தினம் ஒரு கதை - 104

தினம் ஒரு கதை - 104

‘‘அப்பா, நான் அயர்ன் பண்ணிக் கொடுக்கிறேன்’’ என்றான் மகன். அப்பாவும் மகனிடம் அயர்ன் பாக்ஸைக் கொடுத்துவிட்டு அருகில் இருந்த போஸ்ட் ஆபீஸுக்கு போய்விட்டார்.

அவர் கடந்த ஐந்து வருடங்களாக 80 வீடுகள் இருக்கும் அந்த அபார்ட்மென்டில் வண்டி போட்டு அயர்ன் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகன் கல்லூரி படிக்கிறான். விடுமுறை தினங்களில் அப்பாவுக்கு உதவி செய்வான்.

போஸ்ட் ஆபீஸ் போய்விட்டு அப்பா திரும்பியபோது மகன் வேலையை முடித்திருந்தான். ‘‘நானே துணியைக் கொண்டு போய் கொடுத்துட்டேன்பா’’ என்றான்.

அதன்பின் அப்பாவும் மகனும் வீட்டுக்கு வந்து அம்மா பரிமாற மதிய உணவை சாப்பிட்டார்கள். ஏனோ மகன் முகம் வாடிப்போய் இருந்தது.

‘‘என்னப்பா? உனக்குப் பிடிச்ச கூட்டு, பொரியல்தானே இருக்கு. ஏன் ஒருமாதிரி சாப்பிடுறே’’ என்று அம்மா கேட்டதற்கு அவன் அமைதியாகவே இருந்தான். மதியம் சிறு தூக்கம் போட்டுவிட்டு அப்பா மறுபடியும் கடைக்கு வந்தார். மகன் வழக்கம் போல கிரிக்கெட் விளையாடப் போகாமல், படுக்கையிலேயே சுருண்டு கிடப்பதை கவனித்தார். அவருக்கு சந்தேகம் வந்தது.

மகன் துணி அயர்ன் செய்து கொடுத்த இரண்டு வீடுகளில் முதல் வீட்டுக்குச் சென்று பணிவுடன் கேட்டு அத்துணிகளை சோதித்தார். அவை ஒழுங்காக இருந்தன. இரண்டாவது வீட்டுக்குச் சென்று சோதித்தார். அதில் நடுவில் இருந்த விலையுயர்ந்த சட்டையை சோதிக்கும்போது, அதில் சூடு பட்டு இருந்த ஓட்டையைக் கண்டார்.

அதை மட்டும் வெளியே எடுத்து அதன் சொந்தக்காரரிடம் காட்டி, ‘‘ஐயா, இது நான் செய்த தவறுதான். மன்னித்துவிடுங்கள். பயத்தால் மறைத்து விட்டேன். மனது கேட்காமல் மறுபடியும் வந்தேன். இதன் விலையை வேண்டுமானால் நான் கொடுத்து விடுகிறேன்’’ என்றார்.

சட்டையின் சொந்தக்காரர் அதிர்ச்சி அடைந்து சட்டையைப் பார்த்தார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். பிறகு, ‘‘நல்ல வேளை, இன்றே சொன்னீர்கள். நாளை இதைத்தான் ஒரு விழாவுக்குப் போட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தேன். கடைசி நேரத்தில் சட்டையில் ஓட்டை இருப்பது தெரிந்திருந்தால் மிக எரிச்சலாகி இருப்பேன். பரவாயில்லை. எனக்கு பணம் எதுவும் வேண்டாம். இது மாதிரி தவறுகள் நடக்கும்தான்’’ என்று சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வந்து அப்பா தன் வேலையைத் தொடர்ந்தார்.

இரவானது. மகனுக்கு சப்பாத்தியும் கோழி குருமாவும் வாங்கி வந்தார். மகன் அப்போதும் படுக்கையிலேயே படுத்திருந்தான். அவனை எழுப்பி, ‘‘தம்பி, நீ மேல் வீட்டுக்காரர் சட்டையை பாழ்படுத்தினதுதான் உன் கவலைக்குக் காரணம் என்றால் அதை மறந்து விடு. அதை நான் தீர்த்து விட்டேன்’’ என்றார்.

மகன் திகைத்தான். ‘‘அப்பா, உங்களுக்கு எப்படி இது தெரியும்? எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’’ என்று தடுமாற்றத்துடன் கேட்டான்.

‘‘உன் முகத்தை வைத்து யூகம் செய்து போய் கேட்டு வாங்கிப் பார்த்தேன். சட்டையில் ஓட்டை இருந்தது. விஷயத்தை நேரடியாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன். அவர் விட்டுவிட்டார்.’’

‘‘சாரிப்பா, பயத்துல அதை மறைச்சிட்டேன்.’’

‘‘இது மாதிரி சேவைத் தொழிலில் தவறு செய்வது பிரச்னை இல்லை தம்பி. அதை மறைப்பதுதான் தவறு. வாடிக்கையாளரிடம் நேரடியாக தவறை ஒப்புக் கொண்டால், அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களே உனக்கு உதவியும் செய்வார்கள். கூடுமானவரை உன் தவறை மறைக்காதே. ஒருவேளை வாடிக்கையாளர் கடுமையாக நடந்து கொண்டால், அந்த அனுபவம் அடுத்த தவறை செய்யாமல் கவனமாக இருக்க உதவும். எல்லாமே இங்கே அனுபவம்தான். பிரச்னையை நேரடியாக சந்தித்து தீர்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.’’

பையனுக்கு அழுகையாக வந்தது. ‘‘ரொம்ப தேங்ஸ்பா’’ என்று கண்கலங்கினான்.

‘‘நீ சாப்பிடு’’ என்று அப்பா மகனுக்கு சப்பாத்தியைப் பிரித்துவைத்து பரிமாறினார். அம்மா தண்ணீர் கொண்டுவந்து வைத்தார். மகன் குருமாவைத் தொட்டு அப்பாவுக்கு அன்புடன் ஒரு வாய் ஊட்டிவிட்டான்.

அன்றிரவு அந்தக் கல்லூரி மாணவன் வாழ்க்கையில் இதுவரை அல்லாத நிம்மதியான தூக்கத்தைத் தூங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu