சிசேரியன் தவிர்க்க சிம்பிள் வழிகள்!

சிசேரியன் தவிர்க்க சிம்பிள் வழிகள்!

ஓர் உயிருக்குள் இன்னோர் உயிர் வளர்கிற அந்த பத்து மாதங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் புது ஜென்மம்; ஒவ்வொரு தாய்க்கும் மறு ஜென்மம். முந்தைய தலைமுறை பாட்டிகள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் சாதாரணமாக ஏழெட்டு மறு ஜென்மங்களை எடுத்திருப்பார்கள். மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல், ஸ்கேன், செக்கப், கவனிப்பு எதுவும் இன்றி இயல்பான வாழ்க்கை முறையில் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் அனைத்துமே சுகப்பிரசவம்தான். ‘சிசேரியன்’ என்கிற வார்த்தையைப் பெரும்பாலான பாட்டிகள் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

கடந்த முப்பது, நாற்பது வருடங்களில் நிலைமை தலைகீழ். விஞ்ஞானம் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மருத்துவம் எதையும் துல்லியமாக மதிப்பிடுகிற வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. கருவுற்ற நாளில் இருந்து பிரசவிக்கிற நாள் வரை ‘என்னென்ன செய்ய வேண்டும்’ என்பதை அட்டவணை போட்டு கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் அட்வான்ஸாக, பிறக்கப்போகிற பிள்ளைக்கு கருவுற்ற காலத்திலேயே பள்ளிக்கு அட்மிஷன் முன்பதிவு செய்கிற வரை வாழ்க்கைச் சூழல் மாறி இருக்கிறது. ஆனால், சுகப்பிரசவம் என்பது அதிசயச் செய்தி ஆகிவிட்டது. ‘சிசேரியன்’ என்று கத்தி முனையில் பிள்ளைகள் அதிகம் பிறப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. நம்முடைய உணவு முறையிலிருந்து உடல் ஆரோக்கியம் வரை இருக்கும் குறைபாடுகள் ‘சிசேரியனுக்கு’ முதல் காரணம். அறம் குறைந்து, சுயநலம் மிகுந்துபோன மருத்துவ வளர்ச்சி இன்னொரு முக்கிய காரணம். மூன்றாவது காரணம், மூடநம்பிக்கையை வேராகக் கொண்டது. குறிப்பிட்ட நல்ல நேரத்தில், நல்ல நாளில் பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஜோசியர் சொல்லிவிட்டால், மருத்துவர்களை வற்புறுத்தி பெற்றோர்களே சிசேரியன் செய்ய வைக்கிறார்கள்.

தாய்க்கும் குழந்தைக்கும் நலம் தரும் சுகப்பிரசவம் நிகழ சில யோசனைகள் இங்கே...

* தாய் & சேய் உயிர் காக்க வேண்டிய அவசியம் நேரும்போது மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நிகழ வேண்டும் என்கிற விழிப்புணர்வு இன்று அனைவருக்கும் அவசியமாகிறது.

* ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்பது வீட்டுப் பெரியவர்களின் மனதில் அழுத்தமாகப் பதிய வேண்டிய கருத்து. யாரோ ஜோசியர் குறித்துக் கொடுத்த நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என ஆரோக்கியமான சுகப்பிரசவத்திற்கு இடம் தராமல், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பது பெருந்தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

* தாயின் கர்ப்ப காலத்தில் முறையான உணவு, செக்கப், உடற்பயிற்சி, பராமரிப்பு, மன தைரியம் போன்ற பல காரணிகள் சுகப்பிரசவத்தைத் தீர்மானிக்கின்றன. எல்லாவற்றிலும் அவசரம் காட்டும் காலகட்டத்தில், குழந்தைப் பிறப்பில் ‘அவசரம், பரபரப்பு’ தலையிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

* கூட்டுக்குடும்பமாக வாழும்போது, கருவுற்று இருக்கும் தாய்க்கு, அனுபவம் மிகுந்த பெண்மணி யாராவது ஒருவர் உடன் இருந்து நேரடியாக கவனித்துக் கொள்வார். ஒரு நர்ஸ் உடன் இருப்பதற்கு சமமான கவனிப்பாக அது அமையும். அதிர்ந்து பேசக்கூடாது, வேகமாக நடக்கக்கூடாது உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களிலிருந்து, எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதுவரை கவனித்துப் பார்த்துக் கொள்வார். தனிக்குடித்தன அமைப்பில் அந்த வசதி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கர்ப்ப காலத்தில் எப்படியாவது அனுபவம் உள்ள ஒருவரை கருவுற்று இருக்கும் தாயுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. ‘இப்படி உட்காராதே, அப்படி படுக்காதே, குனிந்து நிமிர்ந்து வேலை செய்’ என்று அனுபவசாலிகள் சொல்லும் ஆலோசனைகள் இந்தக் காலத்து பெண்களுக்குக் கசப்பாக இருந்தாலும், மருந்தாக நினைத்து கடைப்பிடிக்க வேண்டும்.

