தினம் ஒரு கதை - 109
தினம் ஒரு கதை - 109
‘‘அம்மா! ஏன் எப்பவும் மெகா சீரியலே பார்த்துட்டு இருக்கீங்க?’’ என்று தன் முதிய அம்மாவிடம் ஒரு மத்திம வயது நபர் சலித்துக் கொண்டார்.
இதைப் பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த அவர் மகள் கேட்டாள். அப்பா பாட்டியிடம் சலித்துக் கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை.
‘‘அம்மா, இந்த உலகத்துல நாம தெரிஞ்சுக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சிக்காம, ரசிக்காம இப்படி மெகா சீரியலே பாக்குறீங்களேம்மா. என்னால எல்லாம் இதை ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாதும்மா.’’ அங்கே ஹாலில் அப்பாவின் குரல் இன்னமும் நக்கலாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பாட்டிக்கு ஆதரவாகப் பேச பேத்திக்கு வாய் துடித்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள்.
இந்நிலையில் அப்பாவுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை அதிகமானது. அப்பாவை சோதித்த டாக்டர், ‘‘வேலைப்பளுதான் பிரச்னைக்குக் காரணம். பத்து நாட்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் படுத்து ஓய்வு எடுங்கள்’’ என்று சொன்னார்.
சில விநோதமான நிபந்தனைகளை டாக்டர் விதித்தார். ‘‘பத்து நாளும் நீங்க சும்மா படுத்திருக்கணும். மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கவே கூடாது. படுத்தபடி புத்தகம் படிக்கக் கூடாது. மொபைலில் கேம் விளையாடக் கூடாது. மொபைலே கையில் எடுக்க கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் டி.வி பார்க்கலாம். ஆனால், நியூஸ் சேனல் பார்க்கக் கூடாது. அதைப் பார்க்கும்போது தேவையில்லாமல் சிந்தனை இங்கும் அங்கும் போகும். யாரிடமும் இரைந்து பேசக் கூடாது. செய்தித்தாள்கள் படிக்க கூடாது. உங்கள் மூளை சிந்தனையிலிருந்து முற்றிலும் விடுதலை அடைய வேண்டும். அதுதான் மன ஓய்வு’’ என்றார்.
வேறு வழியில்லாமல் அப்பா படுக்கையில் படுத்திருந்தார். யாராவது அவரிடம் வந்து பேச மாட்டார்களா என்று காத்திருந்தார். மனைவி வேலைக்குப் போய்விட்டார். மகளோ பள்ளிக்குப் போய்விடுகிறாள். அம்மாவிடம்தான் தினமும் பேசுகிறார்.
தன் சிறுவயது கதைகளையெல்லாம் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். அம்மா ஐந்தாம் வகுப்பு வரை மிக ஆர்வமாகக் கல்வி கற்றதை, பெண் என்றால் படிக்கக்கூடாது என்று அம்மாவின் கல்வியை சமூகம் தடுத்து நிறுத்தியபோது அடைந்த கவலையை முழுவதுமாய் கேட்டு உள்வாங்கிக் கொண்டார்.
மாலையில் அப்பாவுக்கு அதிகம் போரடித்தது. அம்மாவுடன் அமர்ந்து மெகா சீரியல் பார்க்க ஆரம்பித்தார். இரண்டு நாட்களில் மெகா சீரியல்களின் தீவிர ரசிகர் ஆகிவிட்டார். இப்படியாக பத்து நாட்கள் போனதும், டாக்டர் பரிசோதித்து விட்டு அப்பாவுக்கு விடுதலை கொடுத்தார்.
அப்பா உற்சாகமாய் அலுவலகம் சென்றார். அப்பாவுடன் பைக்கின் பின்னால் அமர்ந்து மகளும் சென்றாள்.
‘‘என்னப்பா... பத்து நாளும் மெகா சீரியல் பார்த்தீங்க போல இருக்கு?’’
‘‘ஆமாம்மா!’’
‘‘உங்களுக்குதான் அதெல்லாம் பிடிக்காதேப்பா!’’
‘‘ஹா... ஹா... பார்க்கப் பழகிட்டேன்மா!’’
‘‘உங்களை படிக்கக்கூடாது, யோசிக்கக்கூடாதுன்னு சொன்ன உடனே வேற வழியில்லாம மெகா சீரியல் பாக்க உக்காந்துட்டீங்க, அப்படித்தானே?’’
‘‘ஆமாம்மா!’’
‘‘அது மாதிரிதான்பா பாட்டி கதையும். பாட்டியோட கல்வியை இந்த சமூகம் பறிச்சி அவங்கள யோசிக்க விடாம செய்திருக்கு. பாட்டியோட பொருளாதார சுதந்திரத்தையும் இந்த சமூகம் பறிச்சிருக்கு. பாட்டி நாலு ஊர் சுத்துற மாதிரியும் இந்த சமூகம் அவங்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கலை.
நீங்க அறிவாளி. நிறைய புத்தகம் படிச்சிருக்கீங்க. நிறைய விஷயம் தெரியும். நீங்களே பத்து நாள் தாங்க முடியாம மெகா சீரியல் பக்கம் வந்துட்டீங்க.
அப்போ 65 வருஷமா சிந்தனை சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், பண்பாட்டு சுதந்திரம் இந்த மூணும் பறிக்கப்பட்ட பாட்டி மெகா சீரியல் பாக்குறதுல என்ன தப்புப்பா?’’
‘‘புரியுதும்மா’’ என்றார் அப்பா.
அப்பாவின் முதுகை நட்பாய் தட்டிக் கொடுத்தாள் மகள்.
Share