தினம் ஒரு கதை - 34
தினம் ஒரு கதை - 34
ஒரு கிராமத்தில் அண்ணனும் தம்பியும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். திடீரென இருவருக்கும் மன வருத்தம் ஏற்படவே, தனித் தனியே பிரிந்தனர்.
தம்பி மீது தனக்கு இருக்கும் வெறுப்பை தன் தாய்மாமாவிடம் சொல்லி புலம்பினார் அண்ணன். ‘‘துளி கூட அவன் மீது அன்போ, நம்பிக்கையோ எனக்கு இல்லை’’ என்றார் அண்ணன்.
‘‘அப்படிச் சொல்லாதே. ரத்த உறவில் இப்படி இருக்க முடியாது. பிடிக்கவில்லை என்று விலகி இருக்க முடியுமே தவிர, உன் தம்பியை உன்னால் வெறுக்க முடியாது. வெளியே நீ காட்டும் வெறுப்பு எல்லாமே மாயைதான். அது உண்மையில்லை’’ என்றார் மாமா.
ஆறு மாதங்கள் கடந்தன. ஒருநாள் தம்பியும் பக்கத்து வீட்டுக்காரரும் அண்ணன் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள்.
‘‘என்ன?’’ என முறைப்பாகக் கேட்டார் அண்ணன்.
‘‘அண்ணா, உங்கள் வீட்டு பின் பக்கக் கதவில் பெரிய இடைவெளி இருக்கிறது. யாராவது கைவிட்டு தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறக்கும் ஆபத்து இருக்கிறது. மனது கேட்கவில்லை, அதனால்தான் சொல்ல வந்தேன். பத்திரமாக இருங்கள்’’ என்று சொல்லிவிட்டு தம்பி சென்றார்.
பக்கத்து வீட்டுக்காரரும், ‘‘இதையேதான் நானும் சொல்ல வந்தேன்’’ என்றார்.
இரண்டு நாள் கழித்து அண்ணன் வீட்டில் ஒரு மோதிரம் காணாமல் போய்விட்டது. கடும் கோபம் கொண்ட அவர், பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று ‘‘உமக்குதான் என் கதவு இடைவெளி விழுந்தது தெரியும். நீர்தான் அந்த மோதிரத்தை எடுத்திருக்கிறீர்’’ என்று கடுமையாக சண்டை போட்டார்.
‘‘நான் எடுக்கவில்லை. மேலும் எனக்கு முன்னே உன் தம்பியும்தானே வந்து இதை சொன்னார். ஏன் தம்பி மேல் மட்டும் சந்தேகம் வரவில்லை. தம்பி பாசம் பொங்குதோ?’’ என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்கும்போதே அண்ணனின் மனைவி மோதிரம் தரையில் கிடந்ததாக எடுத்து வந்து கொடுத்தார்.
மோதிரப் பிரச்னை முடிந்தது.
‘ஆம், தாய்மாமா சொன்னது சரிதான். ரத்த பந்தங்களுக்குள் வெறுப்பு கொள்ளவே முடியாது. என் தம்பி மேல் சந்தேகப்படாமல் இருந்ததற்கு அவன் மேலுள்ள பாசமே காரணம்’ என்று உணர்ந்தார் அண்ணன்.
பிறகு இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
Share