தினம் ஒரு கதை - 16

தாமஸ் ஜெஃபர்சன் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

அதற்குமுன் துணை ஜனாதிபதியாக இருக்கும்போது தனியே பயணம் மேற்கொள்கிறார். சூழ்நிலை காரணமாக சிறுநகரம் ஒன்றில் இரவு தங்க வேண்டிய நிலை வருகிறது.

அப்போது திடீரென பெய்த மழையில் நனைந்து, அவர் உடையெல்லாம் சேறாகிவிட்டது.

அந்த அழுக்கு கோலத்துடன் ஒரு விடுதிக்குச் சென்று, ‘‘அறை இருக்கிறதா?’’ என்றார். விடுதி உரிமையாளர் இவரின் கோலத்தைப் பார்த்து, ‘‘அதெல்லாம் இல்லை’’ என்று அலட்சியமாகச் சொன்னார்.

தாமஸ் ஜெபர்சன் வேறு விடுதி பார்த்துச் சென்று தங்கி விட்டார்.

அவர் போன பிறகு, அவர்தான் நாட்டின் துணை ஜனாதிபதி என்பதை அறிந்து விடுதி உரிமையாளர் ஓடோடிச் சென்று மன்னிப்பு கேட்டார். தன் விடுதியில் அறை இருப்பதாகவும், தோற்றத்தை வைத்து தவறாக எடை போட்டுவிட்டதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

அதைக் கேட்ட ஜெபர்சன், ‘‘ஓர் ஏழைக் குடிமகனுக்குக் கிடைக்காத உங்கள் விடுதி அறை, நாட்டின் துணை ஜனாதிபதியான எனக்கும் வேண்டாம். நன்றி’’ என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

‘யாரையும் உருவத்தைக் கண்டு எடை போடக்கூடாது’ என்ற பாடத்தை கற்றுக்கொண்டு விடுதி உரிமையாளர் திரும்பினார்.

crossmenu