’உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் அரை மணிநேரம் வாக்கிங் செல்லுங்கள்’ என்கிறார்கள் டாக்டர்கள். நிறையபேர் வாக்கிங்கைத் தவிர்ப்பதற்கு ஏதேதோ காரணங்கள் சொல்கிறார்கள்.ஆனால், மகாத்மா காந்தி தன் வாழ்நாள் முழுக்க நடந்துகொண்டேஇருந்தார். நடப்பதில் ஆர்வம் கொண்டவர் அவர். ‘உடற்பயிற்சிகளின் இளவரசன்நடைபயிற்சி’ என்று அவர் குறிப்பிடுவது வழக்கம். பள்ளிக்காலத்திலிருந்தேஅவருக்கு நீண்ட தூரம் நடப்பது பிடிக்கும். ‘‘தினமும் நீண்ட தூரம்நடந்ததால் என் உடல் வலுப்பட்டது’’ என்று குறிப்பிடுகிறார். மகாத்மாசராசரியாக ஒவ்வொரு நாளும் 18 கிலோமீட்டர் தூரம் பயணம்செய்திருக்கிறார். இந்திய சுதந்திரப் […]
பிரார்த்தனை, பக்தி, நம்பிக்கை, மனசாட்சி பற்றி மகாத்மா காந்தி சொன்னசில பொன்மொழிகள் இங்கே: பிரார்த்தனை அல்லது இறை வணக்கம் என்பது, வீட்டில் உள்ளபாட்டியின் பொழுதுபோக்கல்ல. சரியாகச் செய்தால் மிகச் சிறந்தஆயுதம் அது. ஒருவனுக்கு எந்த அளவுக்கு உள்ளொளி இருக்கிறதோ அந்தஅளவுக்குத்தான் பிரார்த்தனை அவனிடம் இருக்கும். எவனொருவன் தினமும் இறை வணக்கத்தில் ஈடுபடுகிறானோ அவன்தினம் தினம் புதியதைச் சேர்க்கிறான். அந்தப் புதிய விஷயங்களைஎதனுடனும் ஒப்பிட முடியாது. மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செயல் எதுவாக இருக்கும்என்றால், அது தலைவணங்கிச் […]
காந்தியின் இளம் வயது நண்பர் ஒருவர், சுருட்டு பிடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. பிரிட்டிஷ்காரர்களைப் பார்த்து, ‘சுருட்டு பிடிப்பதே நாகரிகம்’ என்ற நினைப்பு அப்போது இந்தியாவில் வசித்த மேல்தட்டு மக்களுக்கு இருந்தது. காந்தியும் தன்னை நாகரிக இளைஞனாக காட்டிக் கொள்ள முயன்றார். கூடவே அசைவ உணவும் பழகினார்.இதனால் காந்தியின் செலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. கடைகளிலும் நண்பர்களிடமும் கடன் வாங்கினார். கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று […]
நண்பர்களை நேசிப்பது சுலபம்; உறவினர்கள் மீது அன்பு காட்டுவது அதைவிட எளிது. எதிரிகளை நேசிக்க முடியுமா? ஒரு வழக்கறிஞராக தென் ஆப்ரிக்கா போன காந்தியை அந்த மண் மகத்தான மகாத்மாவாக திருப்பி அனுப்பியது. ‘எதிரியை நேசிப்பது எப்படி’ என்பதை அங்கு காந்தி கற்றுக்கொண்டார். நமக்கும் கற்றுத் தருகிறார். தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களின் சம உரிமைக்காக பெரும் போராட்டங்கள் நடத்தினார் காந்தி. அதனால் அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த வெள்ளையர்களின் தாக்குதலுக்கு அவர் அடிக்கடி ஆளாவதுண்டு. அப்படி ஒருமுறை அவர் […]
காந்தி ஒற்றை வார்த்தை சொன்னாலும், அதை மந்திரமாக ஏற்று மக்கள் பின்பற்றினார்கள். தன் பேச்சால் இந்தியாவையே கட்டிப் போட்ட காந்தி, இளம் வயதில் கூச்ச சுபாவத்துடன் பேசவே தயங்கும் இளைஞராக இருந்தார் என்பது ஆச்சரியம்.லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். முதல் வழக்குக்காக நீதிமன்றத்தில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. நாக்கு குழறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர், அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டார். ஆனால் தென் ஆப்ரிக்கா சென்றபிறகு அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக […]
உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் நமது தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. உலக நாடுகளில் காந்திஜிக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை சுமார் 300. இந்தியாவில் காந்திஜிக்கு முதல் அஞ்சல் தலை அவரது 80வது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 4 தபால் தலைகளுக்கான வடிவமைப்புப் பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக தனது […]
வெறும் நூலால் மட்டும் ஒரு நாட்டின் உடைகள் நெய்யப்படுவதில்லை. அந்த நிலப்பரப்பின் பொருளாதாரம், தட்பவெப்பநிலை, அந்தச் சமூகத்தின் பண்பாடு என பல விஷயங்களை ஆதரமாகக் கொண்டு ஆடைகள் உருவாகின்றன. எலும்பை உறைய வைக்கும் குளிர் இருக்கிற அன்டார்க்டிகா கண்டத்தில் மெல்லிய உடை உடுத்துவது பொருத்தமற்றது. அங்கு உடலுக்கு கதகதப்பைத் தருகிற ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அடிக்கிற நம் நாட்டில், கோட் சூட் போட்டுக் கொள்வதுதான் பொருத்தமற்றது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டுக்கு […]
இந்திய சுதந்திரம் குறித்து பேசும் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, நடுக்கும் குளிரில் பிரிட்டன் தலைநகரம் லண்டனுக்கு ஒற்றை வேட்டியை கம்பீரமாக அணிந்தபடி சென்றார் மகாத்மா காந்தி. பிரிட்டிஷ் மகாராணியையும் மன்னரையும் சந்தித்துப் பேசிவிட்டு பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியில் வந்த காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்… ‘‘மன்னர் அணிந்திருந்த ஆடம்பரமான உடைகளைப் பார்த்ததும், குறைவாக உடுத்தியிருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றியதா?’’காந்தி சிரித்தபடியே சொன்னார்… ‘‘எங்கள் இரண்டு பேருக்கும் போதுமான அளவு உடையை அவர் அணிந்திருந்தார்!’’ அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் […]
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளாக உணவும், உடையும் வரையறை செய்யப்பட்டுள்ளன. உணவு இல்லாமல் கூட ஓரிரு வேளைகள் இருந்து விடலாம். ஆனால் மானம் காக்கும் உடை அத்தியாவசியம். தென்னையிலும், பனையிலும் நார் எடுத்து பெட்டிகளையும் வலைகளையும் செய்யக் கற்றுக் கொண்ட நம் நாட்டினர், அதன் தொடர்ச்சியாக பருத்தியிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கவும், அந்தப் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் கற்றார்கள். ஆடை நாகரிகத்தில் மாபெரும் புரட்சியான இது, இந்தியாவில்தான் நிகழ்ந்தது என்பது நமக்கெல்லாம் பெருமை. வெகு விரைவிலேயே நுண்மையும் மென்மையும் மிக்க […]