காந்தியின் ஆயுதம் வேட்டி!

காந்தியின் ஆயுதம் வேட்டி!

மகாத்மா காந்தி லண்டன் சென்று சட்டம் படித்தபோதும், தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராகத் தொழில் செய்தபோதும், அங்கு வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியபோதும் ஆங்கிலேயர்களைப் போலவே கோட்-சூட் அணிந்திருந்தார். இந்தியா வந்த பிறகு கத்தியவார் பிரதேச குஜராத்திகள் போல உடை உடுத்தினார். அவரை வேட்டிக்கு மாற்றியது தென்னிந்தியா.

          லட்சக்கணக்கான நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேட்டியை வெறும் ஆடையாக மட்டும் பார்க்க முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘கதர் ஆடை’ ஓர் ஆயுதம். ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ எனச் சொல்வார்கள். அப்படி வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட, அந்நிய உடைகளைப் புறக்கணிக்க, தும்பைப்பூ போன்ற வெண்மை நிறக் கதராடைகளைக் கைராட்டையில் நெய்து, நாடே தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. வேட்டியையே மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தின் ஆயுதமாக மாற்றினார்.

          இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது பற்றிய வட்டமேசை மாநாட்டுக்கு வருமாறு காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பிரிட்டன் அரண்மனைக்குப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற முதலாவது மாமனிதர் காந்திதான். பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திப்பதற்கு உடை மற்றும் நடத்தை விதிமுறைகள் உண்டு. ‘மேன்மை மிக்கவர்கள் என வரையறுக்கப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போது, இப்படித்தான் உடை அணிய வேண்டும்’ என்கிற மேற்கத்திய கலாச்சாரத்தை முறித்துப் போட்டவர் காந்தி. லண்டன் கிளம்புவதற்கு முன்பு காந்தியிடம், ‘‘நீங்கள் மாமன்னரைச் சந்திக்கும்போது உடைகளில் மாற்றம் செய்வீர்களா? இந்த உடையில் செல்வது அவரை அவமதிப்பதாக ஆகாதா?’’ என்று கேட்டனர். காந்தி அதற்கு, ‘‘வேறு உடையில் சென்றால், அதுதான் மன்னரை அவமதிப்பதாக ஆகும். ஏனென்றால் அந்த உடைகள் எனக்குப் பொருத்தமற்றவையாக இருக்கும்’’ என்றார்.

          லண்டனில் கப்பலிலிருந்து இறங்கும்போதும் வேட்டியுடனும், மூங்கில் கைத்தடியுடனும்தான் இருந்தார். பிரிட்டிஷ் பிரதமருடனும் வைஸ்ராயுடனும் பேச்சுவார்த்தை நடத்த அரண்மனைக்குள்ளேயே காந்தியடிகள் வேட்டியுடன்தான் நுழைந்தார். இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்திக்கு சூட்டிய பட்டப் பெயர்தான் ‘அரை நிர்வாணப் பக்கிரி’.

          ஆனால், காந்தி கோபம் கொள்ளவில்லை. மன்னருடன் சந்திப்பு முடிந்தபின் காந்தியிடம் ஒரு பத்திரிகையாளர், ‘‘மன்னர் முன் இந்த எளிய உடையில் நிற்பதற்கு உங்களுக்குக் கூச்சமாக இல்லையா?’’ என்று கேட்டார். ‘‘நான் ஏன் கூச்சப்படவேண்டும்? எங்கள் இருவருக்கும் தேவையான அளவு உடையை மன்னரே அணிந்திருந்தாரே’’ என்று சொல்லிச் சிரித்தார் காந்தி.

          தனது உடை மூலமும், பிரிட்டிஷ் மன்னரைப் பார்த்த பிறகு சொன்ன வார்த்தைகள் மூலமும், இந்தியாவின் நிலையை உலகத்துக்கு உணர்த்தினார் காந்தி. கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்ற அவர், இந்தியர்கள் எவ்வளவு ஏழ்மையில் இருக்கிறார்கள் என்பதைத் தனது உடைகள் மூலம் உணர்த்தினார். பிரிட்டிஷ் அரசு இந்தியாவைச் சுரண்டி ஏழ்மையில் தள்ளியதால், இந்தியர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தன் தோற்றத்தில் காட்டினார் காந்தி. ‘தனக்கும் சேர்த்து மன்னர் உடை அணிந்திருக்கிறார்’ என்று சொன்னதன் மூலம், ‘இந்தியர்களின் செல்வத்தைச் சுரண்டியே பிரிட்டன் கொழித்திருக்கிறது’ என்பதை உணர்த்தினார்.   

          தனது உறுதிப்படி வாழ்நாள் முழுக்க வேட்டியில் உலா வந்த காந்தி, 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் செல்லும்போது சுடப்பட்டு இறந்தார். அப்போது அவர் அணிந்திருந்த வேட்டி முழுக்க ரத்தம் தோய்ந்தது. மகாத்மா வேட்டிக்கு மாறிய மண் என்பதன் அடையாளமாக, மதுரை நகரில் இருக்கும் தமுக்கம் அரண்மனை இப்போது காந்தி மியூசியமாகச் செயல்படுகிறது. சுடப்பட்டு இறந்தபோது காந்தி அணிந்திருந்த அந்த ரத்தம் தோய்ந்த வேட்டி, ஒரு மகத்தான பொக்கிஷமாக இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நம் பாரம்பரியத்தை நேசிப்பவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும் வந்து இதைப் பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu