தினம் ஒரு கதை - 100
தினம் ஒரு கதை - 100
பழுப்பு நிற முயலும் கறுப்பு நிற முயலும் மான் வைத்த விருந்துக்கு சென்று கொண்டிருந்தன. இதில் பழுப்பு முயல் தந்திரசாலி. கறுப்பு முயல் அப்பாவி. பல கதைகள் பேசி இரு முயல்களும் சென்றபோது, கறுப்பு முயலுக்கு அங்கொரு செடியைக் காட்டியது பழுப்பு முயல்.
‘‘அதோ பார். அது ஒரு மூலிகைச் செடி. எப்பேர்ப்பட்ட வயிற்று வலி என்றாலும் அதை சாப்பிட்டால் சரியாகிவிடும். நாம் மான் அண்ணா வீட்டில் நல்ல விருந்து சாப்பிட்டு அதனால் வயிற்று வலி ஏற்பட்டால் இந்த மூலிகையைத்தான் சாப்பிட வேண்டும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்’’ என்றது. கறுப்பு முயலும் தலையை ஆட்டியது.
நீண்ட பயணத்துக்குப் பிறகு அவை மான் அண்ணன் வீட்டை அடைந்தன. மான் இருவருக்கான உணவைக் கொடுத்து, ‘‘நன்றாக சாப்பிடுங்கள்’’ என்று சென்றது. கறுப்பு முயல் விருந்தில் வாய் வைக்கப் போகும்போது பழுப்பு முயல் அலறியது. ‘‘ஐயோ, எனக்கு வயிறு வலிக்கிறதே. நான் காட்டிய மூலிகையைக் கொஞ்சம் பறித்து வாயேன்’’ என்றது. கறுப்பு முயல் பதறிப்போய் அந்த மூலிகையைப் பறிக்க ஓடியது. வெகு தூரம் போய் பறித்து விட்டுத் திரும்புவதற்குள் பழுப்பு முயல் மொத்த விருந்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது.
கறுப்பு முயல் மூலிகையை வைத்துக்கொண்டு முழித்தபோது, ‘‘அடடா! நீ அந்தப் பக்கம் போவதற்குள் வயிற்று வலி சரியாகிவிட்டது. நீயோ வருவதாயில்லை. அதனால் நானே எல்லா உணவையும் சாப்பிட்டுவிட்டேன். நீ வேண்டுமானால் வெற்றிலை போட்டுக் கொள்ளேன்’’ என்று வெற்றிலை பாக்கை கறுப்பு முயலிடம் நீட்டியது. கறுப்பு முயல் எரிச்சலோடு மான் வீட்டில் படுத்திருந்தது.
அப்போது பழுப்பு முயல் பெரிய மூட்டையைத் தூக்கி வந்தது. அதில் மானின் தோட்டத்தில் திருடிய பீட்ரூட் கிழங்கு இருந்தது. ‘‘விருந்து வைத்தவர் தோட்டத்திலேயே திருடுவது முறையா?’’ என்று கேட்டுவிட்டு கறுப்பு முயல் மீண்டும் தூங்கிவிட்டது. ஆனால் பழுப்பு முயல் எல்லா பீட்ரூட்டையும் தின்று விட்டு, அதன் சிவப்புக் கறையை மட்டும் தூங்கும் கறுப்பு முயலின் உடலில் தேய்த்து விட்டு ஒளிந்து கொண்டது.
பீட்ரூட் தோட்டத்தில் யாரோ திருடிவிட்ட கடுப்பில் வீட்டுக்குள் வந்த மான் குடும்பத்தார், கறுப்பு முயல் உடலில் இருந்த பீட்ரூட் கறையை மோப்பம் பிடித்து ‘‘நீதான் திருடன்’’ என்று நையப் புடைத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
கறுப்பு முயல் தனக்கு நேர்ந்த அநீதியை தன் நண்பன் வெள்ளை முயலிடம் சொன்னது. அதைக் கேட்ட வெள்ளை முயல் கொதித்தது. ‘‘நான் பழுப்பு முயலை பார்த்துக்கொள்கிறேன்’’ என்றது.
அடுத்த முறை மான் விருந்து கொடுத்தபோது பழுப்பு முயலோடு வெள்ளை முயல் சென்றது. வழியில் மூலிகைச் செடி இருந்தது. வெள்ளை முயல் பழுப்பு முயலிடம், ‘‘அது வயிற்று வலி நீக்கும் மூலிகைச் செடி’’ என்று காட்டியது.
வழியில் வெள்ளை முயல் தூங்கும்போது, பழுப்பு முயல் மூலிகையைப் பறித்து தன் பைக்குள் வைத்துக் கொண்டது.
மான் இருவரையும் வரவேற்று விருந்து வைத்ததும் வெள்ளை முயல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, ‘‘எனக்கு வலிக்கிறது. மூலிகை வேண்டும், போய்ப் பறித்து வா’’ என்று பழுப்பு முயலை தந்திரமாக அனுப்பி வைக்கத் திட்டமிட்டது.
ஆனால் பழுப்பு முயலோ, ஏற்கனவே பறித்து வைத்திருந்த மூலிகையை எடுத்து உடனே கொடுத்தது. வெள்ளை முயல் ஏமாந்து போனது.
இரவில் வெள்ளை முயல் பீட்ரூட்டைத் திருட்டிவந்து அதன் சாற்றை பழுப்பு முயல் உடலில் தடவக் காத்திருந்தது. ஆனால் பழுப்பு முயல் தூங்காமல் இரவு முழுவதும் கண்முழித்தபடி இருந்தது. மான் குடும்பத்தார் இப்போது வெள்ளை முயலை நையப் புடைத்து அனுப்பிவிட்டார்கள்.
பழுப்பு முயலால் இருமுறையும் ஏமாற்றப்பட்ட கறுப்பு முயலும் வெள்ளை முயலும், ‘‘எதிரியின் அதே தந்திரத்தைப் பின்பற்றி எதிரியை வீழ்த்த முடியாது. புது தந்திரத்தை யோசிக்க வேண்டும்’’ என ஒன்றுக்கொன்று ஆறுதல் சொல்லிக்கொண்டன.
Share