மணமுறிவு மருந்து அல்ல!

மணமுறிவு மருந்து அல்ல!

இந்தியாவின் விவாகரத்து தலைநகரமாக இருக்கிறது தமிழகம். தேசத்திலேயே விவாகரத்தானவர்கள்/ துணையை இழந்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் தமிழகம்தான். இங்கு பலருக்கு திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; திருமணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டில் சொர்க்கமும் நிச்சயமில்லை. ஆனால் குடும்ப நீதிமன்றத்தில் காத்திருப்பது விதியாகி விடுகிறது.

அமெரிக்க வாழ்க்கைமுறை பழகிப் போய்விட்ட நமக்கு, அங்கிருக்கும் விவாகரத்து விகிதங்களும் பழகிவிடும் போலிருக்கிறது. அங்கு நடக்கும் திருமணங்களில் பாதி விவாகரத்தில் முடிகின்றன. ‘மனைவி குறட்டை விடுகிறார்’, ‘அவள் பூனை வளர்க்கிறாள். அது எனக்கு பிடிக்கவில்லை’, ‘அவள் பயன்படுத்தும் பெர்ஃப்யூம் எனக்குத் தலைவலி ஏற்படுத்துகிறது.’ - இப்படி அற்பமான ஒரு காரணம் போதும் டைவர்ஸ் வாங்க! இதற்காக ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் மணமுறிவு வழக்குகளுக்கு ஃபீஸ்தான் கொஞ்சம் அதிகம். ‘ஃபீஸுக்கு பயந்துதான் பலபேர் டைவர்ஸ் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போனவர்கள் கூட வக்கீல்களின் டார்ச்சரால் மீண்டும் இணைந்த சம்பவங்கள் உண்டு. கிறிஸ்டோபர் லாங்க் என்பவர் தனது நண்பர் ஒருவரின் டைவர்ஸ் பற்றி புத்தகமே எழுதியிருக்கிறார். கணவனும், மனைவியும் தங்கள் கூட்டுக்குடும்பச் சொத்துக்களை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று தங்கள் வக்கீல்கள் மூலம் மோதிக் கொண்டிருந்தனர். வீட்டில் ஒரு பூனை வளர்த்தார்கள். அதை யார் பராமரிப்பது... அதற்கு ஆகும் செலவுகளை யார் செய்வது என்று நீண்ட நாட்களாக வாக்குவாதம். இது முடிவுக்கு வருவதற்குள் அந்தப் பூனை ஐந்து குட்டிகளைப் போட்டுவிட்டது. பிறகு அதற்காக ஒரு தடவை பேச்சுவார்த்தை.

கடைசியாக ஒருநாள் இருவரும் தங்களது பொதுவான நண்பர்கள் முன்னிலையில் உட்கார்ந்து பேசி கணக்கு போட்டுப் பார்த்தபோது, அவர்கள் எந்த சொத்துக்காக சண்டை போடுகிறார்களோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வக்கீல் பீஸ் கொடுத்திருப்பது புரிந்தது. ‘உன்னால்தானே இப்படி...’ என இருவரும் மோதி, பிறகு ஊடல் முடிந்து ரெண்டு பேரும் இணைந்தேவிட்டனர்.

மைக்கேல் டேனியல் என்ற இன்னொரு ஆசாமி, ‘டைவர்ஸ் வழக்கில் சட்டரீதியான செலவைக் குறைப்பது எப்படி?’ என ஒரு புத்தகம் எழுதி அது விற்பனையில் சக்கை போடு போட்டது. இத்தனைக்கும் அவர் வழக்கறிஞர் கிடையாது. தனது மனைவியை டைவர்ஸ் செய்த அனுபவம் பெற்றவர். அந்த அனுபவத்தை அப்படியே புத்தகமாக்கிவிட்டார். கோர்ட்டில் டைவர்ஸுக்கு என்ன காரணம் சொன்னால் எடுபடும்... அதற்கு என்னென்ன ஆதாரங்கள் தேவை... வக்கீலை எப்படி செலக்ட் செய்வது? இப்படி ஏகப்பட்ட டிப்ஸ்கள் அந்த புத்தகத்தில்!

யோசித்துப் பார்த்தால் மனித சமுதாயம் தொப்புள்கொடி உறவைத் தாண்டி முதலில் உருவாக்கிய புதிய உறவு திருமணபந்தம் தான்! ‘கண்ணோடு கண் கலந்த ஒரு ஆணும், பெண்ணும் அவர்களது குடும்பம் மகிழவும், எதிரிகள் பொருமவும் இனிய இல்லறம் நடத்துவதைப் போல வியக்கத்தக்க விஷயம் வேறெதுவுமில்லை’ என்று கி.மு ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் ஹோமர் சொல்கிறார். ‘மன்னிக்கும் குணமுடைய இருவரின் பிணைப்பு தான் நல்லதிருமணம்’ என்பது ரூத்பெல் கிரஹாம் என்பவரின் கண்டுபிடிப்பு. ‘சந்தோஷமான திருமண உறவின் ரகசியம் என்ன என்பது இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது’ என்கிறார் ஹென்றி யங்மேன்.

