எண்களில் காந்தி!

எண்களில் காந்தி!

1.இந்தியாவில் தெருக்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில் முதலிடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே! நாடு முழுக்க எல்லா பெருநகரங்களிலும் ஒரு முக்கியமான வீதிக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் வீதி உள்ளது.

2. காந்தி பிறந்த தினம். 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் சிற்றூரில் பிறந்தார். காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

3. ‘தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பார்க்காதே’ என வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும்விதமாக வாய்மூடி, காதுகளை அடைத்து, கண்களை மூடிக் காட்சி தரும் 3 குரங்குகள் ‘காந்திஜியின் சிறிய குரங்குகள்’ என அழைக்கப்படும். ‘மூன்று அறிவாளி குரங்குகள்’ என அழைக்கப்படும் இவை ஜப்பானில் புகழ்பெற்றவை. சீனாவிலிருந்து மகாத்மாவைப் பார்க்க வந்திருந்த ஒருவர் இதைப் பரிசாக அளித்தார். பொதுவாக வெளிநாட்டுப் பொருட்களை காந்தி வாங்குவதில்லை. ஆனால் இதை ஆசையாக வாங்கி வைத்திருந்தார்.

4. காந்திஜி & கஸ்தூரிபாய் தம்பதிக்கு நான்கு மகன்கள். ஹரிலால் காந்தி, ராம்தாஸ் காந்தி, மணிலால் காந்தி, தேவ்தாஸ் காந்தி. மூத்த மகன்கள் இருவரும் இந்தியாவிலும், அடுத்த இரு மகன்கள் தென் ஆப்ரிக்காவிலும் பிறந்தார்கள்.

5. நோபல் அமைதி விருதுக்கு 5 முறை காந்தியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. கடைசியாக 1948ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டபோது அவருக்கே நோபல் வழங்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் தரப்படவில்லை. மறைந்தவர்களுக்கு நோபல் விருது வழங்கும் வழக்கம் இல்லை. அந்த ஆண்டில் ‘தகுதியானவர்கள் யாரும் இல்லை’ எனக் கூறி, யாருக்குமே நோபல் அமைதி விருது வழங்கப்படவில்லை. ‘‘காந்திஜிக்கு நோபல் விருது வழங்காமல் விட்டது மாபெரும் வரலாற்றுப் பிழை. நோபல் வழங்காதது காந்திஜியை எந்தவகையிலும் சிறுமைப்படுத்தி விடவில்லை. அவருக்குத் தராததால் இந்த விருது பெருமை இழந்துவிட்டது’’ என நோபல் கமிட்டி செயலாளர் கெயிர் லுண்டஸ்டாட் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்.

6. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் மகாத்மா மொத்தம் 6 ஆண்டுகள், ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் அவருக்கு சிறை வாழ்க்கை பெரும் பிரச்னையாக இருக்கவில்லை. சிறை வாழ்வை படிப்பதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்திக் கொண்டார்.

7. ஒருவரை அழிக்கும் பாவங்கள் என 7 விஷயங்களை காந்தி வலியுறுத்துவார். அவை… உழைக்காமல் சேர்க்கும் செல்வம், மனசாட்சிக்கு விரோதமாகப் பெறும் மகிழ்ச்சி, நற்பண்பு இல்லாத கல்வி, அறநெறி இல்லாத வியாபாரம், மனிதத்தன்மை இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு, கொள்கை இல்லாத அரசியல்.

8. காந்திஜி மறைந்தபோது அவரது இறுதி யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்த இறுதி ஊர்வலம் 8 மைல் தூரத்துக்கு நீண்டிருந்தது.

9. எந்த பிரிட்டனை அகிம்சைப் போராட்டத்தால் வீழ்த்தி சுதந்திரம் பெற்றாரோ, அந்த பிரிட்டன் தலைநகரம் லண்டனில் சமீபத்தில் மகாத்மா காந்தியின் 9 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் பாராளுமன்ற சதுக்கத்தில் இருக்கும் இந்த சிலைக்கு பல பெருமைகள் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இடுப்பில் ஒற்றை வேட்டி அணிந்து காந்தி எந்தக் கோலத்தில் பிரிட்டிஷ் மகாராணியை சந்தித்தாரோ, அதே தோற்றத்தில் அவரது இந்தச் சிலை உள்ளது. எந்த நாட்டுக்கும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இல்லாத ஒரு தலைவருக்கு பாராளுமன்ற சதுக்கத்தில் சிலை வைக்கப்பட்டதும் இதுவே முதல் முறை. ஒரு இந்தியருக்கு வைக்கப்படும் முதல் சிலையும் இதுதான். இந்திய விடுதலைக்காக காந்தி போராடியபோது அவரைக் கடுமையாக விமர்சித்த பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலைக்கு நேர் எதிரில் காந்திஜி சிலை இருப்பது பொருத்தம்.

10. உலகிலேயே மிக அரிதான ஸ்டாம்ப் எனக் கருதப்படுவது, இந்திய அரசு வெளியிட்ட காந்திஜியின் 10 ரூபாய் சர்வீஸ் ஸ்டாம்ப். வெறும் 100 ஸ்டாம்ப்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. உலகிலேயே மிகக் குறைவாக அச்சிடப்பட்ட ஸ்டாம்ப் இதுதான். 1948ம் ஆண்டு இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தின்போது காந்திஜியை கௌரவிப்பதற்காக அவரது அஞ்சல் தலை ஒன்றை வெளியிட மத்திய அரசு முடிவெடுத்தது. 10 ரூபாய் மதிப்பில் இந்த அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, தனது அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்காக என அஞ்சல் தலை கேட்டார். அரசுப் பயன்பாட்டுக்கான அஞ்சல் தலைகளில் ‘சர்வீஸ்’ என்ற வார்த்தை அச்சிடப்படும். இப்படி அச்சிட்டு 100 ஸ்டாம்ப்கள் வெளியாகின. இவற்றில் 50 ஸ்டாம்ப்கள் இன்னும் மியூசியங்களில் பத்திரமாக உள்ளன. இதைத் தவிர தனிநபர்களிடம் 18 ஸ்டாம்ப்கள் உள்ளன. இதில் ஒரு ஸ்டாம்ப் ஐந்து ஆண்டுகளுக்குமுன் 92 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. 10 ரூபாய் ஸ்டாம்ப் இவ்வளவு விலை போகக் காரணம், மகாத்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu