காந்தியின் நடைப்பயணம்!
காந்தியின் நடைப்பயணம்!
’உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் அரை மணி
நேரம் வாக்கிங் செல்லுங்கள்’ என்கிறார்கள் டாக்டர்கள். நிறைய
பேர் வாக்கிங்கைத் தவிர்ப்பதற்கு ஏதேதோ காரணங்கள் சொல்கிறார்கள்.
ஆனால், மகாத்மா காந்தி தன் வாழ்நாள் முழுக்க நடந்துகொண்டே
இருந்தார்.
நடப்பதில் ஆர்வம் கொண்டவர் அவர். ‘உடற்பயிற்சிகளின் இளவரசன்
நடைபயிற்சி’ என்று அவர் குறிப்பிடுவது வழக்கம். பள்ளிக்காலத்திலிருந்தே
அவருக்கு நீண்ட தூரம் நடப்பது பிடிக்கும். ‘‘தினமும் நீண்ட தூரம்
நடந்ததால் என் உடல் வலுப்பட்டது’’ என்று குறிப்பிடுகிறார். மகாத்மா
சராசரியாக ஒவ்வொரு நாளும் 18 கிலோமீட்டர் தூரம் பயணம்
செய்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற 34
ஆண்டு காலத்தில் சுமார் 79 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறார். இது
கிட்டத்தட்ட பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.
காந்தியின் நண்பரும் எழுத்தாளருமான ரோமன் ரோலண்ட்,
‘‘பார்ப்பதற்கு நோஞ்சான் போலத் தெரியும் இந்த எளிய மனிதர் அலுப்பே
இல்லாமல் நடந்தார். ‘சோர்வு’ என்ற வார்த்தையே அவரது அகராதியில்
இல்லை’’ என காந்தியைப் புகழ்கிறார்.
இவ்வளவு நடந்ததால், நோய்கள் அவரை நெருங்கவில்லை. தன்
ஆசானும் தியாகியுமான கோபால கிருஷ்ண கோகலேவிடம் ஒருமுறை,
‘‘நீங்கள் சுத்தமாக நடப்பதில்லை. அதனால்தான் அடிக்கடி உடம்பு
முடியாமல் படுத்துக் கொள்கிறீர்கள்’’ என்று காந்தி கோபிக்கிறார். அதற்கு
கோகலே, ‘‘பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டதால் நேரமில்லை’’ என்று
பதில் சொல்கிறார். தான் வாழ்ந்த காலத்தில் இந்தியாவிலேயே பிஸியான
மனிதராக இருந்தபோதும், காந்தி நடக்கத் தவறியது இல்லை.
சட்டம் படிப்பதற்காக லண்டன் சென்றபோது, குறைந்த வாடகையில்
அறை எடுத்துத் தங்கியிருந்தார் காந்தி. அங்கிருந்து கல்லூரி நீண்ட தூரம்.
போதுமான பணம் இல்லாததால், தினமும் அரை மணி நேரம் நடந்தே கல்லூரி செல்வார். எட்டு மைல் தூரம் போய் வருவது உடற்பயிற்சியாகவும்
ஆனது; பணமும் மிச்சமானது.
படித்து முடித்து இந்தியா திரும்பி பம்பாய் உயர் நீதிமன்றத்தில்
சிறிது காலம் வழக்கறிஞராக இருந்தபோதும் இதேபோல நடப்பதை
வழக்கமாக்கிக் கொண்டார். முக்கால் மணி நேரம் நடந்தே கோர்ட்டுக்குச்
செல்வார். லண்டன் குளிரில் சளைக்காமல் நடந்தது போல, பம்பாய்
வெயிலிலும் நடந்தார். இதனாலேயே நோய்கள் தாக்காமல் அவர்
உறுதியாக இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா போனபிறகும் இது தொடர்ந்தது. நன்கு சம்பாதிக்க
ஆரம்பித்த பிறகும் அவர் நடப்பதை நிறுத்தவில்லை. அங்கு இந்தியர்களைத்
திரட்டி போராட்டம் நடத்தியபோது, அவர் 35 மைல் நீள சத்தியாக்கிரக
நடைப்பயணத்தையே போராட்ட வடிவம் ஆக்கினார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, போரில்
காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் தன்னார்வலராக காந்தி சேவை
புரிந்தார். அப்போது நோயாளிகளை சுமந்துசெல்லும் ஸ்ட்ரெச்சரைத்
தூக்கிக்கொண்டு நீண்ட தூரம் நடந்திருக்கிறார் அவர். கலவரமும் போரும்
சூழ்ந்த பிரதேசத்துக்கு அவர் நடந்தே செல்வார். யாரும் தன்னைத்
தாக்குவார்கள் என்று அஞ்சியது கிடையாது.
இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்தபோது ஒருமுறை குடலிறக்க
அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அந்த அறுவை சிகிச்சை முடிந்த
சில நாட்களிலேயே மீண்டும் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் போனார் காந்தி. குளிர்
நடுக்கும் அந்த நாட்டிலும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து,
பிரார்த்தனைகளை முடித்துவிட்டு, இன்னும் இருள் விலகாத லண்டன்
வீதிகளில் ஒற்றை வேட்டியுடன் காந்தி நடைப்பயிற்சி செய்தார். ஸ்வெட்டர்
அணிந்து வீதிகளில் வந்த பிரிட்டிஷ் மக்கள், இந்தக் காட்சியைக் கண்டு
திகைத்துவிட்டார்கள்.
இப்படி வாய்ப்பு கிடை க்கும்போதெல்லாம் நீண்ட தூ ர ம்
நடந்ததால்தான், முதுமையிலும் அவர் உடல் தளரவில்லை. புகழ்பெற்ற
தண்டி யாத்திரை சென்றபோது காந்திக்கு 62 வயது. சபர்மதி
ஆசிரமத்திலிருந்து கிளம்பி, சளைக்காமல் 24 நாட்கள் நடந்து, 386
கிலோமீட்டர் பயணத்தை நிறைவு செய்து தண்டி கடற்கரையில் உப்பு
காய்ச்சினார் அவர். பிரிட்டிஷ் சர்வாதிகார ஆட்சியின் அஸ்திவாரத்தை
உலுக்கிய நடைப்பயணம் அது.
Share