பிரார்த்தனையும் பக்தியும்
பிரார்த்தனையும் பக்தியும்

பிரார்த்தனை, பக்தி, நம்பிக்கை, மனசாட்சி பற்றி மகாத்மா காந்தி சொன்ன
சில பொன்மொழிகள் இங்கே:
பிரார்த்தனை அல்லது இறை வணக்கம் என்பது, வீட்டில் உள்ள
பாட்டியின் பொழுதுபோக்கல்ல. சரியாகச் செய்தால் மிகச் சிறந்த
ஆயுதம் அது.
ஒருவனுக்கு எந்த அளவுக்கு உள்ளொளி இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் பிரார்த்தனை அவனிடம் இருக்கும்.
எவனொருவன் தினமும் இறை வணக்கத்தில் ஈடுபடுகிறானோ அவன்
தினம் தினம் புதியதைச் சேர்க்கிறான். அந்தப் புதிய விஷயங்களை
எதனுடனும் ஒப்பிட முடியாது.
மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செயல் எதுவாக இருக்கும்
என்றால், அது தலைவணங்கிச் செய்யப்படும் இறைவணக்கமே. ஆயிரம்
பேர் தலை வணங்குவதை விட ஒருவர் செய்யும் இறைவணக்கமே
பெரிது.
பிரார்த்தனை என்பது இறைஞ்சுவதல்ல. அது ஆன்மாவின் ஏக்கம்.
ஒருவனின் பலவீனத்தின் தினப்படியான வெளிப்பாடு. அதனால்தான்
பிரார்த்தனையின்போது வார்த்தைகளை விட இதயம் அதிகமாகப்
பயன்படுகிறது.
கவலையைப் போல உடம்பை அரிப்பது வேறு ஒன்றும் இல்லை.
நீ கடவுளை நம்புவதாக இருந்தால் வீணாக ஏன் கவலைப்பட்டுக்
கொண்டிருக்கிறாய்? கவலைகளை அவரிடம் விட்டு விடு.
இறைவணக்கம், காலையின் சாவி; மாலையின் பூட்டு.
நம்பிக்கை காரணத்துடன் இருக்க வேண்டும். குருட்டாம்போக்கு
நம்பிக்கை எளிதில் மறைந்துவிடும்.
இந்த உலகத்தில் நிறைய பேர் பசியுடன் உள்ளனர். அவர்கள் முன்பு
கடவுள் ரொட்டித் துண்டாக மாற மாட்டார்.
கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது
மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவை விட
எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க
மாட்டேன்.
சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும்; ஆகையால்
சேவையே என்னுடைய மதம்.
கடவுள் பரிசுகளையும் தண்டனைகளையும் கொடுத்துக் கொண்டிருப்பவர்
அல்ல. அவர் தாமே ஒரு முகவராக செயல்படுபவருமல்ல. ஆனால்,
உடம்பு எடுத்த ஆன்மாக்கள் விடுதலை பெற்றபின் அடையக்கூடிய
ஓர் பரமாத்மாவை நாம் கற்பனை செய்ய முடியுமென்றால் அதுவே
கடவுளாகும்.
எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு அரசன் மாதிரியான
கடவுள் தேவையில்லை.
என்னுடைய கருத்தில் கடவுளின் பெயரும் கடவுளின் பணியும்
இணைந்தே உள்ளன. இந்த இரண்டையும் பிரிக்க முடியாதாகையால்
இவற்றில் எதைக் கொள்வது என்ற பிரச்னையே இல்லை.
கிளியைப் போல கடவுள் நாமத்தைத் தி ரு ம்ப த் தி ரு ம்ப ச்
சொல்லிக்கொண்டே இருப்பது பயனற்றது. கடவுளின் பெயராலும்,
கடவுளுக்காகவும் செய்யப்படுகின்றன என்கிற உணர்வு இல்லாமல்
செய்யப்படும் சேவையும் கூட சற்றும் மதிப்பில்லாதது. சில
சமயங்களில் கடவுளின் பெயரை வெறுமனே சொல்லிக்கொண்டே
இருக்க வேண்டியுள்ளது என்றாலும், அது சுய அர்ப்பணத்திற்கு -
அதாவது கடவுளுக்காக, கடவுளின் பெயரால் செய்யப்படும் சேவைக்கு
- ஓர் ஆயத்தமாகும்.
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு
எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது. அன்பு எங்கிருக்கிறதோ,
அங்கே கடவுள் இருக்கிறார்.
வாழ்வில் எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் சத்தியம் தவறக் கூடாது;
சத்திய நெறியில் வாழ்வதே பெருவாழ்வு.
உங்கள் உள்ளே இருக்கும் மனசாட்சி நண்பன் இதைச் செய் என்று
கூறும்போது, பிற நண்பர்கள் கூறுவதைக் கேட்க வேண்டாம்.
மனசாட்சியின் மெல்லிய குரல் எட்டிப் பார்க்கும் இடத்திற்கு,
மனிதர்களின் சாதாரண குரல்கள் எட்டிப் பார்க்காது.
எல்லா நீதிமன்றங்களையும் விட உயர்ந்தது மனசாட்சி எனும்
நீதிமன்றம்தான்.
Share