ஒரு நிமிடம் தாமதமாக வருவதைவிட, மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவதில் தவறில்லை.
ஒருவருக்குத் தன்னம்பிக்கை கொடுப்பதைக் காட்டிலும், ஒரு பேருதவியை நீங்கள் அவருக்குச் செய்துவிட முடியாது.
கையில் ஒன்றும் இல்லாதபோது தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது தன்னடக்கமும் இருந்தால், வாழ்வு நம் வசமே!
சரியான முடிவுகள் நம்முடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன, தவறான முடிவுகள் நம்முடைய அனுபவத்தை அதிகப்படுத்துகின்றன!
சலித்துக் கொள்பவர்கள், ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கிற ஆபத்துகள் என்னவென்று பார்க்கிறார்கள். சாதிக்க நினைப்பவர்கள், ஒவ்வொரு ஆபத்திலும் வெற்றிக்கான வாய்ப்பைத் தேடுகிறார்கள்.
நம்பிக்கைவாதி ரோஜாவைப் பார்க்கிறான்; முட்களை அல்ல. அவநம்பிக்கையாளன் முட்களைப் பார்க்கிறான்; ரோஜாவை அல்ல!
பாதி மூடியிருக்கும் கதவை ‘பாதிக் கதவு திறந்திருக்கிறது’ என்பவனே தன்னம்பிக்கையாளன்!
கடவுள் நம்பிக்கை இல்லாதவனைக்கூட தன்னம்பிக்கை காப்பாற்றி விடலாம்; தன்னம்பிக்கை இல்லாதவனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!
வெற்றி என்பது நமக்கு மிக சமீபமாகத்தான் இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் கை குலுக்க நாம்தான் தயங்கி நிற்கிறோம்!