அனுபவத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறவர்கள், எப்போதுமே நேரத்தை விரயம் செய்வதில்லை. -ரோடின்
விமான நிலையத்தில் காத்திருந்தாள் அவள். விமானத்தில் ஏறத் தாமதம் ஆகும் என்பது தெரிந்ததும் ஒரு புத்தகமும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தாள். பக்கத்து நாற்காலியில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்து, அவனும் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே கைப்பிடியில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து அவள் ஒரு பிஸ்கெட்டை எடுத்தாள். அவனும் ஒன்று எடுத்தான். உடனே அவளுக்குக் கோபம் வந்தது. ‘என்ன தைரியம் இருந்தால் நான் வாங்கி வைத்திருக்கும் பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுப்பான்? வேறு இடமாக […]
எந்த சூழலிலும் உண்மை பேசுவதும், பெரியோரையும் பெற்றோரையும் மதித்து அன்பு செலுத்துவதும் மகாத்மா கற்றுத் தந்த அடிப்படைப் பாடங்கள். பள்ளி வயதிலேயே இதையெல்லாம் அவர் கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். தன் வாழ்க்கை வரலாறான ‘சத்திய சோதனை’ நூலில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் தங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்கள் எதையேனும் படித்தால் பல பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்படிப் படிக்க விடாமல் தடுக்கின்றனர். நல்ல கருத்துகளைச் சொல்லும் காட்சிகளையும் குழந்தைகள் பார்க்க […]
அரசாங்கம் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் போட்டு செலவழிப்பதைப் போலவே நாமும் வீட்டில் மாதா மாதம் பட்ஜெட் போட்டுச் செலவுகளைக் கண்காணிப்பது அவசியம். அரசாங்கம் போடும் பட்ஜெட்டைப் பார்க்கும்போது எது அவசியம், எது அநாவசியம் என நமக்குத் தெரிகிறது. நாம் அதை விமர்சனமும் செய்கிறோம். வீட்டு பட்ஜெட்டிலும் இதை நாம் பார்க்க வேண்டாமா?
நேரம் என்ற பள்ளியில்தான் நாம் எல்லோரும் படிக்கிறோம்; நேரம் என்ற நெருப்பில்தான் நாம் எல்லோரும் எரிகிறோம். -டெல்மோர் ஷ்வார்ட்ஸ்
ஒரு நிமிடம் தாமதமாக வருவதைவிட, மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவதில் தவறில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியர்
தூக்கம் உடலுக்கு மிக அவசியம். உடலுக்கும் மனதிற்கும் முழுமையான ஓய்வைத் தரும் ஒரு உன்னதமான விஷயம்தான் தூக்கம். தினமும் 3 வேளை உணவும், குறைந்தபட்சம்
6 மணி நேரத் தூக்கமும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.