வணக்கம். ‘திட்டமிடத் தவறுகிறவன், தவறு செய்யத் திட்டமிடுகிறான்’ என ஒரு பொன்மொழி இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வாசகம் இது. குடும்பத்தைச் சரியாகத் திட்டமிட்டு நிர்வாகம் செய்யாது போனால், அச்சாணி கழன்ற வண்டி போலக் குடும்பம் ஒரு சூழலில் திடீரெனக் குடை சாய்ந்துவிடும். இருப்பதை வைத்துப் போடுவதற்குப் பெயர்தான் பட்ஜெட். பறப்பதற்கெல்லாம் ஆசைப்பட ஆரம்பித்தால், மாயமானுக்கு ஆசைப்பட்டு சீதை சந்தித்தது போன்ற துயரங்களே கிடைக்கும். கிராமத்துப் பக்கம் இப்போதும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது, ‘மாப்பிள்ளைக்கு […]
ஒருவன் விலையுயர்ந்த காரில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கார் மீது ஒரு செங்கல் விழுந்தது. கோபத்துடன் சட்டென்று காரை நிறுத்திவிட்டு, செங்கல் வந்த திசையை நோக்கிச் சென்றான். அங்கே ஒரு சிறுவன் தயங்கியபடி இவனைப் பார்த்தான். ‘‘சார்! தப்பா நினைச்சிக்காதீங்க. இவன் என் அண்ணன். நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இந்த நடைப்பாதை சறுக்கில் சக்கர நாற்காலி இறங்கும்போது அவன் நிலைதடுமாறி விழுந்துவிட்டான். என்னால் அவனைத் தூக்க முடியவில்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் யாரும் […]
ஒரு வழிப்போக்கன் அந்தக் கிராமத்துக்கு வந்தான். அங்கே அருமையான விவசாய நிலம் இருந்தது. நிலத்தின் சொந்தக்காரன் வீடும் அருகிலேயே இருந்தது. வழிப்போக்கன் போய், தண்ணீர் கேட்டபடி பேச்சு கொடுத்தான். ‘‘அருமையான நிலம் வைத்திருக்கிறீர்களே, நெல் பயிரிடுவீர்களோ?’’ ‘‘இல்லை, மழை பெய்யாவிட்டால் நெல் வாடி விடும். அதனால் நெல் பயிரிடுவதாக இல்லை!’’ ‘‘அப்படியானால் பருத்தி பயிரிடுவீர்களா?’’ ‘‘பருத்தியைப் பூச்சிகள் தாக்கி அழித்துவிட்டால் என்ன செய்வது? அதனால் அதையும் செய்வதாக இல்லை.’’ ‘‘காய்கறிகளாவது பயிரிடலாமே?’’ ‘‘அவை சீக்கிரம் அழுகிவிடும். நல்ல விலையும் கிடைக்காது. அதனால் அந்த எண்ணம் இல்லை.’’ ‘‘உங்கள் வாழ்க்கையில் தினம் தினம் பசியை அனுபவித்து வருகிறீர்களா?’’ வழிபோக்கன் கேட்டான். ‘‘எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?’’ - விவசாயி ஆச்சரியப்பட்டான். ‘‘பாதுகாப்பாக கப்பல் ஓட்டவே முடியாது; கரையில் நின்றால் சம்பாதிக்கவும் முடியாது. பாதுகாப்பாக பயிரிடவும் முடியாது; பயிரிடப் பயந்தால் சோறு உண்ணமுடியாது’’ என்று சொல்லி விடைபெற்றான் வழிப்போக்கன்.