* வயிற்றில் உள்ள குழந்தை தானாக வெளியே வர வேண்டுமெனில், இடுப்பு எலும்பு கொஞ்சம் விட்டுக்கொடுப்பது அவசியம். 30 வயதுக்குமேல் திருமணம் செய்து, குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட்டு, வேண்டும்போது பெற்றுக்கொள்ளும்போது, உடல் முழுவதுமாக சுகப்பிரசவத்திற்கு ஒத்துபோவதில்லை. அதனால், ‘காலத்தே பயிர் செய்வது’ அவசியம்.

* நெருக்கமான உறவுமுறையில் திருமணம் செய்து கொள்வது 4 சதவிகித சிசேரியன்கள் நடக்கக் காரணம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். உறவுமுறை திருமணங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பிறக்கப்போகிற குழந்தைகள்தான். பல்வேறு சிக்கல்களோடு குழந்தை கருவில் வளரும். மேலும் சிக்கல் வராமல் தடுக்க, முன்கூட்டியே சிசேரியன் செய்வது அவசியமாகிறது. கண்டிப்பாக நெருக்கமான உறவுமுறைகளில் திருமணம் செய்யக்கூடாது.

* கொஞ்சம் வசதியான சூழலில் வளர்ந்த பெண்களுக்கு வேலை செய்வது கடினமாக இருக்கும். கர்ப்ப காலத்தில், ‘கவனித்துக் கொள்கிறோம்’ என்ற பெயரில் எந்த வேலையையும் செய்யவிடாமல் ‘சும்மா’ இருக்க வைத்துவிடுகிறார்கள். இதனால் உடல் எடை கூடிவிடுவதோடு, உடலின் செயல்திறனும் குறைந்து விடுகிறது. வயல்வெளியில் வேலை செய்துகொண்டு, பிரசவ வலி ஏற்பட்டதும், ஒரு மரத்தடியில் குழந்தையைப் பெற்று, சில நாட்களில் அதே மரத்துக் கிளையில் தொட்டில் கட்டி குழந்தையைப் போட்டுவிட்டு வேலை செய்கிற கிராமத்துப் பெண்களின் உழைப்பு நகரத்து பெண்களிடம் இல்லை. சிசேரியன் நடப்பது அதிகமாக நகரத்துப் பெண்களுக்குதான் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியம்.

* கர்ப்ப காலத்தில் ஹார்லிக்ஸாக குடித்தால் உடனே உடல் ஆரோக்கியம் வந்துவிடாது. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதை உணர்ந்து, டீன் ஏஜ் பருவத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ‘ட்யட்’ என்கிற பெயரில் உடல் வருத்தி, ஒல்லியாக இருப்பதற்கு சத்து குறைவான உணவு முறையை கடைபிடித்தால், பின்னாளில் சிசேரியன் உறுதி.

* இன்னும் ஒருபடி மேலே போய், ‘அழகு’ பற்றிய சிந்தனையில், அதிக எடை போடக்கூடாது என்கிற காரணத்தால், பிரசவ காலத்தில் டயட் இருக்கிறவர்களும் உண்டு. இரண்டு உயிர்களுக்கு சக்தி வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல், உணவு முறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்வதும் அதிகரித்து வருகிறது. ‘நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், கொழுப்புவகை உணவுகள்’ என ஆரோக்கியத்துக்கு எதிரான உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு, சுகப்பிரசவத்திற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* வலி பொறுத்துக் கொள்ளும் மனநிலை இப்போது பெண்களுக்கு குறைந்து வருகிறது. வலி தாங்கும் சக்தியைப் பெறாமல், வலியை குறுக்கு வழியில் எதிர்கொள்ள, சில பெண்கள் ‘சிசேரியன் செய்து விடுங்கள்’ என்று கேட்கிறார்கள். அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் வேண்டும்.

* கர்ப்ப காலத்தில் கைகுத்தல் புழுங்கல் அரிசி பயன்படுத்துவார்கள். பிள்ளை பெறும் பெண்ணிற்கு அலுமினிய பாத்திரத்தில் சமைக்காமல் மண் சட்டியில் சமையல் நடக்கும். சோறு ஒரு வேளைதான். நாட்டு அவரைக்காய், தனியா, காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்து சாதத்தில் கலந்து கொடுத்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

அனுபவத்தின் அறிவுரைகளையும், விஞ்ஞானத்தின் மாற்றங்களையும் சரியாகக் கலந்து கர்ப்ப காலத்தில் கவனத்தோடு இருந்தால், சிசேரியனைத் தவிர்த்து சுகப்பிரசவம் நிகழ்வதை உறுதி செய்யலாம். அது தாய்க்கும் நல்லது; சேய்க்கும் நல்லது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu