தினம் ஒரு கதை - 72
தினம் ஒரு கதை - 72
முக்காலமும் அறிந்த ஞானி ஒருவர் தன் சீடர்களோடு சென்று கொண்டிருந்தார். அங்கே தெருநாய் ஒன்றைப் பார்த்தார். அது அழுக்காக இருந்திருந்தது. உடல்நலமின்றி சோர்ந்து படுத்திருந்தது. மக்கள் அதைப் பார்த்து ஒதுங்கிப் போனார்கள்.
அதைப் பார்த்த ஞானி, தன் தீர்க்க தரிசன அறிவால் சொன்னார். ‘‘சீடர்களே, இப்போது நாம் ஓர் ஆற்றைக் கடக்கப் போகிறோம். கடக்கும்போது ஆறு என்னை மூழ்கடித்து விடும். அது என் விதி. அதை மாற்ற முடியாது. அப்படி உயிரை விடும் நான், மறுபடியும் இந்த உலகில் உயிர் பெற்று வருவேன்.’’
‘‘இதே மாதிரி மனிதனாகவா ஐயா?’’
‘‘இல்லை. இதோ இந்த அழுக்கான தெரு நாய் சீக்கிரம் குட்டி போடும். அக்குட்டிகளில் ஒன்றாகப் பிறப்பேன்.’’
‘‘நாங்கள் உங்களை பத்திரமாக எடுத்து வளர்க்கிறோம் குருவே!’’
‘‘கூடாது. என்னை நீங்கள் வளர்க்கக் கூடாது. இந்த நாய் போல ஓர் அழுக்கான வாழ்க்கையை என்னையும் வாழச் சொல்கிறீர்களா? நாயாகப் பிறக்கும் என்னை ஒரு கோணியில் கட்டி ஆற்றில் மூழ்கடித்து விடுங்கள். நான் நாய்ப் பிறவியை விட்டு நிம்மதியாக இருப்பேன்.’’
‘‘உங்களை எந்த நாய்க்குட்டி என்று அடையாளம் காண்போம் குருவே?’’
‘‘இப்போது என் நெற்றியில் ஒரு தழும்பு இருக்கிறது அல்லவா? இதே தழும்பு நாயாகப் பிறக்கும்போதும் எனக்கு இருக்கும். மறந்துவிடாதீர்கள்’’ என்றார் ஞானி.
அவர் சொன்னபடியே ஆறு ஞானியை அடித்துச் சென்றது. சில நாட்களுக்குப் பிறகு நாய் கர்ப்பமாகி குட்டி போட்டது. சீடர்கள் வந்து பார்த்தார்கள். அதில் ஒரு நாயின் முகத்தில் ஞானிக்கு இருக்கும் அதே தழும்பு இருந்தது.
ஞானியை தூக்கிக் கொண்டு ஆற்றுக்குச் சென்றார்கள். மூழ்கடிக்கப் போகும்போது கோணிக்குள்ளிருந்து குருவின் குரல் கேட்டது. திறந்து பார்த்தார்கள்.
நாய் வடிவில் இருந்த ஞானி சொன்னார். ‘‘சீடர்களே, தயவுசெய்து என்னைக் கொன்று விடாதீர்கள். ஒரு விலங்காக பிறந்து ரசிக்கும்போது உலகம் இன்னும் அழகாகத் தெரிகிறது. இந்த வாழ்க்கையில் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கிறது. மனிதனாக இருக்கும்போது நாய்களைப் பார்த்து இழிவாக நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். சிறிய உயிர் என்றாலும், அதற்கும் இந்த உலகத்தில் வாழ, ரசிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. உயிர் வாழ்க்கையில் உயர்வும் கிடையாது. தாழ்வும் கிடையாது. அனைத்து உயிர்களும், அவற்றின் உணர்வுகளும் முக்கியமானவை என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டேன். என்னை விட்டு விடுங்கள்’’ என்று கெஞ்சினார்.
சீடர்களும் அதை ஏற்று, அவரை எதுவும் செய்யாமல் விட்டார்கள். ‘எந்த உயிரையும் கிண்டல் செய்யாமல் மதிப்போடு போற்றுவோம்’ என உறுதி எடுத்துக் கொண்டார்கள். ஞானி சந்தோஷமாக தன் குடும்பத்தை நோக்கி ஓடினார்.
Share