பிறக்கும்போது எல்லோருமே நல்லவர்கள்தான். இளம் வயதில் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தான் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து ஒருவரைச் செதுக்குகின்றன. அந்தச் சம்பவங்களில் கற்றுக்கொள்ளும் பாடங்கள்தான் வாழ்வின் போக்கை நிர்ணயிக்கின்றன. ஒருவர் சாதனையாளர் ஆவதும், சோர்ந்து ஒதுங்குவதும், அரிதாகச் சிலர் மகத்தான மனிதர்கள் ஆவதும் இந்தச் சம்பவங்களின் தாக்கத்தால் நிகழ்வதே! எல்லோரையும் போல மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகப் பிறந்தவரை, நம் தேசமே தந்தையாகக் கருதும் ‘மகாத்மா’ ஆக்கிய சம்பவங்கள் பல. அவற்றில் ஒன்று பற்றி அவரே விவரிக்கிறார்... […]
அரசர் ஓவியப் போட்டி நடத்தினார். போட்டியின் தலைப்பு, ‘அமைதி’. எந்த ஓவியம் பார்ப்பவர் மனதில் அமைதியை ஏற்படுத்துகிறதோ அதுவே முதல் பரிசு பெறும் என்று அறிவித்தார். நாட்டின் பல ஓவியர்கள் கலந்துகொண்டு தங்கள் அறிவையும் திறமையையும் கலந்து வரைந்தார்கள். அமைதியான நதி, இயற்கை எழில் கொஞ்சும் காட்சி, நிம்மதியாகத் தூங்கும் குழந்தை... இப்படிப் பலரும் வரைந்த பலவிதமான ஓவியங்களை அரசர் பார்த்தார். முடிவில் ஓர் ஓவியத்துக்குப் பரிசை அறிவித்தார். பலருக்கும் அதைப் பார்த்து ஆச்சரியம். […]
ஒரு வர்மக்கலை வல்லுநரிடம் வர்மம் கற்றுக்கொள்ள ஒருவன் விரும்பினான். மிக வேகமாக அக்கலையைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான். ‘‘ஐயா, இக்கலையைக் கற்றுக்கொள்ள முழுமையாக எத்தனை வருடங்கள் ஆகும்?” “பத்து வருடங்கள் ஆகும்” ‘‘நான் வார இறுதியில் ஓய்வு எதுவும் எடுக்காமல் பயிற்சி செய்து கற்றுக்கொண்டால் எவ்வளவு காலம் ஆகும்?” “இருபது வருடங்கள்.” ‘‘உணவு உண்ணும் நேரத்தைத் தவிர அனைத்து நேரத்திலும் உழைத்துக் கற்றால்?” ‘‘அப்போது முப்பது வருடங்கள் ஆகும்” […]
அவர், மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர். உறவினர் கல்யாணத்துக்கு வந்திருந்தார். கண்டக்டராக வேலைபார்த்து ரிட்டயர் ஆன, தன் வயதான அப்பாவிடம், அந்தக் கல்யாண வீட்டில், ‘‘அப்பா! 500 ரூபா இருந்தா கொடுங்க. என்கிட்ட இப்ப இல்ல’’ என்று கேட்கிறார். அப்பா உடனே, ‘‘இந்தாப்பா’’ என்று தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுக்கிறார். ‘‘ஏன்பா தாத்தா கிட்ட பணம் கேக்கறீங்க? உங்ககிட்ட இருக்குதானே’’ என்கிறாள் மகள். ‘‘இருக்கலாம். ஆனா, இப்படி அப்பாகிட்ட […]
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பிரிட்டிஷ்காரர்களை அச்சமின்றி எதிர்த்தவர் மகாத்மா. ஆனால், சிறுவனாக இருந்தபோது காந்திக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் நிறைய. இருட்டைக் கண்டாலே நடுங்குவார். இருட்டில் கண்களை மூடினால் பிசாசுகள் வந்து சூழ்ந்து கொள்வதாகவும் நினைத்து நடுங்குவார். காந்திக்கு தாய் புட்லி பாயின் பக்தியும் தெய்வ நம்பிக்கையும் கண்டு வியப்பு ஏற்பட்டது. தாயோடு அவர் கோயில்களுக்குச் செல்வதுண்டு. ஆனால் அவரின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவர், அவரது […]
வணக்கம். போக வேண்டிய இடத்திற்கு அவசர அவசரமாக ஓடுவதைவிட, நேரத்தில் கிளம்புவதே சரியானது. ஒரு காரியத்தைப் பதறாமல் செய்ய வேண்டுமானால், சரியான நேரத்தில் அந்தக் காரியம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வளவு விலைகொடுத்தாலும் கடந்துபோன ஒரு நொடியைக்கூட வாங்க முடியாது என்பதுதான் காலத்தின் தனித்தன்மை. அது யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை! ஓர் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நிற்கும்போது, ‘இந்த வருடம் நாம் என்ன செய்தோம்’ என யோசித்துப் பார்ப்போம். ‘இன்னும் உருப்படியாக நிறைய விஷயங்களைச் செய்திருக்கலாமே’ […]
வணக்கம். வேட்டிக்கு ஒரு பிராண்ட் பெயர் வைத்து, நம் பாரம்பரிய உடையான வேட்டியை மதிப்பிற்குரியவர்களின் ஆடையாக மாற்றிய பெருமை கொண்டது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். நற்சிந்தனைகளை நம் மக்களிடம் கொண்டு செல்வதற்காக ‘வெண்மை எண்ணங்கள்’ என்ற மாத இதழை 2012 நவம்பரில் ராம்ராஜ் காட்டன் தொடங்கியது. லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘வெண்மை எண்ணங்கள்’. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சந்தா செலுத்தி இந்த இதழைப் படிக்கின்றன. ராம்ராஜ் ஷோரூம்களில் ஆடைகள் வாங்க வருவோருக்கு அன்புப்பரிசாகவும் இந்த […]