தறிகெட்ட அளவில் நடக்கும் டைவர்ஸ்களால் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் ஒற்றை பெற்றோரிடம் குழந்தைகள் வளர வேண்டிய பரிதாபம் ஏற்படுகிறது. அந்தக் குழந்தைகள் சின்னவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகளைப் பார்த்து மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிவிடுகின்றன. எதிர்காலமே இருண்டு போகிறது. இதுபற்றி எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் பயம் காட்டுவதாக இருக்க, அமெரிக்காவே அதிர்ந்து போயிருக்கிறது. நம்ம ஊரில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுவது மாதிரி அமெரிக்காவில் இப்போது திருமண பாதுகாப்பு வாரம் நடத்துகிறார்கள். அக்டோபர் 12 முதல் 18 வரை இந்த வாரம்!

திருமண உறவுக்கு ஐயாயிரம் வருஷ வரலாறு உண்டு; அந்தக் காலத்தில் விவாகரத்து இல்லை. பிரிட்டனில் முதன்முதலாக 1670ல் டைவர்ஸ் அமலானபோது உடல்நிலைக் கோளாறுகளைக் காரணம் காட்டி மட்டுமே டைவர்ஸ் வாங்கமுடியும். அதன்பிறகு கூட டைவர்ஸ் பெற்ற இருவரில் யாரேனும் ஒருவர் சாகும் வரை, அடுத்தவர் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. 1857ல் இது முறைப்படி சட்டமாக்கப்பட்ட போது பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. தனது மனைவி தவறான நடத்தையில் ஈடுபட்டதாக சொல்லி கணவன் விவாகரத்து வாங்கலாம். ஆனால் மனைவி தனது கணவனை விவாகரத்து செய்யவேண்டுமானால், கணவன் கொடூரமானவன், சித்திரவதை செய்கிறான், என்று காரணங்கள் சொல்வதோடு மட்டுமில்லை... அவன் வேறு யாருடனோ கள்ள உறவு வைத்திருப்பதாகவும் நிரூபிக்க வேண்டும்.

பல நாடுகள் இப்போது டைவர்ஸை சுலபமாக்கிவிட்டன. துருக்கியில் கணவன் ஒரு கப் காபி தர மறுத்தான் என்ற காரணத்துக்காகக் கூட டைவர்ஸ் வாங்க முடியும். டொமினிக்கன் குடியரசில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரே நாளில் டைவர்ஸ் தருகிறார்கள். சும்மா ஜாலியாக டூர் போய் ஷாப்பிங் செய்வது மாதிரி டைவர்ஸ் வாங்கி வந்துவிடலாம். தம்பதிகள் மனமொத்து பிரிவதாக இருந்தால், அவர்களில் யாராவது ஒருவர் கோர்ட்டுக்கு வந்தால் போதும். ஹாலிவுட் பிரபலங்கள் பலர் இங்கே போய் டைவர்ஸ் வாங்குகிறார்கள். பல திருமணங்கள் செய்து ஏகப்பட்ட டைவர்ஸ்களைப் பார்த்த எலிஸபெத் டெய்லர், மைக்கேல் ஜாக்ஸனை மணந்த லிஸா பிரீஸ்லி, பாடகி மரியா கெரே என பலர் இங்கு டைவர்ஸுக்காக ரெகுலராக வருகிறவர்கள்.

அமெரிக்கா போலவே சாதாரண காரணங்களுக்கு விவாகரத்து கேட்கும் கலாசாரம் இங்கும் வந்துவிட்டது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் இதற்கான நிஜக்காரணம் வேறாக இருக்கும். பெரும்பாலும் பணம், வாழ்க்கையில் குறுக்கிடும் இன்னொரு அழகான பெண், கணவன் மனைவிக்கிடையே புரிதல் இல்லாத வாழ்க்கை! (‘டைவர்ஸுக்கு முன் என்ன நடந்தது என யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். அந்த ஜோடி தங்களுக்குள் மனம்விட்டுப் பேசி பல மாதங்கள் ஆகியிருக்கும். ஒளிவுமறைவின்றி தங்கள் மனதைத் திறந்துகொள்ளாததுதான் நிஜமான காரணம்’ என்று சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.)

இளம் வயதில் கல்யாணம்... பெரும்பாலும் அது காதலின் முடிவாக இருக்கும். ஆண்கள் கண்களாலும், பெண்கள் காதுகளாலும் காதலிக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியும் அழகை மீறி வேறெதையும் பார்க்க விடாமல் காதல் மறைக்கிறது. அவன் சொல்லும் வார்த்தைகளே வேதம் என பெண்மனம் நினைக்கிறது. திருமணத்துக்கு பிறகு வேறு பார்வையில் உலகத்தைப் பார்க்கிறபோது ஏமாந்துவிட்டதாக இரண்டு மனமும் நினைக்கிறது. ஒரு டைவர்ஸுக்கான பிள்ளையார்சுழி அப்போதே போடப்பட்டு விடுகிறது. மனதைப் பூட்டி சாவியைத் தொலைத்துவிடும் தம்பதிகள், அதன்பிறகு அதைத் திறக்க நினைப்பதே இல்லை!                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu