தினம் ஒரு கதை - 102
தினம் ஒரு கதை - 102
காலையில் கண்விழித்த அந்த 10 வயது குட்டிப்பெண்ணுக்கு மனம் நிறைந்த சந்தோஷம். அவள் கண்முன்னே அழகான பொம்மை ஒன்று இருந்தது. அது ஒரு ‘ஹம்டி டம்டி’ பொம்மை. முட்டை மாதிரி தலை பெரிதாக இருந்தது. அழகான மஞ்சள் நிறத்தில் இருந்தது. இரண்டு கைகள், கால்கள் என்று நீளமாக கார்ட்டூன் சித்திரம் போலான பொம்மை அது. படுக்கையில் படுத்தபடியே அதை உருட்டி உருட்டிப் பார்த்தாள்.
அங்கே வந்த அப்பா, ‘‘ஹலோ மேடம். என்ன பொம்மையை பாத்துட்டே இருக்கீங்க?’’ என்றார்.
‘‘இந்த பொம்மை க்யூட்டா இருக்குப்பா!’’
‘‘அது ஜெம்ஸ் பொம்மையாம். உன் அத்தை வெளிநாட்டுல இருந்து வந்திருக்காங்க. நேத்து ஆபீஸ்ல வந்து அண்ணனைப் பாக்கும்போது கொடுத்தாங்க. அடுத்த வாரம் வீட்டுக்குக் குடும்பத்தோட வருவாங்க.’’
‘‘ஹை... அத்தை வர்றாங்களா? ஜாலி’’ என்று துள்ளிக் குதித்து எழுந்தாள்.
அந்த பொம்மையை வைத்துக் கொண்டே பல் துலக்கினாள். ஒரு கையாலேயே முகம் கழுவினாள். காலை பால் குடிக்கும்போது பொம்மையை அருகிலேயே வைத்துக் கொண்டாள். சாப்பிடும்போதும் அப்படித்தான்.
அப்போது வீட்டு வேலை செய்யும் பெண்மணி வந்தார். அவருடன் ஆறு வயது சின்னப் பையனும் வந்தான். அவன் பொம்மையைப் பார்த்து, ‘‘அக்கா, பொம்மையைக் காட்டுங்க’’ என்றான்.
‘‘ம்ஹும்... காட்ட மாட்டேன்.’’
இவள் அம்மா கண்டித்தார். ‘‘ஏய், அவன் சின்ன பையன். ஆசையா கேக்குறான். கொஞ்சம் காட்டேன்!’’
‘‘முடியாது. இது என் அத்தை எனக்கு வாங்கிக் கொடுத்த க்யூட் பொம்மை. அவனுக்கெல்லாம் காட்ட மாட்டேன்’’ என்று அவள் அறையில் கதவை சாத்திக் கொண்டு இருந்து கொண்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து வெளியே சென்றாள். கதவருகே அப்பாவியாய் அவன் இருந்தான். ‘‘அக்கா... பொம்மை தலை தலை’’ என்று தலையைக் காட்டினான்.
மறுபடியும் அறைக்கு வந்து பொம்மையின் தலையைப் பார்த்தால். ஆம், அதில் ஒரு மூடி இருக்கிறது. அதை திறந்து பார்த்தாள். பொம்மையின் தலை உள்ளே ஜெம்ஸ் மிட்டாயைப் போட வேண்டும் போலிருக்கிறது. பொம்மையை அவள் அறையிலேயே வைத்துக்கொண்டு, அவளிடம் இருந்த ஜெம்ஸ் மிட்டாயை அதில் போட்டாள். தேவைப்படும்போது மூடியைத் திறந்து ஒவ்வொன்றாய் தின்றாள்.
அறையை விட்டு வெளியே வரவே இல்லை. மதிய உணவை அங்கேயே சாப்பிட்டாள். மாலை மூன்று மணிக்கு வெளியே வரும்போது அந்த சிறுவன் அங்கேயே இருந்தான். இவளைப் பார்த்ததும் ‘‘அக்கா’’ என்று சட்டென்று பொம்மையைப் பிடுங்கிவிட்டான். ஒரு விநாடி நேரத்தில் அவனிடம் பொம்மை போனது. இவளுக்கு ஆத்திரம்.
‘‘பொம்மையைக் குடுடா’ என்று பிடுங்கிக்கொண்டு அவனைத் தள்ளிவிட்டாள். அவன் சோபாவில் பொத்தென்று விழுந்தான். வேலை செய்யும் அக்கா, தன் மகனை கண்டித்து வீட்டுக்கு இழுத்துச் சென்றார். அவன் அழுதுகொண்டே, ‘‘பொம்மை கை... அக்கா பொம்மை... கை... கை...’’ என்றான்.
இவளுக்கு அவனைப் பிடிக்கவே இல்லை. அவன் போனதும், ‘ஏன் அவன் பொம்மை கை என்றான்’ என்று பொம்மையின் கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தாள். கையை அப்படி இப்படி அசைத்தாள். என்ன ஆச்சர்யம். ஒரு ஜெம்ஸ் மிட்டாய் கீழே இருந்த ஒரு ஓட்டை வழியே வெளியே விழுந்தது.
‘ஓஹோ... தலைப் பக்கம் இருக்கும் மூடியைத் திறந்து உள்ளே மிட்டாயைப் போட்டு இப்படி கையை அசைத்து கீழே விழும்போது ஒவ்வொன்றாய் தின்ன வேண்டும் போல. இதை சொல்லத்தான் அவன் காத்திருந்திருக்கிறான். நான் அதைத் தவறாக நினைத்து விட்டேனே’ என்று வருந்தினாள். ‘இனிமேல் இப்படி அவசரப்பட்டு யாரையும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது’ என்று நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் அந்த தம்பிக்காகக் காத்திருந்தாள். அவன் வரவில்லை. வேலை செய்யும் அக்கா, ‘அவனுக்குக் காய்ச்சல்’ என்றார். இவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அந்த அக்காவிடம் அடம்பிடித்து, அவர் வீட்டுக்கே சென்றாள். அங்கே அவன் வதங்கிய கொத்தமல்லி இலை மாதிரி காய்ச்சலில் சுருண்டு படுத்திருந்தான்.
இவள் அந்த ஹம்டி டம்டி ஜெம்ஸ் பொம்மையை அவனுக்கே பரிசாகக் கொடுத்தாள். அவன் உற்சாகமாக, ‘‘இல்லக்கா. இந்த பொம்மை உங்க வீட்லயே இருக்கட்டும். நான் வரும்போது சேர்ந்து விளையாடுவோம். சேர்ந்து விளையாடத்தானே பொம்மை செய்றாங்க அக்கா’’ என்றான்.
அவள் அப்படியே அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். ஆம், சேர்ந்து விளையாடத்தானே பொம்மை. பகிர்ந்து கொள்ளத்தானே வளங்கள். தனியே சாப்பிடும் சாக்லேட்டுக்கு என்ன சுவை இருக்கப் போகிறது? கடித்து நட்பிடம் பகிர்ந்து சாப்பிடும் சாக்லேட் அல்லவோ உண்மையான இனிப்பு.
Share