ஹேண்ட்பேக் என்கிற ஆபத்து!
ஹேண்ட்பேக் என்கிற ஆபத்து!
பெரும்பாலான பெண்கள் கையில் ஹேண்ட்பேக் எடுக்காமல் வாசலைத் தாண்டுவதில்லை. உங்கள் ஹேண்ட்பேக்கில் என்ன இருக்கிறது? செல்போன், குட்டி பர்ஸ், கர்ச்சீப், ஃபேஷியல் க்ரீம், மஸ்காரா, லிப்ஸ்டிக், ஸ்டிக்கர் பொட்டு, ஐ லைனர், மேக்கப் பெட்டி என ஏகப்பட்ட அயிட்டங்கள் அதில் அடைந்து கிடக்கும். இதையெல்லாம் தாண்டி இன்னொரு ஆபத்தையும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆமாம், ‘ஒரு டாய்லெட்டில் இருப்பதைவிட அதிக அளவு கிருமிகள் பெண்களின் ஹேண்ட்பேக்கில் இருக்கின்றன’ என நிரூபித்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி.
கம்ப்யூட்டர் கீ போர்டு, செல்போன் என நாம் தினசரி பயன்படுத்தும் பல பொருட்களில் பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் நிறைய சேர்ந்து ஆபத்தை விளைவிக்கின்றன என படித்திருக்கிறோம். ஆனால் அதைவிட அதிகமாக பெண்கள் பயன்படுத்துவது ஹேண்ட்பேக்குகளை! பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டு வாசலைத் தாண்டும்போது கையில் பையைத் தூக்குகின்றனர். மாலை வீடு வரும் வரை அவர்களோடு எப்போதும் இருக்கிறது ஹேண்ட்பேக்.
பிரிட்டனில் இருக்கும் மிகப்பெரிய சுகாதார சேவை நிறுவனமான ‘இனிஷியல் வாஷ்ரூம் ஹைஜீன்’, பணிக்குச் செல்லும் பெண்களின் கைப்பைகளின் உட்புறத்திலிருந்தும் கைப்பிடிகளிலிருந்தும் மாதிரிகளை சேகரித்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இவற்றில் இருக்கும் கிருமிகளை, அலுவலக கம்ப்யூட்டர் கீ போர்டுகள், மவுஸ்கள், அலுவலக டாய்லெட்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டது.
கிடைத்த முடிவுகள் அதிர்ச்சி தருபவையாக இருந்தன.
* ஒரு சராசரி ஹேண்ட்பேக்கின் உட்புறம், அலுவலக டாய்லெட்டின் மேற்புறத்தைவிட மூன்று மடங்கு அசுத்தமாக இருக்கிறது.
* ஒரு அழுக்கான ஹேண்ட்பேக்கோ, டாய்லெட் சீட்டைவிட பத்து மடங்கு அதிக கிருமிகளோடு இருக்கிறது.
ஹேண்ட்பேக்கில் மிக அசுத்தமான பகுதி என கைப்பிடியைத்தான் குறிப்பிடுகிறார்கள். எப்போதும் அதைக் கைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வேறு ஏதாவது வேலை பார்த்துவிட்டு திரும்பவும் கைப்பிடியைப் பிடித்தபடி ஹேண்ட்பேக்கை தூக்கி வருகிறோம். எங்கெங்கோ இருக்கும் கிருமிகளை நாமே கைப்பிடிகளில் கொண்டுவந்து சேர்க்கிறோம். அங்கிருந்து நம் உடலிலும் பரவ விடுகிறோம்.
ஹேண்ட்பேக்கின் உள்ளே இருக்கும் மிக அசுத்தமான பொருள், முகத்துக்குப் பூசும் க்ரீம். எப்போதும் ஈரப்பதமாக இருப்பதால், பாக்டீரியாக்கள் போஷாக்காக வளர உகந்த சூழலை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது. அடிக்கடி திறந்து மூடும் எல்லா மேக்கப் அயிட்டங்களிலுமே கிருமிகள் ஏராளம்.
ஹேண்ட்பேக்கிற்குள் கிருமிகளைப் பரப்பும் இன்னொரு டேஞ்சர் அயிட்டம், செல்போன். பலருக்கு அது பதினோராவது விரல் போலவே இருக்கிறது. டாய்லெட் போகும்போதுகூட அதை எடுத்துப் போகிறவர்கள் பலர். எங்கெங்கிலுமிருந்து கிருமிகளைக் கடத்தி வந்து, பைக்குள் பத்திரமாக சேமிக்கிறது செல்போன்.
லெதர் ஹேண்ட்பேக்குகளில்தான் கிருமிகள் அதிகம் வளர்கின்றனவாம். அவற்றின் உட்புறம் மிருதுவாக இருப்பது, பாக்டீரியா போன்ற கிருமிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
ஃபுட் பாய்சனிங்கிற்கு காரணமாக அமையும் ஈ.கோலி, நிமோனியா, காதுகளில் நோய்த்தொற்று என பல நோய்களை ஏற்படுத்தும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா என பல கிருமிகள் சர்வசாதாரணமாக ஹேண்ட்பேக்குகளில் உலவுகின்றன. இந்த விபரீதம் புரியாமல், பலர் சாப்பிடும் அயிட்டங்கள், சாக்லெட்டுகள், மாத்திரைகளை அப்படியே பைகளில் வைத்து பயன்படுத்துகிறார்கள். பலரது குழந்தைகள் பொழுதுபோக்காக ஹேண்ட்பேக்கின் கைப்பிடிகளைத்தான் கடித்துக் கொண்டிருக்கின்றன.
ரொம்பவும் சுகாதாரமாக இருக்கும் பெண்கள்கூட ஹேண்ட்பேக்குகளை அடிக்கடி சுத்தம் செய்வதில்லை. 33 சதவீதப் பெண்கள், ‘எப்போதாவது எதையாவது தேடும்போது சுத்தம் செய்தால்தான் உண்டு’ என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். துணிகளைத் துவைப்பது போல ஹேண்ட்பேக்குகளை அலச முடியாது. ஆனால் சில முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளலாம்.
* ஈரமான கிருமிநாசினி டவல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மாதம் இரண்டு முறையாவது ஹேண்ட்பேக்கில் இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்துவிட்டு, இந்த டவலால் துடைத்து, காற்றோட்டமான இடத்தில் ஹேண்ட்பேக்கை உலர வைக்கலாம். குறிப்பாக கைப்பிடிகள், உட்புறங்களில் நன்கு துடைக்கவும்.
* ஹேண்ட்பேக்கில் இருக்கும் பொருட்களை அப்படியே எடுத்துப் பயன்படுத்த வேண்டாம். கைகளை கழுவிக்கொண்டு எடுக்கவும். பயன்படுத்திய பிறகு இறுக்கமாக மூடி வைக்கவும். ஃபேஷியல் க்ரீம் போன்றவற்றை கைகளில் எடுத்துப் பூசினால், அதிலிருக்கும் பாக்டீரியாக்களையும் முகம் முழுக்கப் பூசுகிறீர்கள் என அர்த்தம். அப்படியே நேராக முகத்தில் பூசும் வசதி கொண்ட டியூப்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
* பஞ்சில் கிருமிநாசினி நனைத்து, ஹேண்ட்பேக்கின் கைப்பிடியை தினமும் துடையுங்கள்.
* பழங்களை வாங்கி எப்போதும் ஹேண்ட்பேக்கில் வைக்காதீர்கள்.
* குழந்தைகள் ஹேண்ட்பேக்கை வைத்துக்கொண்டு கடிக்கவோ, விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.
Share
Related Posts