தினம் ஒரு கதை - 110
தினம் ஒரு கதை - 110
அந்த இளைஞர் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார். அவர் மடியில் நான்கு வயது மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அங்கே வந்த அம்மா பரிவுடன், ‘‘நாளைக்குக் கல்யாணம். நீ இன்னும் தூங்கலையாப்பா?’’ எனக் கேட்டார்.
‘‘இல்லைம்மா… அதை நினைச்சுதான் பயமா இருக்கு!’’
‘‘என்ன பயம்?’’
‘‘முதல் கல்யாணத்துல இவன் பிறந்தான். இவனுக்கு இரண்டு வயசு இருக்கும்போது அவ உலகத்துல இல்லாம போயிட்டா!’’
‘‘ஆமா, இப்ப இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போற. இது ஒண்ணும் புதுசு இல்லையேப்பா. இந்தப் பொண்ணையும் நீ விரும்பி பேசி பழகித்தானே கல்யாணம் செய்துக்கப் போறே?’’
‘‘அது சரிம்மா. என்னோட அவ பேசும்போதே எனக்கு ஒரு பையன் இருக்கிறது தெரிந்துதான் காதலிச்சா. ஆனாலும் கல்யாணம்னு வரும்போது, ‘என் பையனை அம்மாவா இருந்து பாத்துப்பாளோ, மாட்டாளோ’ன்னு நெஞ்செல்லாம் கலங்குதும்மா.’’
‘‘புரியுதுப்பா!’’
‘‘கல்யாணம் ஆனதும், முதல்ல சொல்லிடப் போறேன். ‘என் பையனுக்கு அம்மாவாதான் உன்னைப் பாக்குறேன். முதல்ல அவனை நல்லா கவனிச்சிக்கிட்டாதான் எனக்கு உன் மேல காதல் எல்லாம் தொடர்ச்சியா நீடிச்சி நிக்கும்’னு!’’
‘‘நீ சின்ன வயசுல சிண்ட்ரெல்லா கதை படிச்சிருக்கியா?’’
‘‘படிச்சிருக்கேன்மா. அதுல சிண்ட்ரெல்லாவோட சித்தி கொடுமைப்படுத்துவாங்க. அதை எல்லாம் தாண்டி எப்படி சிண்ட்ரெல்லா இளவரசி ஆகுறாங்கன்னுதானே கதை. அது எதுக்கு இப்போ சம்பந்தம் இல்லாம?’’
‘‘அதுல சிண்ட்ரெல்லா சித்தி கேரக்டர் எப்படி?’’
‘‘அவங்கதானேம்மா கதையோட வில்லி. ரொம்ப கொடுமைக்காரங்க. சிண்ட்ரெல்லாவை மதிக்கவே மாட்டாங்க. நிறைய வேலை கொடுப்பாங்க. சரியான சாப்பாடு கொடுக்க மாட்டாங்க. கொடுமையான சித்தியா இருப்பாங்க.’’
‘‘அந்த சித்தி அப்படி அவளைக் கொடுமைப்படுத்துறதுக்கு ஓர் அடிப்படையான காரணம் இருக்கு தெரியுமா?’’
‘‘தெரியாதும்மா!’’
‘‘சொல்றேன். சிண்ட்ரெல்லாவை பெத்த அம்மா உலகத்தை விட்டு போனப்போ, சிண்ட்ரெல்லாவோட அப்பா அந்த சித்தியைக் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. கல்யாணம் செய்து ஒரு பொண்ணு நிறைய கனவுகளோட கணவன் கிட்ட அன்பா பேச வரும்போது அவர் சொல்ற முதல் வாக்கியம், ‘நீ எனக்கு மனைவிங்கிறத விட சிண்ட்ரெல்லாவுக்கு நல்ல அம்மாவா இருக்கணும். அதுக்குதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்’ங்கறதுதான்!’’
‘‘அப்படியாம்மா?’’
‘‘ஆமா. அதைக் கேட்ட உடனே சிண்ட்ரெல்லாவோட சின்னம்மாவுக்குத் தாங்க முடியல. மனசு ரொம்ப கஷ்டமாகி, உள்ளுக்குள்ள அழறாங்க!’’
‘‘ஏன்? அவரு சாதாரணமாதானே சொன்னாரு!’’
‘‘இல்லைப்பா. அது தப்பான சொல்தான். கணவன்&மனைவி உறவுக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது ஒருத்தருக்கொருத்தர் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கிறதுதான். உடல், மனம், அன்பு, வேதனை, பரிவு, மன அழுத்தம், நட்பு இப்படி எல்லாத்தையும் கூச்சப்படாம பகிர்ந்துக்கிற அற்புதமான உறவு அது. அதுக்கு வேற எந்த நோக்கம் சொன்னாலும், ஒரு பொண்ணுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஒரு பொண்ணுகிட்ட போய், ‘நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கிறது பணத்துக்காக, என் குழந்தைக்கு அம்மா வேணும்ங்கிறதுக்காக, நர்ஸ் வேலை செய்யறதுக்காக, என்னைத் திருத்தறதுக்காக’ என்றெல்லாம் சொன்னா நொந்து போயிருவா. முழுக்க முழுக்க அன்புக்காக மட்டும்தான் அவ திருமணம் செய்துக்கிறா. புரியுதா?’’
‘‘அப்படின்னா, நான் என் வருங்கால மனைவியிடம் ‘என் பையனுக்கு நல்ல அம்மாவா இருக்கணும்’னு சொல்லக் கூடாதா?’’
‘‘ஆமா, சொல்லத் தேவையில்லை. நீ அவளை மதிச்சி, அவ சுயமரியாதையை சிதைக்காம, உருகி உருகி அன்பா மட்டும் இருந்தா போதும். உன் குழந்தையை அவள் பார்த்துப்பா.’’
‘‘புரியுதும்மா, தேங்க்ஸ்மா!’’
அம்மா சென்று விட்டார். அவனுக்கு அம்மா சொன்னதே நினைவாக இருந்தது. போனை எடுத்து தன் வருங்கால மனைவிக்கு ஒரு செய்தி அனுப்பினான். ‘இன்று இரவு உன்னால் தூங்க முடிகிறதா? என்னால் தூங்க முடியவில்லை. உன் மேல் அன்பு பெருகி அதனாலேயே தூக்கம் வரவில்லை.’
இரண்டு நிமிடங்களில் அவளிடமிருந்து பதில் செய்தி வந்தது. ‘நானும் தூங்கவில்லை. நம்ம பையன் தூங்கிட்டானா? நம்ம கல்யாண நாள்ல அவனுக்குப் பரிசா ஒரு ரோபோ பொம்மை வாங்கி வைச்சிருக்கிறேன். அவனுக்கு அது பிடிக்கணுமேன்னு எனக்கு தூக்கம் வரலை.’’
அதைப் படித்த அவனுக்கு, தன் வருங்கால மனைவி மீது அளவில்லாத ப்ரியம் வந்தது. அவள் தலையை வருடுவதாக நினைத்து, தன் மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் செல்ல மகனின் தலையை அன்புடன் வருடினான். அப்படியே தூங்கிப் போனான்.
Share