பண மொழிகள்!
வாங்கிவிட முடிகிற அத்தனைப் பொருட்களைவிடவும், பணமே அதிக ஆச்சரியங்கள் தருகிறது.
- மிகோன் மக்லாஹ்லின்
தங்களிடம் இருப்பதை வைத்துச் சிக்கனமாக வாழ்ந்துவிடலாம் எனத் தீர்மானிப்பவர்கள், தங்களது கற்பனைத் திறனை இழந்துவிடுகிறார்கள்.
- ஆஸ்கார் ஒயில்டு
பணம் இல்லாமல் இருக்கும் நிலையே, எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர்.
- பெர்னார்ட் ஷா
பேசுவதற்குமுன் கவனி; எழுதுவதற்குமுன் யோசி; செலவழிப்பதற்குமுன் பணம் சேர்; முதலீடு செய்வதற்குமுன் புலனாய்வு செய்; விமர்சனம் செய்வதற்குமுன் பொறுமை காத்திரு; வழிபடுவதற்குமுன் மன்னித்து விடு; வேலையை விடுவதற்குமுன் முயற்சி செய்துகொள்; ஓய்வுபெறுவதற்குள் சேமித்துக் கொள்; இறப்பதற்குமுன் கொடுத்துவிடு!
- வில்லியம் ஏ.வார்ட்
உங்கள் சந்தேகங்களைக் கணிதத்தைப் பயன்படுத்தி ஊர்ஜிதம் செய்துகொள்வதற்குப் பெயரே, பட்ஜெட்!
- லாட்டிமெர்
மழை பொழியாத நாட்களில் உங்கள் கைகளில் வலிந்து ஒரு குடையைத் திணித்துவிட்டு, மழை நாட்களில் அதைத் திரும்பவும் பிடுங்கிக் கொள்ளும் ஒரு நிறுவனமே வங்கி எனப்படுகிறது!
- ராபர்ட் ஃப்ரோஸ்ட்
சேமிக்கும் ஒவ்வொரு பைசாவும் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவுக்குச் சமம்.
- பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
பணத்தைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, அதை அவர் யாருக்கு அதிகமாகக் கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள்!
- டோரதி பார்க்கர்
உங்கள் இளமைக்காலம் பணம் இல்லாததாக இருக்கலாம்; ஆனால் முதுமையில் அப்படி கண்டிப்பாக இருக்கக் கூடாது.
- டென்னஸி வில்லியம்ஸ்
பணம் என்பது ஆறாம் அறிவு போன்றது... ஆனால் அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளை உங்களால் பயன்படுத்த முடியாது.
- வில்லியம் சோமர்செட் மாஹம்
பணம் உங்களுக்குச் சந்தோஷத்தைத் தராமல் போகலாம். ஆனால் சோகத்தைச் சுகமாக அனுபவிக்க, அது கைகொடுக்கும்.
- ஹெலன் பிரவுன்
பணத்தின் மதிப்பை உண்மையிலேயே நீங்கள் உணர வேண்டுமானால், எங்காவது போய்க் கொஞ்சம் கடன் வாங்க முயற்சி செய்து பாருங்கள்.
- பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
‘பணம் உங்களுக்குச் சந்தோஷத்தை வாங்கித் தராது’ என்று சொல்பவர்கள், அதை எங்கே போய் வாங்குவது என்ற உண்மை புரியாதவர்கள்.
- கேத்தி லெட்டி
எல்லாத் தேசத்து மக்களும் புரிந்துகொள்ள முடிகிற ஒரு மொழியில்தான் பணம் பேசுகிறது.
- ஆஃப்ரா பென்
பணத்தைச் சம்பாதிப்பதற்கு முன்பாக, அதைச் செலவு செய்ய கற்றுக்கொள்ளாதீர்கள்.
- தாமஸ் ஜெஃபர்ஸன்
அறிவில்லாதவர்களிடம் சேரும் பணம் ஆபத்தானதாக மாறிவிடுகிறது.
- நெப்போலியன் ஹில்
மனைவியின் சகோதரி கணவனைவிட ஆயிரம் ரூபாயாவது அதிகம் சம்பாதிப்பதே, இந்தத் தேசத்தில் ‘வசதி’ என அடையாளப்படுத்தப்படுகிறது.
- மென்கென்
எப்போதுமே ஒரே ஒரு வருமானத்தை நம்பி இருக்காதீர்கள். உங்கள் பணத்தைப் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்; அது உங்களுக்கு இரண்டாவது வருமானம் தரும்.
- வாரன் பஃபட்
பணத்தைச் சம்பாதிப்பதும், பணத்தால் வாங்க முடிகிற பொருட்களைச் சேர்ப்பது முக்கியமானதுதான். ஆனால் இந்த ஓட்டத்தில், பணத்தால் வாங்கமுடியாத அரிதான விஷயங்களை இழந்துவிடுகிறோமா என அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.
- ஜார்ஜ் லாரிமெர்