ஒருமுறை நாரதர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது. நாரதரின் ‘‘நாராயண...’’ நாமத்தைக் கேட்டதும் அந்த யோகி கண்விழித்துப் பார்த்தார். ‘‘நாரத பகவானே, எங்கு சென்று கொண்டிருக்கிறீர்?’’ என்றார். ‘‘நான் கைலாயம் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்றார் நாரதர். ‘‘அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நான் நீண்ட காலமாக சிவபெருமானை தரிசிப்பதற்காக தவம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தவம் […]
டென்ஷனைத் துரத்துங்கள்! ‘முகம் என்பது மனதின் கண்ணாடி’ என்பார்கள். காலை நேரத்தில் பரபரப்பாக அலுவலகத்துக்கு ஓடும் பலரது மனக் கண்ணாடிகளை சற்றே நெருங்கி உற்றுக் கவனியுங்கள். அந்த முகங்களில் முழுக்கவே டென்ஷன் மண்டிக் கிடப்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சில முகங்கள் எண்ணெய் சட்டி போல தகிக்கும். கடுகு போட்டால் பொரிந்து தூரத்தில் போய் விழும். சில முகங்களில் அயர்ன் பாக்ஸ் போல ஆவி பறக்கும். தடிமனான படுக்கை விரிப்பைக்கூட நேர்த்தியாக அயர்ன் செய்து விடலாம். வேறு சில […]
பாதி மூடியிருக்கும் கதவை ‘பாதிக் கதவு திறந்திருக்கிறது’ என்பவனே தன்னம்பிக்கையாளன்!
கடவுள் நம்பிக்கை இல்லாதவனைக்கூட தன்னம்பிக்கை காப்பாற்றி விடலாம்; தன்னம்பிக்கை இல்லாதவனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!
அப்பா, அம்மா, மகன், மகள் நால்வரும் காரில் வெளியூர் சென்றார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி போகும்போது கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்கு பஞ்சர் ஒட்டத்தெரியும். அவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். குழந்தைகளான மகனும் மகளும் அக்கறையுடன் அப்பாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் அப்பா தங்களுக்காக அப்படி சிரமப்படுவதில் உள்ள கவலை தெரிந்தது. ஆனால் அம்மாவோ அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து, பென்சிலும் கையுமாக குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த […]
வெற்றி என்பது நமக்கு மிக சமீபமாகத்தான் இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் கை குலுக்க நாம்தான் தயங்கி நிற்கிறோம்!
கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும் முயற்சியில் இருந்தது அந்தப் பட்டாம்பூச்சி. கூட்டின் ஓடு லேசாக விரிசல் அடைய, அந்த ஓட்டினை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப் போராடிக் கொண்டிருந்தது அது. அக்கறையோடு அதைப் பார்த்தான் ஒரு சிறுவன். அது நீண்ட போராட்டம் என்பதை அவன் அறியவில்லை. பட்டாம்பூச்சி கூட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லேசாக உடைத்துவிட்டான். அதன் வழியே வெளியில் வந்த பட்டாம்பூச்சி, சிறிது நேரம் பறக்கப் போராடிவிட்டு இறந்து போகிறது. சிறுவன் […]
பள்ளி மாணவன் தனியே வீட்டில் இருந்தான். அப்பா அலுவலகத்துக்குச் சென்றிருந்தார். அம்மா காய்கறி வாங்க மார்க்கெட் சென்றிருந்தார். அவன் குளித்து விட்டு பீரோவைத் திறந்து நல்ல நீலநிற சட்டை ஒன்றை எடுத்தான். அந்த சட்டையோ அவன் கையில் சிக்காமல் துள்ளிக் குதித்து கட்டிலில் விழுந்தது. மறுபடியும் எடுக்கப் போனான். அப்போது கட்டிலில் இருந்து சட்டை எழுந்து ஹாலில் உள்ள சோபாவுக்குச் சென்றது. ‘சட்டை ஓடுகிறதே’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது சட்டை அவனைத் திரும்பிப் பார்த்ததுப் பேசியது. […]