தினம் ஒரு கதை - 114
தினம் ஒரு கதை - 114
அந்த நாட்டின் மன்னர் பெரிய விழா ஒன்றை நடத்தினார். விழாவைப் பார்க்க நாடே திரண்டு இருக்க, ஒரே ஒருவரால் மட்டும் போக முடியவில்லை.
அவர், மன்னரின் தோட்டக்காரர். அவரும் ஒரு வாரம் விழாவைப் பார்க்கச் சென்றுவிட்டால் யார் பூந்தோட்டத்தைப் பார்த்துக் கொள்வது?
அவர் அதை நினைத்து சோகமாக இருக்க, அங்கு வந்த குரங்குகள் கூட்டத்தலைவன் ‘என்ன’ என்று விசாரித்தது. முதலில் காரணத்தைச் சொல்லாமல் தவிர்த்த தோட்டக்காரர், குரங்குத் தலைவனின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் விஷயத்தைச் சொன்னார்.
‘‘நான் என் பரிவாரங்களுடன் தோட்டத்தைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நிம்மதியாக ஒரு வாரம் விழாவைப் பார்த்து விட்டு வாருங்கள்’’ என்று அனுப்பி வைத்தது.
போகும் முன் தோட்டக்காரர், ‘‘இது மன்னரின் தோட்டம். கவனமாய் இரு. இதில் உள்ள ஒவ்வொரு செடியும் முக்கியம். ஒவ்வொரு மலரும் முக்கியம். நீர் ஒழுங்காக ஊற்று, மறந்து விடாதே. கவனம் அதிகம் தேவை’’ என்று குரங்குகள் தலைவனை எச்சரித்துக் கொண்டே போனார்.
சொன்னபடி குரங்குகள் தலைவன் மற்ற குரங்குகளோடு தோட்டத்தைக் கவனிக்கிறது. ‘மிக நன்றாய் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று தோட்டக்காரன் சொன்ன எச்சரிக்கை அவ்வப்போது நினைவில் வந்து குரங்குகள் தலைவனைப் பதற்றப்படுத்துகிறது.
செடிகளுக்கு எல்லாம் நீர் சரியாகப் போகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உடனடியாக மற்ற குரங்குகளுக்கு ஓர் உத்தரவு போட்டது. ‘‘இனிமேல் ஒவ்வொரு செடிக்கும் நீர் ஊற்றிய பிறகு பிடுங்கிப் பாருங்கள். ஆழமாக வேர் வரைக்கும் நீர் போயிருக்கிறதா என்று சோதித்து மறுபடி தேவைப்பட்டால் நீர் ஊற்ற வேண்டும்’’ என்று சொன்னது.
அதன்படி தோட்டத்தில் இருந்த குரங்குங்கள் ஒவ்வொரு செடிக்கும் நீர் ஊற்றுவதும், நீர் ஊற்றிய பிறகு செடியைப் பிடுங்கி வேரில் நீர் பட்டிருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதுமாக இருக்கின்றன.
ஒரு வாரத்தில் தோட்டக்காரர் வரும்போது நந்தவனம் நாசமாய்ப் போய் இருந்தது.
‘‘ஐயோ, என்ன செய்தீர்கள்?’’ என்று குரங்குக் கூட்டத் தலைவனிடம் தோட்டக்காரர் கதறினார்.
‘‘நான்தான் செடியை நல்லா கவனிச்சிக்கச் சொன்னேன்’’ என்றது அது அப்பாவிக் குரலில்.
திறமை மற்றும் அறிவுக் குறைவாக இருப்பவரிடம் வேலையை ஒப்படைத்துச் செல்லும்போது யோசித்துக் கொடுக்க வேண்டும். அப்படி ஒருவேளை கொடுக்க வேண்டிய சூழல் வந்தால், அவரை அவர் போக்கில் விட்டு விட வேண்டும்.
நான் இந்த குரங்குகள் கூட்டத் தலைவனிடம், ‘கவனமாக இரு’ என்று அளவுக்கதிமாக அதிமாக எச்சரித்ததே பிரச்னைக்குக் காரணமாகிவிட்டது என்று வருந்தினார் தோட்டக்காரர்.
Share