தித் துரத்தி விட்டன.

அதன்பின் கொடுங்கோல் மன்னனுக்கு அமைதி அரசன் ஒரு செய்தியை அனுப்பினான். ‘நம் இரண்டு படைகள் சண்டை போடுவதற்கு பதிலாக, உங்களிடம் இருக்கும் ஐந்து காளைகளை ஏன் என்னிடம் இருக்கும் ஐந்து காளைகளோடு சண்டை போட வைக்கக்கூடாது?’ என்று கேட்டான். 
இதைக் கேட்ட கொடுங்கோலன் சிரித்தான். ‘என் காளைகள் ஒரு நிமிடத்தில் உன் மாடுகளைக் கொன்று விடும்’ என்று சவாலுக்கு ஒப்புக் கொண்டான். சண்டைக்கான நாளும் நேரமும் குறிக்கப்பட்டது.

அமைதியை விரும்பும் மன்னன் ஐந்து கன்றுக் குட்டிகளைத் தேர்ந்தெடுத்தான். அவை தாய்ப் பசுவிடம் பால் குடிக்காதபடி பார்த்துக் கொண்டான். ஒருநாள் முழுவதும் தாயின் மடியில் பால் குடிக்காமல் இருந்த கன்றுகள், தாயைத் தேடித் துடித்தன. அதன்பின் அவற்றின் குட்டி கொம்புகளில் கூர்மையான சிறிய ஊசிகளைக் கட்டிவிட்டான். 
சண்டை ஆரம்பித்தது. கொடுங்கோலனின் ஐந்து காளைகள் கம்பீரமாக வந்து நின்றன. 

வெறியுடன் காத்திருந்தன. இங்கே அமைதியை விரும்பும் மன்னன் ஐந்து கன்றுக் குட்டிகளை களத்தில் இறக்கி விட்டான். இதைப் பார்த்த அனைவரும் சிரித்தார்கள். 

ஆனால் பாலுக்காக ஏங்கி பசியோடு இருந்த கன்றுக் குட்டிகளுக்கு எதுவும் தெரியவில்லை. அங்கிருந்த காளை மாடுகளின் வயிற்றை நோக்கி பசியோடு ஓடிப்போயின. போய் வயிற்றில் வாயை வைத்து முட்டின. அந்த வேகத்தில், அவற்றின் கொம்பில் இருந்த கூரிய ஊசிகள் காளை மாட்டின் வயிற்றைக் கிழித்தன. 

அனைத்து மாடுகளும் சோர்ந்து தரையில் விழுந்தன. உடனே அமைதி விரும்பி அரசனின் வீரர்கள், ‘‘தோற்ற காளை மாடுகள் எங்களுக்குத்தான் சொந்தம்’’ என்று தூக்கிச் சென்றார்கள். 

கொடுங்கோலனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இந்த நாட்டின் கன்றுக் குட்டிகளுக்கே இவ்வளவு பலம் என்றால், காளை மாடுகளுக்கு எவ்வளவு வீரம் இருக்கும்! ஆறறிவுடைய மனிதர்களுக்கு எவ்வளவு பலம் இருக்கும்’ என்று பயந்து போனான். அமைதி விரும்பி அரசனிடம் சமாதானமாகப் பேசிவிட்டு, தன் படைகளை அழைத்துக் கொண்டு ஓடிப்போனான். 

அமைதி விரும்பி நாட்டின் மக்கள் அனைவரும் தங்கள் அரசனைப் பாராட்டினர். ‘ஒருவனுக்கு என்னதான் அதிகார பலம், ஆள் பலம் எல்லாம் இருந்தாலும், மன பலம் இல்லாவிட்டால் அவனால் சாதிக்க முடியாது’ என்பதற்கு கொடுங்கோலன் உதாரணம் ஆனான். 

‘படை பலம் இல்லாவிட்டாலும் மனபலமும் புத்திக்கூர்மையும் இருந்தால் சாதிக்க முடியும்’ என்பதற்கு அமைதி விரும்பி அரசன் உதாரணம் ஆனான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu