தினம் ஒரு கதை - 50
தினம் ஒரு கதை - 50
தொழிலதிபர் ஒருவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
அவர் அலுவலகத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்கள், மிகப்பெரிய லட்சிய ஆசைகள் எதுவுமில்லாமல் ஏனோதானோ என்று வேலை பார்த்தார்கள். வேலையை முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் அன்று அன்று கொடுப்பட்ட வேலைகளை மட்டும் செய்தார்கள்.
இவர்களை எப்படித் திருத்தலாம் என்று தொழிலதிபர் யோசித்து திணறிக் கொண்டிருக்கும்போது ரோட்டில் ஓர் இளைஞன் தஞ்சாவூர் பொம்மை விற்றுக் கொண்டிருந்து ஜன்னல் வழியே தெரிந்தது.
இவருக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றால் இஷ்டம். ஒரு நபரை அனுப்பி, அந்த பொம்மை விற்கும் இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்தார்.
‘‘இந்த பொம்மையின் சிறப்பு என்ன?’’ என்று கேட்டார்.
அது ‘தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை’ என்று சொல்லாமல், ‘‘சார், இது லட்சிய பொம்மை சார்’’ என்றான் அவன்.
‘‘எப்படி இது லட்சிய பொம்மை?’’
‘‘ஆமா சார்... நீங்க என்னதான் இந்த பொம்மையை அங்கே இங்கே அசைத்து லட்சியத்தை விட்டுத் திருப்ப முயன்றாலும், அது திரும்பவும் அதே இடத்தில் வந்து நிற்கும்... பாருங்க!’’
இதைக் கேட்டு தொழிலதிபருக்கு சிலிர்த்தது.
அந்த இளைஞனிடம் 20 பொம்மைகள் வாங்கிக் கொண்டார்.
அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களை அழைத்து தஞ்சாவூர் பொம்மையை ஆட்டிக் காட்டினார்.
‘‘நீங்கள் இங்கே வேலை பார்ப்பது சம்பளத்துக்காக மட்டுமல்ல. இந்த வேலையை கற்றுக் கொண்டு உங்களை மேம்படுத்திக் கொள்ளவும்தான். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற லட்சியம் எப்போதும் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை இந்த பொம்மையின் கீழ்பகுதி மாதிரி கனமாக உங்கள் மனதில் ஏற்றிவைத்து விட்டால், எவ்வளவுதான் கவனச் சிதறல் வந்தாலும் லட்சியத்தை விட்டு விலக மாட்டீர்கள்’’ என்று சொல்லி, அனைவருக்கும் அந்த லட்சிய பொம்மையைப் பரிசாகக் கொடுத்தார்.
இளைஞர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு, தங்களையும் வளர்த்துக்கொண்டு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார்கள்.
Share